பொதுவாக பண்டிகைகளின் போது விளக்கேற்றினாலும், அந்தந்த தெய்வங்களை வணங்குவோம். ஆனால், திருக்கார்த்திகையில் விளக்கையே தெய்வமாகப் போற்றுகிறோம். விளக்கு ஒளி இல்லாவிட்டால் வீடு இருண்டு விடும். அதுபோல மனவீட்டில் ஒளி இல்லாவிட்டால் உலகத்தில் அநியாயங்களே மிகுதியாக நடக்கும். குழந்தைகள், கணவர் கெட்ட வழக்கங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் திருந்தி நற்குணங்கள் பெறுவதற்காக, பெண்கள் கார்த்திகை விரதம் மேற்கொள்ளலாம். திருக்கார்த்திகை தொடங்கி, ஓராண்டுக்கு மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் மேற்கொள்ள வேண்டும்
விளக்கேற்றும் நேரம் தினமும் காலை மாலை இரு வேளையும் விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். குறிப்பாக சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன் வினைப் பாவம் விலகும். ஆனாலும், நடைமுறையில் விரும்பி ஏற்றும் நேரம் மாலைவேளையே. மாலையில் 6 மணி அளவில் விளக்கேற்றும் வழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனால், மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. சூரியன் மறையும் இவ்வேளையே பிரதோஷகாலமாகும். மாலையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றி சம்பந்தரே பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, ஞானசம்பந்தர், ""விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்'' என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.

கார்த்திகை பிரசாதம்
மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் பெரியகார்த்திகையே மிகச் சிறப்பாக மக்களால் கொண்டாடப்படுகிறது. அருட்பெருஞ்ஜோதியாகிய ஈசன் தனிப்பெருங்கருணையோடு நமக்கருள் புரியும் நாள் திருக்கார்த்திகை. இறைவனுக்கு பிரசாதம் படைக்காவிட்டால் வழிபாடு நிறைவு பெறுவதில்லை. கார்த்திகைக்குரிய பிரசாதமாக கார்த்திகைப் பொரியை இறைவனுக்கு படைப்பது மரபு. வெல்லம் சேர்த்த பொரி உருண்டையோடு, அப்பமும், பாயசமும் இடம்பெறும். திருக்கார்த்திகை நாளில் பிரதான திருவிளக்கோடு இருபுறமும் துணை விளக்குகளை அவசியம் ஏற்றவேண்டும். இவ்வழிபாட்டில் சாம்பிராணி, பத்தி போன்ற தூபதீபங்களை திருவிளக்கு ஜோதிக்கே முதலில் காண்பிக்க வேண்டியது அவசியமாகும்.
No comments:
Post a Comment