இலங்கை சென்ற அனுமன் அசோகவனத்தில் உள்ள மரங்களை எல்லாம் பிடுங்கி எறிந்தார். கண்ணில் கண்ட அரக்கர்களைப் பந்தாடினார். நிலை குலைந்த அவர்கள் மயங்கி விழுந்தனர். அப்போது சீதையிடம் , ""இவன் யார்?' என்றுஅவர்கள் கேட்டனர். அவர் ராமதூதன் என்று தனக்கு தெரிந்திருந்தாலும், தாய்மைக்கே உரிய கருணையோடு சீதை பொய் சொன்னாள். ""என்னைப் பார்த்துக் கேட்கிறீர்களே! எனக்கென்ன தெரியும்? பாம்பின் கால் பாம்பு தானே அறியும். இப்படிப்பட்ட வேலை செய்பவன் உங்களில் ஒருவனாகத் தான் இருக்க முடியும் '' என்று பட்டும் படாமலும் பதில் சொல்கிறாள். இதைத் தான் திருவள்ளுவர் வாய்மை என்னும் அதிகாரத்தில், ""பொய்மையும் வாய்மையிடத்த பொறை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்'' என்று குறிப்பிடுகிறார். குற்றமற்ற நன்மையைத் தரும் என்றால் பொய் சொன்னாலும் அதுவும் உண்மைக்கு சமமானது. சரிதானே!
No comments:
Post a Comment