Monday, June 27, 2011

சாஸ்தா என்ற சொல்லுக்கு பொருள்

மகிஷி என்னும் அரக்கி முனிவர்களின் யாகத்திற்கு இடையூறு செய்து செய்து வந்தாள். சிலரை விழுங்கினாள். அவளை சம்ஹாரம் செய்ய சிவபெருமானையும், விஷ்ணுவையும் முனிவர்கள் வேண்டினர். விஷ்ணு மோகினி அவதாரம் எடுக்க,சிவனோடு இணைந்துபெற்ற பிள்ளையே சாஸ்தா. காட் டில் வசித்ததால் இவர் இப்பெயர் பெற்றார்.
இப்போதும், இவரது கோயில்கள் ஆற்றங்கரை, காடுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலேயே இருக்கும். இதனால், இங்கு செல்ல அச்சப்பட்ட மக்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர். "சாத்து' என்ற சொல்லுக்கு "கூட்டம்' என்று பொருள். இதனால், இவர் "சாத்தா, சாஸ்தா, சாஸ்தான், சாத்தான்' என்றெல்லாம் கிராமமக்களால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறார்

No comments:

Post a Comment