ராமாயணம், மகாபாரதத்தை இதிகாசங்கள் என்று குறிப்பிடுகிறோம். ராமனின் வாழ்க்கையைக் கூறுவது ராமாயணம். இதைப் படிப்பதால் என்ன லாபம் என தெரியுமா?
நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டமே ராமாயணம். இந்த போராட்டம் மனிதன் பிறந்தது முதல் அவனுக்குள்ளேயே தொடர்கிறது. பரம்பொருளாகிய ராமரும், நம் உயிராகிய சீதையும் ஆட்சி செய்யும் இதயமே அயோத்தி. அயோத்தி என்பதற்கு "யுத்தமில்லாத இடம்' என்று பொருள். ஆனால், ராவணன் எனப்படும் மனம் கட்டுக்கடங்காமல், சீதையை ராமனிடம் இருந்து பிரித்து தனக்குச் சொந்தமாக்க முயல்கிறது. மாயாவி போல வந்து சீதையை அபகரித்த ராவணனுக்கு பத்து முகங்கள். மனமும் கண், காது, மூக்கு, நாக்கு, மெய், கை, கால், குறி, குதம், வாய் என்னும் பத்து இந்திரியங்களின் வழியாக நம்மை ஆட்டுவிக்கிறது.
சீதையைச் சூழ்ந்த அரக்கியர் போல, மனம் போன வழியில் சென்ற உயிரைச் சுற்றி காமம், சினம், மோகம், கடுஞ்சொல் ஆகிய அரக்கியர் சூழ்ந்து விடுகின்றனர். சீதையைப் பிரிந்த ராமர் வாடுவதுபோல, ஜீவாத்மாவைப் பிரிந்த பரமாத்மாவும் வாடிநிற்கிறார். இருவரையும் இணைக்கப் பாடுபடுகிறார் ஆஞ்சநேயர். இவரே கணையாழி, மோதிரம் இரண்டையும் ராமசீதையின் அடையாளமாகக் கொடுத்து பாலம் அமைக்கிறார். அதுபோல, நல்ல குருநாதர் உயிரையும், கடவுளையும் இணைக்கும் பாலத்தை ஏற்படுத்தி நல்வழிகாட்டுகிறார். சீதையும், ராமனும் மீண்டும் அயோத்தியை அடைந்து நல்லாட்சியை தொடங்கியது போல மனிதனும் நல்லவனாகிறான்.

No comments:
Post a Comment