ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் திவ்யதேசம் என்றும், ஆழ்வார்களின் பாடல்கள் திவ்ய பிரபந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. திவ்யம் என்றால் தெய்வத்தன்மை வாய்ந்தது என்று பொருள். அந்த தெய்வத்தன்மையை மனிதர்கள் பெறுவதற்கு நாமசங்கீர்த்தனம் (இறைவனை பாடி வணங்குதல்) முக்கியமானது. எனவே தான் இத்தலங்களில் ஆழ்வார்கள் பாடிய பாடல்களை திவ்ய பிரபந்தம் என்கிறார்கள். இப்பாடல்களைப் பாடுவோர், அந்தந்த தலங்களுக்கு சென்று வந்த புண்ணியத்தை அடைவர்.
No comments:
Post a Comment