கங்கை நதிக்கரையில் சங்கரர் சீடர்களுடன் அமர்ந்து இருந்தார். அப்போது, முதிய அந்தணர் ஒருவர் வந்தார். வியாசரின் பிரம்மசூத்திரங்களை விளக்கிக் கொண்டிருந்தார் சங்கரர். பிரம்மசூத்திரத்தின் மூன்றாவது பிரிவில் முதலாவது சூத்திரத்தின் உரையை தனக்குக் கூறும்படி அந்தணர் கேட்டார். சங்கரரும் விரிவாக விளக்கம் அளித்தார். அந்தணர் வடிவில் வந்த மனிதர், வியாசராக காட்சியளித்து, பிரம்மசூத்திரத்தை உலகில் பரப்பும்படி சங்கரரை வாழ்த்தினார். ""பதினாறு வயதோடு என் ஆயுள் முடிவதால் அது சாத்தியமில்லையே,'' என அவரிடம் சங்கரர் கூறினார். உலக நன்மைக்காக இன்னும் 16 ஆண்டுகள் இப்பூமியில் வாழ்வாயாக!'' என்னும் வரத்தைக் கொடுத்து மறைந்தார் வியாசர்
No comments:
Post a Comment