விசாரணையை தவிர வேறு தகுந்த உபாயம் இல்லை. மற்ற உபாயத்தினால் மனம் அடங்கினால் போல் இருந்து மறுபடியும் கிளம்பி விடும். பிராணயாமத்தால் அடைக்கலாம் ஆனால் பிராணன் அடங்கி இருக்கும் வரை மனமும் அடங்கி இருக்கும்.
பிராணன் வெளிபடும் போது தானும் வெளிப்படும் மனதுக்கும் பிராணனுக்கும் பிறப்பிடம் ஒன்றே. நினைவே மனதின் சொரூபம். நான் என்னும் நினைவே மனதின் முதல் நினைவு, அதுவே அகங்காரம். அகங்காரகத்திலிருந்து மூச்சு கிளம்புகிறது.
ஆகவே மனம் அடங்கும் போது பிராணனும் பிராணன் அடங்கும் போது மனதும் அடங்கும், பிராணனனைப் போல மூர்த்தி தியானம், மந்திர ஜபம், ஆகார நியமம் என்பவைகளும் மனதை அடக்கும். சகாயங்களே மனமானது சதாசலித்துக் கொண்டே இருக்கும்.
யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியை கொடுத்தால் அது எப்படி வேறொன்றை பற்றாதோ அது போலவே மனதிடம் மந்திர ஜபம் செய்ய கடவுள் நாமத்தை சொல்லும் பழக்கத்தை உண்டாக்கி விட்டால் மனமும் இயந்திரகதியாக மந்திர ஜபம் செய்து கொண்டே இருக்கும்.
இப்படி அலையும் மனத்தை மந்திர ஜபம் மூலம் அடங்க செய்யலாம். இதன் மூலம் நம் வாழ்வில் பிறக்கும்.
No comments:
Post a Comment