குமாரிலபட்டர் என்பவர் வேதங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். குமாரிலம், பாட்டப்பிரதீபம் ஆகிய நூல்களை எழுதியவர். மண்டனமிசிரர் என்ற இவருடைய சீடர் மிகவும் புகழ்பெற்றவர். பட்டர் காலத்தில், வேதத்தை புத்தமதத்தினர் குறை கூறி வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென அவர் எண்ணம் கொண்டார். "புத்தமதக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளாமல்,எப்படி அதனைக் கண்டிப்பது?' என்ற எண்ணம் மேலிட்டது. அதனால், ஒரு மாணவனைப் போல வேடமிட்டுக் கொண்டு புத்த குருகுலத்தில் சீடனாகச் சேர்ந்தார். குருமார்களிடம் நற்பெயர் பெற்றார். குருமார்களில் ஒருவர் ததாகதர்.
ஒருநாள் ததாகதர், பாடம் நடத்தும்போது வேதங்களையும், கடவுளையும் கடுமையாக நிந்தித்தார். அவருடைய வார்த்தைகள் அம்பைப் போல பட்டரின் மனதைக் குத்தியது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது.
கண்ணீர் சிந்தும் குமாரிலபட்டர் ஒரு வேதியர் என்பதை ததாகதர் கண்டுபிடித்து விட்டார். அவரைக் கொல்ல எழுந்தார். ஐந்தாவது மாடியில் இருந்து அவரைக் கீழே தள்ளிவிட்டார். விழும்போது, ""வேதம் உண்மையானால் நான் பிழைப்பேன்'' என்று இருகரங்களையும் குவித்தார் பட்டர். கீழே விழுந்தும் பிழைத்துக் கொண்டார். ஆனால், ஒரு கண்ணில் மட்டும் பார்வை போனது.பார்வை இழந்ததற்கான காரணத்தை சிந்தித்தார். "வேதம் உண்மை' என்று ஆணித்தரமாக நம்பாமல், அரைகுறையாக "வேதம் உண்மையானால்' என்று சொன்ன காரணத்தால் தான் பார்வை இழந்ததை அறிந்து கொண்டார்.

No comments:
Post a Comment