தென்மாவட்ட கிராமங்களில் திருக்கார்த்திகையன்று "சூந்து' என்னும் ஒருவகை வெள்ளை நிற குச்சியைக் கட்டுகளாகக் கட்டி எரிப்பர். குழந்தைகளுக்கு சூந்து மிகவும் பிடிக்கும். இப்போது சூந்துக் குச்சி கிடைப்பதில்லை என்பதால், பனை, தென்னை ஓலைகளைக் கட்டாகக் கட்டி எரிக்கின்றனர். இறைவனை ஒளிவடிவில் பார்ப்பதே இதன் நோக்கம். பல கோயில்களில் கார்த்திகையன்று சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. பனை மரத்தை நட்டு அதைச்சுற்றிலும் ஓலை கட்டுவர். சிவபார்வதியை சப்பரத்தில் அமர வைத்து அந்த இடத்திற்கு கொண்டு வருவர். பூஜாரி சுவாமிக்கு தீபாராதனை காட்டி, அந்த கற்பூர நெருப்பை ஓலையில் பற்ற வைப்பார். தீ கொளுந்து விட்டு எரியும். மக்களும் தங்கள் கையில் கொண்டு வந்த ஓலைகளை அந்த நெருப்பில் போடுவர். இறைவனை ஒளிவடிவாகக் கண்டு தரிசித்து மகிழ்வர்.
No comments:
Post a Comment