Thursday, February 9, 2012

ஆன்மிக கேள்வி , பதில்-



** பஞ்சாங்கத்தில் இஷ்டி என்று குறிப்பிடுகிறார்களே அது என்ன?

"இஷ்டி' என்றால் பூஜை. அன்று சஷ்டி, சந்திர தரிசனம் போன்றவை கூடியிருக்கும். அதற்கான பூஜையைச் செய்யலாம் என்பதற்கு அடையாளமாக அப்படி போடுவார்கள்.

* திருநீறு பூசும்போது எத்திசை நோக்கி இருந்தால் நல்லது?

காலையில் கிழக்கு நோக்கியும், மதியம் வடக்கு நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பூசிக் கொள்ள வேண்டும். இது அனுஷ்டானத்திற்கும், வீட்டில் இட்டுக் கொள்வதற்கும் பொதுவானது. கோயிலில் பிரசாதமாகப் பெறும் பொழுது சுவாமியைப் பார்த்துப் பூசிக் கொள்ள வேண்டும்.

* வாழைமரத்திற்கும் செவ்வாய் தோஷத்திற்கும் என்ன சம்பந்தம்? ஜோதிடர் பரிந்துரைக்கும் இவ்வழிபாட்டை கோயில்களில் ஏன் நடைமுறைப்படுத்துகிறாõர்கள்?

எந்த மாதிரி வழிபாடு என்று தாங்கள் குறிப்பிடவில்லை. நான் அறிந்தவரை அந்த மாதிரி எதுவும் வழக்கில் இல்லை. கோயில்களில் நடைமுறைப்படுத்துவதைப் பற்றி கூறியுள்ளீர்கள். ஜோதிடர்கள் கூறும் குறிப்பிட்ட பரிகாரங்களைத் தவிர, மற்றவற்றை கோயில்களில் தவிர்ப்பது நல்லது. இதனை ஜோதிடர்களே கூட அறிவுறுத்தலாம்.

* தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை இதில் முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த நாள் எது?

எல்லா அமாவாசைகளுமே முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்தவை தான். அன்று அவசியம் வழிபாடு செய்து தான் ஆகவேண்டும். ஒன்று சிறந்தது என்றால் கண்டிப்பாக மற்றதை விட்டு விட வேண்டிய சூழல் வரும். உத்தராயணத்தில் முதலில் வருவதால் தை அமாவாசையும், தக்ஷிணாயனத்தில் முதலில் வருவதால் ஆடி அமாவாசை என்பது அந்த அமாவாசைக்கு முன்னதான பிரதமையிலிருந்து விரதம் இருந்து, தர்ப்பணம் செய்ய வேண்டும். இது மற்ற திதிகளில் விடுபடும் பிதுர்க்களையும் திருப்திபடுத்த செய்யப்படுகிறது. எனவே அமாவாசை தர்ப்பணத்தைப் பொறுத்த வரை ஒன்று சிறந்தது. மற்றது தாழ்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை.

* விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றது என்று கேள்விப்பட்டேன். அதற்கான விளக்கம் அளிக்கவும்.
அது தவறான தகவல். பூஜை விஷயங்களில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அது சமையலுக்கு மட்டும் தான்.

*அமாவாசை நாளில் விரதமிருந்து காகத்திற்கு சோறு வைத்தேன், நீண்ட நேரமாகியும் காகம் சோற்றை எடுக்கவில்லை. பரிகாரம் இருந்தால் கூறுங்கள்

உங்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டு உங்களையே பார்த்துக் கொண்டிருந்தால் நிம்மதியாக சாப்பிடுவீர்களா? வெட்கப்பட்டுக் கொண்டு யோசிப்பீர்கள். காகத்திற்கு சோற்றை வைத்துவிட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தால் பயப்படாதா? பிறகு சோற்றை எடுக்கவில்லை. பரிகாரம் கூறுங்கள் என்றால் என்ன சொல்வது. வேறு யாரிடமாவது இதை கேள்வியைக் கேட்டால், வெள்ளியில் காக்கை செய்து தானமாகக் கேட்டிருப்பார்கள். காக்கை உருவில் முன்னோர் வந்து சாப்பிடுகிறார்கள் என்ற நம்பிக்கையோடு அடுத்த முறை சோற்றை வைத்துவிட்டு வந்து விடுங்கள். தானாக எடுத்துக் கொள்ளும்.




