Friday, September 16, 2011

இவ்வுலகில் எதுதான் நிலையானது? மனிதர்களின் துன்பங்களுக்கு என்ன காரணம்?

இவ்வுலகில் எதுதான் நிலையானது? மனிதர்களின் துன்பங்களுக்கு என்ன காரணம்?

சைவ சித்தாந்தம் இவ்வுலகில் நிலையானவையாக மூன்றைக் கூறுகிறது. ஒன்று இறைவன், இரண்டு உயிர், மூன்றாவது இன்ப துன்பத்தின் காரணமாகிய மயக்கம். இறைவன் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் சாந்தமாக இருப்பவர். உயிர்கள் (அதாவது மனிதன் விலங்குகள் உட்பட எல்லாமே) தாம் விரும்பும் இன்பத்தை அடைவதற்காக துன்பப்படுகின்றனர். நாமும் இறைவனைப் போல் நித்யானந்த மயமாக இருக்கலாம். நாம் நினைத்ததை யெல்லாம் அடைய வேண்டும் என்ற மயக்கத்திலிருந்து விடுபடும் பொழுது.
*பெற்றோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு ஓட்டலில் சாப்பாடு வாங்கி அன்னதானம் செய்யலாமா?

உங்களை வளர்த்து ஆளாக்க உங்கள் பெற்றோர் என்னபாடு பட்டிருப்பார்கள்? "ஓட்டலில் சாப்பிடாதே உடம்புக்கு ஆகாது' என்று கூறி எப்படியெல்லாம் கவனமாக உங்களைப் பார்த்துக் கொண்டார்கள்? இதற்கு இது தான் கைமாறா? கஷ்டப்பட்டாவது வீட்டில் சமைத்து சாப்பாடு போடுங்கள். வீட்டில் உதவிக்கு ஆள் இல்லையென்றால் அன்று ஒரு நாள் மட்டும் சம்பளத்திற்கு ஆள் வைத்துக் கொள்ளலாமே

No comments:

Post a Comment