மனசில் ஆயிரக்கணக்கான பசிகள் ஏற்பட்டு, அதைத் தீர்த்துக் கொள்வதில் கோபம்,
பொய், பொறாமை எல்லாமும் பட்டாளமாக வந்து விடுகின்றன. அப்படியாவது ஆசை
தீர்ந்ததா என்றால் அது தான் இல்லை. விடாமல் ஒன்று மாற்றி ஒன்று என்று ஆசைப்
பூர்த்திக்கான விஷயங்கள் நம்மைப் பிடித்துக் கொண்டு பேய் மாதிரி ஆட்டி
வைக்கின்றன. ஆனந்தம் வேண்டும் என்பதற்காகத் தான் நாம் இத்தனை
காரியங்களையும் செய்கிறோம். என்றாலும், இந்த காரியங்களினால் அதிகபட்சமாக
அடையக்கூடிய சந்தோஷம் சிலகாலம் மட்டும் இருந்து விட்டு மறைந்து போய்
விடுகிறது. எதுவுமே கலப்படம் இல்லாத சந்தோஷமாக இல்லாமல் கையோடேயே ஒரு
துக்கத்தையும் அழைத்துக் கொண்டு வருகிறது.
பட்சணம் சாப்பிட்டால் சந்தோஷமாயிருக்கிறது. வயிற்றுவலியும் கூடவே வருகிறது என்பது வயிற்றுப்பசி விஷயத்தில் மட்டும் தான் என்று இல்லை. கண்ணின் பசி, காதின் பசி, சரீரப்பசி, எண்ணத்தின் பசி, பணப்பசி எல்லாவற்றிலும் இதே தான் நடக்கிறது. குழந்தை விளையாடிப் பார்த்தால் சந்தோஷமாயிருக்கிறது. அதற்கு ஒரு காய்ச்சல் வந்து விட்டால், இந்த சந்தோஷத்தைப் போல நாலுமடங்கு கவலை ஏற்படுகிறது.
கலப்படமில்லாத சந்தோஷம் எங்கிருக்கிறதோ, அதை மனசுக்காக தேடுவோம்.

No comments:
Post a Comment