** வாஸ்து சாஸ்திரத்தை ஆன்மிகம் ஏற்றுக் கொள்கிறதா? அதை எந்த அளவிற்குக் கடைப்பிடிப்பது என்பதைக் கூறுங்கள்.
 
சாஸ்திரம் என்று சொல்லிவிட்டாலே அது ஆன்மிகம் தானே. இறைவழிபாட்டிற்காக கூறப்பட்டுள்ள சாஸ்திரங்களில் ஒரு பிரிவு - சிற்பசாஸ்திரம். இதன் உட்பிரிவுகளில் ஒன்று வாஸ்து சாஸ்திரம். ஒருவீட்டைக் கட்டத் துவங்குவதற்கு முன் வாஸ்து சாஸ்திரத்தைக் கடைபிடிக்கலாம். கட்டி முடித்தபின் வீண் வதந்திகளை நம்பி குழப்பிக் கொண்டு வீட்டை இடிக்க வேண்டாம்.

* பூஜை அறையில் கடவுள் திருஉருவப்படங்களை எத்திசை நோக்கி வைப்பது சிறந்தது?

கிழக்கு நோக்கி வைப்பது சிறந்தது. மேற்கு நோக்கியும் வைக்கலாம்.

* இறந்த பெற்றோருக்கு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்கள் கொடுக்கும் சிரார்த்தம் ஏற்புடையதுதானா? விளக்கம் தேவை.

பெண்கள் நேரடியாக இதை செய்யக்கூடாது. யாராவது ஒரு ஆணிடம் தர்ப்பையைக் கொடுத்து அவர் மூலமாக செய்ய வைக்கலாம். திருமணமான பெண்கள் கணவன் வீட்டைச் சார்ந்து விடுவதால், பெற்றோருக்காக தர்ப்பை கொடுக்கக் கூட அதிகாரம் கிடையாது. பெற்றோரின் பங்காளிகளைச் செய்யச் சொல்லி பொருளுதவி மட்டும் செய்யலாம்.

* விரதநாட்களில் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று சொல்கிறார்களே உண்மையா?

"விரதம்' என்ற சொல்லுக்கு "கஷ்டப்பட்டு இருத்தல்' என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால் தண்ணீர் கூட குடிக்காமல் பசித்திருந்து, சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக் கூறியுள்ளனர். "உபவாசம்' என்றால் "இறைவனுக்கு அருகில் இருத்தல்' என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

* பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தைக் கூறுங்கள்.

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை "சிருஷ்டி' (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை "பிரம்ம முகூர்த்தம்' என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

* ஹோமம் நடத்தும் போது குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைத்திருந்தால் நல்லது என்று சொல்கிறார்களே? விளக்கம் அளிக்கவும்.

ஹோமம் முடிந்து அதில் போட்ட எல்லா திரவியங்களும் சாம்பலாகும் வரை குண்டத்திலிருந்து எதையும் எடுக்கக்கூடாது. சில இடங்களில் ஹோமம் முடிந்து, யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பட்டவுடனேயே மக்கள் உள்ளே புகுந்து குண்டங்களை அணைத்தும், கலைத்தும் நாணயங்களையும் சாம்பல் பிரசாதமும் எடுக்கிறார்கள். இது மிகவும் பாவம். எல்லாம் சாம்பல் ஆன பிறகு நாணயங்களையும், சாம்பல் விபூதி பிரசாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இதை வீட்டில் வைத்துக் கொண்டால் லட்சுமி கடாட்சம் பெறுவதுடன், நோய் நொடியும் வராது.


* குலதெய்வம் கோயிலுக்கு அகல் விளக்குகள் வாங்கிச் சென்ற பொழுது ஒரு சில உடைந்து விட்டன. இது நன்மையா கெடுதலா?

விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய்யும் பொழுது அதுவே தானாக விழுந்து உடைந்தால் தான் பரிகார தீபம் ஏற்ற வேண்டும். வாங்கிச் செல்லும் பொழுது கவனக்குறைவால் உடைந்ததற்கெல்லாம் பயப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே.

* கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்?

நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றே புரியவில்லை.
கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது.

* எங்கள் வீட்டில் துளசியுடன் வில்வமும் சேர்ந்து வளருகிறது. இரண்டையும் சேர்த்து வணங்கலாமா? அல்லது கோயிலில் நடலாமா?

இரண்டும் உங்கள் வீட்டில் நன்றாக வளருவதே பெரிய பாக்கியம். தினமும் விளக்கேற்றி நன்றாக வழிபடுங்கள். உங்கள் வீடு மங்களகரமாக இருக்கும்.

** வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறேன். அதனால் குறை ஏதுமில்லை. ஆனால், சிலை வழிபாடு கூடாது என்று சிலர் கூறுகின்றனர். விளக்கம் தேவை.

வீட்டில் சாமி சிலைகளை ஆறு அங்குல உயரத்திற்கு மேல் இல்லாமல் வைத்து தாராளமாக பூஜை செய்யலாம்.

* பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூடாதா?

