51 விநாயக வடிவங்களும் வணங்குவதால் வரும் வளங்களும்...
விநாயகர் என்றால் அவருக்கு மேம்பட்ட தலைவர் இல்லை என்று பொருள். அவரை சிருஷ்டித்தவரே சிவபெருமான்தான்.
இன்னல்கள் அனைத்தையும் தீர்க்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தவரும் சிவபெருமான்தான். ஆனால், திரிபுரம் எரிக்கச் சென்ற சிவன் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவரது தேர்ச் சக்கரம் முறிந்தது. பின்னர் விநாயகரை வழிபட்டு அவர் திரிபுரம் எரித்தார்.
முருகப் பெருமான் வள்ளியை மணம் புரிய உதவியரும் விநாயகப் பெருமானே. சேரமான் பெருமாள் நாயனாரும் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் திருக்கயிலாயம் சென்றபோது ஔவைப் பாட்டியையும் உடன் வரும்படி வேண்டினர். அப்போது ஔவை விநாயகர் பூஜை செய்து கொண்டிருந்தார். "அம்மையே! நீ பூஜையை முடி. நானே உன்னைத் திருக் கயிலாயம் கூட்டிச் செல்கிறேன்' என்றார் விநாயகர். அதன்படி ஔவை பூஜையை முடித்ததும் தன் தும்பிக்கையால் ஔவையை சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலாயம் போவதற்கு முன்னரே கூட்டிச் சென்றதாக விநாயக புராணம் கூறுகிறது.
எனவே விநாயகர் அருளால் எடுத்த காரியம் யாவும் இனிதே நிறைவேறும்.
ஔவைப் பாட்டி அருளிய விநாயகர் அகவல் படிப்பதால் வாக்குவன்மை, லட்சுமி கடாட்சம் உண்டாகும். செய்வினைகள் யாவும் நீங்கும்.
51 விநாயகர் வடிவங்களும் அந்த வடிவங்களை வணங்குவதால் நாம் அடையும் பலன்களையும் இனி காண்போம்.
1. ஏகாக்ஷர கணபதி: கணபதி அருள் கிடைக்கும்.
2. மகா கணபதி: பரிபூரண சித்தி.
3. த்ரைலோக்ய மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி.
5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19. விஜய கணபதி: வெற்றி.
20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
25. வீரகணபதி- தைரியம்.
26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29. குமார கணபதி: மாலா மந்திரம்.
30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34. யோக கணபதி: தியானம்.
35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38. நவநீத கணபதி: மனோவசியம்.
39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42. குரு கணபதி: குருவருள்.
43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
47. அபிஷ்டவாத கணபதி:
நினைத்ததை அடைதல்.
48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50. மகா கணபதி: ப்ரணவமூலம்.
51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை.
மகா கணபதியை வணங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்
No comments:
Post a Comment