தெய்வம் ஒன்றே என்பதுதான் இந்து சமயத்தின் ஆணி வேரான கொள்கை. ஆனால் அறிவுமயக்கம் உள்ள மானிடர்களின் மனநிறைவுக்காக "ஏகன்' ஆகிய அந்த நாயகன் "அநேகனாக' உருவம் கொள்கிறான். அப்படிப் பல உருவம் பெறும்போது பற்பல நாமங்களும்அமைந்துவிடுகின்றன.
கண்ணால் காண்பது காட்சி. காதால் கேட்பது கேள்வியறிவு. கண்ணால் கண்டதுமனதில் பதிவது அரிது. ஏனெனில் காட்சி என்பது நொடியில் தோன்றி மறைவதுண்டு.ஆனால் செவியால் கேட்பதைப் பலமுறை கேட்கும் வாய்ப்புண்டு. ஆகவே கேட்பதுமனதில் நன்கு பதியும். இலக்கணம் வகுத்த தொல்காப்பியரும் "செவி வாயாகநெஞ்சு களனாக' என்று உருவகம் செய்துள்ளார். திருவள்ளுவரும் செவியால்பெறும் அறிவை "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்' என்று போற்றியுள்ளார்.
இறைவனின் திருவுருவத்தைக் காண்பது காட்சி. அதைவிட அவன் திருநாமத்தைக்கேட்பது உள்ளத்தில் நிலைபெறும் தன்மை மிகுதியுடையது. எனவே எண்ணில் கோடித்திருநாமங்களை உடையவனாகிறான் இறைவன். ஆகவே அவன் திருக்காட்சியைவிடதிருநாமமே சிறப்புடையது; பெருமை மிக்கது!
இறைவனது திருவடி சிறப்புடையது. அந்தத் திருவடியைவிட திருநாமம் சிறப்புமிக்கது. அவனது திருநாம சிந்தனையில் மூழ்கி யிருப்பவர்களையே அடியார்கள்,ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்கிறோம்.
உயிரினங்களின் வாழ்நாள் முடிந்ததும் உயிர் கவரும் கடமை மிக முக்கியமானதர்மம். இந்த தர்மத்தை நிறைவேற்றும் தேவனே தர்மதேவன்- காலன் என்னும்காலதேவன்- யமதர்மன்.
இராமாயணத்தில் இராமனை அறத்தின் நாயகன் என்கிறான் கம்பன். அத்தகைய அறத்தின் நாயகனைவிட அவனது திருநாமத்திற்கு எத்தகைய வலிமையுண்டு? அதைச்சொல்வதில் சிறப்புடையவர் யார் என்பதையெல்லாம் நன்கு கேள்விப்பட்டிருந்தான்யமதர்மன்.
குரல் இனிமையைக் குயிலிடம் கேட்க வேண்டும்; மழலை மொழி இன்பத்தை கிளி யிடம்கேட்க வேண்டும். இப்படி எதை எதை யார் யாரிடம் கேட்க வேண்டும் என்று உண்டு.
அப்படி இராம நாமத்தை யார் சொல்லிக் கேட்க வேண்டும் தெரியுமா? அனுமன்சொல்லிக் கேட்க வேண்டும். இராம நாமத்தைச் சொல்வதாலேயே அவனுக்குத் தனிப்பெரும் வலிமை இருந்தது. ஆனால் அது அவனுக்கே தெரியாது. அது மட்டுமல்ல;இராமருக்கேகூட தனது நாமத்தின் வலிமை தெரியாது.
சேது அணை கட்டப் படுவதை இராமர் பார்வை யிடுகிறார். பெரிய பெரிய பாறைகளைக்குரங்குகள் ஒவ்வொன்றாய் தூக்கிச் சென்று கடலில் போடுகின்றன. சிறுகுன்றுகளையும் கூடப் போடுகின்றன. அவை கடலில் மூழ்காமல் மிதக்கின்றன. அதைப்பார்த்து இராமர் வியப்படைகிறார்.
நாமும்தான் நம்மால் முடிந்த அளவு கற்களைத் தூக்கிப் போடுவோமே என்று எண்ணியஇராமர், சில சிறு கற்களைப் போட்டார். அவை நீரில் மூழ்கிவிட்டன. சிரமப்பட்டு இரண்டு பெரிய கற்களைப் போட்டார். அவையும் மூழ்கிவிட்டன. உடனேஅருகிலிருந்த ஜாம்பவானிடம், ""அனுமன் கொடுத்தனுப் பும் குன்றுகள்கூடகடலில் மிதக்கின்றன. ஆனால், நான் போட்டால் சிறு கல்லும் மூழ்கி விடுகிறதே!ஏன்?'' என்றார்.
