திருவிழா அழைப்பிதழ்களில் "ததீயாராதனம்' என்ற வார்த்தையைப்
பார்த்திருக்கலாம். இதற்கு "அன்னதானம்' என்று மிகச் சாதாரணமாக பொருள்
சொல்லி விடுகிறார்கள். இது மிகவும் அர்த்தமுள்ள வார்த்தை. "ததீயா' என்றால்
"கடவுளுடன் சம்பந்தப்பட்டவர்' என்று பொருள். கடவுளுடன்
சம்பந்தப்பட்டவர்களுக்கு உணவளிப்பதையே "ததீயாராதனம்' எனச் சொல்ல வேண்டும்.
அதாவது, ஏழைகளும், பூஜை செய்பவர்களும் இறைவனைச் சார்ந்தவர்கள் என
எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு தேவையான உணவை அளிக்க வேண்டும். பசி என்ற
சொல்லையே அகராதியில் இருந்து அகற்ற வேண்டும். பஞ்சபாண்டவர்களில் ஒருவனான
பீமன், தன் அரண்மனைக்கு வரும் ஏழை பிராமணர்களுக்கு, உணவளிக்கும் போது
சமையலறையை கவனிக்க போய்விடுவானாம். ஒரு சமயம், அவர்களது அரண்மனையில் நடந்த
அன்னதானத்தில் 82 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை படைத்தனர்.
No comments:
Post a Comment