பூஜைவேளையில் கோயிலில் கண்டாமணி சப்தமாக ஒலிக்கும். பிற சப்தங்கள் இதில் அழுந்திப்போகும். உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை தன்னிடம் அழைக்கும் ஒலிக்குறிப்பாக மணியோசை அமைந்துள்ளது. புறவுலகை மறந்து வழிபாட்டில் மனம் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட மணியோசை வழி செய்கிறது. இறைவன் நாத தத்துவமாகத் திகழ்கிறார் என்பதை"ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி' என்று சிவபெருமானைப் நாவுக்கரசர் போற்றுவதன் மூலம் அறியலாம். மணியோசை எழுப்பும் இடத்தில் தீயசக்திகள் அண்டாது. வழிபாட்டின் போது வீட்டிலும் மணி ஒலிப்பது நன்மை தரும்.
No comments:
Post a Comment