ஜாம்பவான் அங்கு கல் சுமந்து வந்த குரங் கிடமிருந்து ஒரு கல்லை வாங்கிஇராமரிடம் கொடுத்து, அதைக் கடலில் போடுமாறு சொன்னார். இராமரும் அவ்வாறேபோட்டார். அந்தக் கல் மிதந்தது.
""இது எப்படி?'' என்றார் இராமன்.
உடனே ஜாம்பவான் அனுமன் கொடுத்த னுப்பும் கல் ஒன்றை வாங்கி அதனை இராமரி டம்காட்டி, ""இதோ பார்த்தீர்களா! இந்தக் கற்கள் ஒவ்வொன்றின்மீதும் அனுமன்தங்கள் திருநாமத்தை எழுதி அனுப்புகிறான். அதனால் தான் அவை மிதக்கின்றன''என்றான்.
"தன் பெயருக்கு இத்தனை வலிமையுள்ளதா' என்று வியந்து நின்றார் ஸ்ரீராமன்.
இராமன் முதன் முதலாக அனுமனைச் சந்தித்தபோது அவனது பேச்சுத் திறத்தில்மகிழ்ந்தார். அப்பொழுதே அவனுக்கு "சொல்லின் செல்வன்' என்று பட்டம்கொடுத்தார்.
எனவே இராம நாமத்தைச் சொல்வதே சிறப்பு. அதுவும் அனுமன் வாயாலே சொல்லக்கேட்பது மிகமிகச் சிறப்புடையது. இப்பொழுது அனுமன் வாயால் இராம நாமத்தைச்சொல்லிக் கேட்க வேண்டும் என்று ஆசை உண்டானது யமதர்மனுக்கு.
அனுமனோ சிரஞ்சீவி. எனவே அவனை எப்பொழுதுமே யம லோகத்துக்குக் கொண்டு வரமுடியாது. யமன் அனுமனுக்குக் கட்டளையிடவும் முடியாது. இதற்கு என்ன வழிஎன்று யோசித்தான்.
இராவண வதமும் முடிந் தது; விபீஷண முடிசூட்டு விழாவும் முடிந்தது. சீதா ராமருடன் வானரங்களும் புறப்படத் தயாராயினர். அப்பொழுது வானரங்கள் எல்லாரும் உள்ளனரா என்று சரிபார்த்தனர்.
வசந்தன் என்ற குரங்கை மட்டும் எங்கு தேடியும் காணவில்லை. இதற்கு மேலும்தேடும் ஆற்றல் அனுமனுக்கே உண்டு என்று முடிவு செய்தனர். அவனும் "யம லோகத்திற்கே சென்று பார்த்துவிட்டு வருகிறேன்' என்று புறப்பட்டு யமலோகத்திற்கும் சென்றுவிட்டான்.
""யமதர்மனே, வணக்கம். எங்கள் வசந்தன் இங்கு இருக்கிறானா?'' என்றான்.
""ஆம்; இங்குதான் சுகமாய் இருக்கிறான்!'' என்றான் யமன்.
""எதற்காக அவனை இங்கு கொண்டு வந்தாய்?''
""ஆஞ்சனேயா; கோபம் வேண்டாம். அவனைக் கொண்டு வந்தால், அவனைத் தேடி இங்குவரக்கூடிய பேராற்றல் உனக்கு மட்டுமே உண்டென்று எனக்குத் தெரியும். நீவந்தால் உன் திருநாவால் இராம நாம சங்கீர்த்தனத் தைப் பாடச் சொல்லி கேட்கவேண்டுமென்றும் ஆசை. அதனால்தான் கொண்டு வந்தேன். வாயு புத்ரா! என்னைமன்னித்து என் செவி குளிர இராம நாமம் கூறு அப்பனே'' என்று யம தர்மனேமாருதியிடம் பணிந்து வேண்டினான்.
ஆஞ்சனேயனும் யமனது ஆசையை நிறைவேற்றி, வசந்தனுடன் புறப்பட்டான்!

No comments:
Post a Comment