எமதர்மராஜாவின் அரண்மனைக்குள் சித்ரகுப்தனின் தனி அறை இருக்கிறதாம். அவன் எந்நேரமும் தூங்காமல் இருந்து ஜீவன்கள் செய்யும் பாவ புண்ணியத்தை ஒன்றுவிடாமல் எழுதிக் கொண்டிருப்பான். இவனது அறைக்கு கிழக்கே காய்ச்சலுக்கும், தென்புறம் அம்மை (வைசூரி)க்கும், மேற்கே அஜீரணத்திற்கும், வடக்கே வயிற்று வலிக்கும், வடகிழக்கே தலைவலிக்கும், தென்கிழக்கே மயக்கத்திற்கும், தென்மேற்கே இருமல், சுவாசக்கோளாறு மற்றும் எரிச்சலுக்கும், வட மேற்கில் ஜன்னிக்கும் தேவதைகள் இருக்கிறார்கள். இவர்கள் சித்ரகுப்தனின் கட்டளையை எதிர்பார்த்து நிற்பார்கள். இவர்கள் மூலமாக, பாவம் செய்யும் மனிதனுக்கு இடைக்கால நோட்டீஸ் அனுப்புவார். இந்த எச்சரிக்கையை ஏற்பவர்கள் திரும்பவும் பாவம் செய்யத் தயங்குவார்கள். சிலர், நோய் தீர்ந்தவுடன் மீண்டும் ஆட்டம் போடுவார்கள். இவர்களுக்கு நிரந்தர நோயைக் கொடுத்து, எமதூதர்களை அனுப்பி, தன்னிடத்திற்கு கூட்டிச்சென்று விடுவான் எமன்.
No comments:
Post a Comment