மளிகை வியாபாரி ஒருவரும், தங்க வியாபாரி ஒருவரும் அடுத்தடுத்து கடை வைத்திருந்தனர். மளிகை வியாபாரிக்கு தங்கநகைக் கடையின் மீது ஒரு கண். எப்படியாவது, அங்கிருக்கும் நகைகளைத் திருடி விற்று பெரும் பணக்காரனாகி விட வேண்டுமென்று! ஒருநாள், நகை வியாபாரி தன் கடையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி பொறுப்பை மளிகை வியாபாரியிடம் ஒப்படைத்து விட்டு திருத்தல யாத்திரை கிளம்பி விட்டார். மளிகை வியாபாரி கள்ளச்சாவி போட்டு கடையைத் திறந்து நகைகளைத் திருடி விற்று விட்டார். நகை வியாபாரி வந்தார். கடையைத் திறந்தார். ஒன்றுமே இல்லை. மளிகைக்காரரிடம் கேட்டார்.
""உம்! நகையை எலி தின்றிருக்கும்'' என்று சமாளித்து விட்டார். நகைக்கடைக்காரர் பஞ்சாயத்திற்கு போய்விட்டார். பஞ்சாயத்தார் விசாரித்தனர். மளிகைக் கடைக்காரர் சொல்வதை நம்புவதைப் போல் நடித்த நாட்டாமை, ""சரிதான்! நகையை எலி தின்றிருக்கும். வழக்கு முடிந்தது,'' என அனுப்பி விட்டார். கொஞ்சநாள் கழித்தது. திரும்பவும் குடும்பத்துடன் யாத்திரை கிளம்பினார் நகை வியாபாரி. தன்னுடன் யாத்திரை வரும்படி மளிகைக்கடைக்காரரையும் அழைத்தார். அவர் மறுத்துவிட்டார். அவரது ஐந்து வயது மகனையாவது அனுப்பி வைக்க வேண்டினார். அவர் ரொம்பவும் வற்புறுத்தியதால், மகனை மளிகைக் கடைக்காரர் அனுப்பி வைத்தார். யாத்திரை முடிந்து நகைக்கடைக்காரர் குடும்பம் ஊர் திரும்பியது. மளிகை வியாபாரியின் மகன் மட்டும் வரவில்லை.பதறிப்போய் "மகனை எங்கே?' என்று கேட்டார். ""உம்! காக்கா தூக்கிக் கொண்டு போய்விட்டது. விரட்டிப்பிடிக்கப் பார்த்தேன். அது எங்கேயோ போய் விட்டது'' என நகை வியாபாரி வருத்தப்படுவது போல நடித்தார்.
இம்முறை மளிகை வியாபாரி பஞ்சாயத்துக்குப் போனார். நாட்டாமை விசாரித்தார்.
""நகைக்கடைக்காரர் சொல்வது சரிதானே! அவரது நகையை எலி தின்னுமென்றால், சின்னப்பையனைக் காக்காவால் தூக்கிச் செல்ல முடியாதா!''என்றார்.
மளிகைக்காரருக்கு இப்போது தான் புத்தி வந்தது. பஞ்சாயத்தார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நகை விற்ற பணத்தை திருப்பிக் கொடுத்தார். நகை வியாபாரியும் தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த சிறுவனை மளிகை வியாபாரியிடம் ஒப்படைத்தார். நம்பியவர்களை ஏமாற்றினால் இப்படித்தான் ஆகும்...புரிகிறதா!

100% correct.
ReplyDelete