கனகதாரா என்றால் பொன், மழை என்று அர்த்தம். பொன், மழைக்கு காரணமாக அமைந்ததால் இந்த ஸ்தோத்திரத்திற்கு கனகதாரா ஸ்தோத்திரம் எனப் பெயர் ஏற்பட்டது. பொன்மழை எப்படி பெய்தது? ஸ்ரீஆதி சங்கர பகவத் பாதான் பிரம்மச்சாரியாக இருந்தபடியால் அந்த ஆசிரம நியமப்படி தினந்தோறும் பிச்சை எடுத்தே உண்டு வந்தார்.
ஒரு நாள் துவாதசி நாள் அன்றும் வழக்கமாக பிச்சை எடுக்கச் சென்றார். அவர் எடுக்கச் சென்ற இடம் ஓர் ஏழைப் பிராமணர் வீடு. அந்த வீட்டில் அவர் மனைவி மட்டும் இருந்தார். ஸ்ரீசங்கரர் அவர் வீட்டு வாசலில் வந்து நின்றார். ஆனால் அப்பொழுது பிச்சையிட அந்தப் பெண்மணியிடம் எதுவும் இல்லை.
பிச்சைக்கு வந்த அவரைப் பார்த்த பிராமண பெண் முகம் மிகவும் கவலையுடன் காணப்பட்டது. அவருக்காக ஒரு நெல்லிக்காய் மட்டுமே அவ்வீட்டில் இருந்தது. இந்த உத்தம மகானுக்கு வேண்டிய பிச்சையை அளிக்க நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற அப் பெண் சிந்தனை செய்து அதனை ஸ்ரீசங்கரருக்கு கொடுத்தார்.
அப்பெண்மணியின் பேரன்பையும் அதே சமயத்தில் அவர்களுடைய வறிய நிலையையும் பார்த்து மனமிரங்க, அவர்கள் மேல் அருள் உண்டாயிற்று. அப்பொழுதே `கனகதாராஸ்தவம்' என்று ஸ்தோத்திரத்தினால் அவர்களுக்கு நிறைய ஐஸ்வர்யம் அருள வேண்டும் என்று ஸ்ரீமகாலஷ்மியைப் பிரார்த்தித்தார். அப்போது இவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனே இந்த வறுமை.
அதனால் இவ்வறுமை மாறாது...
என்று ஓர் அசரீரி வாக்கு ஒளித்தது. அதனைக் கேட்ட ஸ்ரீசங்கரர், தற்போது, தங்கள் வீட்டில் இறுதியாக இருந்த ஒரு நெல்லிக்காயினைக் கூட வைத்து கொள்ளாமல் தந்ததால் மிகுதியான புண்ணியம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
இதனால் அவர்கள் பாவங்கள்யாவும் சூரியனை கண்ட பனிபோல் மறைந்து விடும் என்றார். உடனே அவ்வீட்டில் பொன்மழை பெய்யத் தொடங்கியது. சகல ஐஸ்வர்யங்களும் அவர்களுக்கு கிடைத்தது. இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் ஸ்ரீமகாலஷ்மியின் திருவருள் கூடி வரும். இப்படிப் பலர் பல பெரியோர்கள் செல்வ நிலை பெற்று செழிப்பாக வாழ்கிறார்கள் என்கிறார் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரெங்கராஜன்.
பூஜை செய்வது எப்படி?
கனகதாராவை கிழக்கு முகமாக வைத்து தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பித்து 47-வது நாள் (1 மண்டலம்) வரை தொடர்ந்து நெய் விளக்கை ஏற்றி வைத்து 48-வது நாள் அன்று மட்டும் 21 நெய் விளக்கை ஏற்றி வைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
மண்டலத்தின் (48-வது நாள்) நிறைவு நாள் அன்று கனகதாரா அலங்கரித்த மண்டலத்தில் வைக்கப்பட வேண்டும். அன்றைய தினம் 21 சுமங்கலிகளுக்கு அறுசுவை உணவு, வெற்றிலை பாக்கு, தாம்பூலம் வழங்க வேண்டும். குறிப்பாக நீலம் மற்றும் சிவப்பு ஆகிய ஜாக்கெட் துணிகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இப்படி கொடுப்பதினால் அவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்.
No comments:
Post a Comment