பிறந்த நட்சத்திரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. கிழமை பார்க்க வேண்டாம். தீபாவளியன்று ஜென்மநட்சத்திரம் வந்தால் சும்மா இருந்து விடாதீர்கள். அது விதி விலக்கு.

* வீடு, தீர்த்தக்கரை, கடற்கரை இம்மூன்றில் பிதுர்தர்ப்பணத்தை எங்கு செய்வது சிறப்பானது?

கடற்கரையில் செய்வது முதன்மையானது. நதி, குளக்கரைகளில் செய்வது விசேஷமானது. வீட்டில் செய்வது மத்திமம் தான். அவசர கதியில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழலில், ஏதாவது ஓரிடத்தில் விட்டுவிடாமல் செய்வதே மிக மிக உத்தமமானது தான்.

* பஞ்சாட்சர மந்திரம் (நமசிவாய, சிவாயநம)சொல்லித்தான் திருநீறு பூச வேண்டும் என்பது உண்மையா?

பஞ்சாட்சரம் (நமசிவாய) சொல்லி திருநீறும், அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய)சொல்லி திருமண்ணும் இட்டுக் கொள்வதைப் போன்ற புண்ணியச் செயல் இவ்வுலகில் வேறு கிடையாது.

* கருவறையில் திரைபோடும் போது சந்நிதியை தரிசனம் செய்வதோ சுற்றி வலம் வருவதோ கூடாது என்கிறார்களே? உண்மைதானா?

உண்மைதான். ஒருவரை சந்திக்கச் செல்கிறோம். அவர் நம்மை சந்தித்துப்பேசும் நிலையில் விழித்துக் கொண்டிருந்தால் தானே சந்திப்பு என்பது நிகழும். அதுபோலத் தான் திரைப்போடப்பட்ட சந்நிதியும்! அப்போது தரிசிப்பது வலம் வருவது போன்றவை செய்யக்கூடாது. இது போன்ற சமயங்களில் விமான கோபுரங்கள் உள்ளன. அவற்றை தரிசித்தாலே சுவாமி தரிசன பலம் கிட்டும்.


* கோயில்களில் கொடுத்த பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு போடுவது சரிதானா?

ஒருமுறை சுவாமிக்கு சாத்தப்பட்டு பிறகு எடுக்கப்படும் மாலைக்கு "நிர்மால்யம்' என்று பெயர். நிர்மால்ய மாலைகளை வேறு தெய்வத்திற்குச் சாத்துதல் கூடாது.

* பூஜை அறையில் சுவாமி படங்களுடன் மறைந்த பெரியவர்களின் படங்களை வைக்கலாமா?

சுவாமி படங்களுடன் சேர்த்து வைப்பது கூடாது. சற்று தள்ளி தனியாக வைத்து வழிபடலாம். மறைந்த பெரியவர்கள், பிதுர்கள் என்று அழைக்கப்படுவர். தெய்வநிலை வேறு. பிதுர்நிலை வேறு.

* அசைவம் சாப்பிடும் நாட்களில் கோயிலுக்கு செல்வது தவறுதானா?

கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டிருக்கும் நீங்கள் அந்த கருமத்தை விட்டுவிடக்கூடாதா? உலகிலேயே அதிகமாக அசைவம் சாப்பிடும் சீனர்கள் கூட இன்று சைவத்திற்கு மாறி வருகிறார்கள். உலகிற்கே எடுத்துக்காட்டாக இருக்கும் இந்து தர்மம் புலால் சாப்பிடுவதை அனுமதிப்பதில்லை. எனவே இந்தக் கேள்வி தள்ளுபடி செய்யப்படுகிறது.

* என் தாய் பூஜை செய்து வந்த விக்ரஹங்களுக்கு என்னால் சரிவர பூஜை செய்ய முடிவதில்லை பூ, பால் வைத்து வணங்கினால் போதுமா?

தாய் தந்தை விட்டுச் சென்ற மற்ற எல்லாவற்றையும் பராமரிக்கிறோம். பூஜை மட்டும் சரிவர செய்யமுடியவில்லை என்றால் எப்படிப் பொருந்தும்? நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே உங்கள் தாய் பூஜை செய்து வந்திருக்கிறார்கள். உங்கள் வாரிசுகளும் நன்றாக இருக்க, நீங்களும் முடிந்த வரை நன்றாகவே பூஜை செய்யுங்கள்.

** வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்த என்னால் இயலவில்லை. இதனால் ஏதேனும் பாதிப்பு நேருமா?

வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்தவில்லையே என உங்கள் மனம் உறுத்துகிறது. இதுவே பெரிய பாதிப்பு தானே! சீக்கிரம் நிறைவேற்றிவிடுங்கள்.

* திருமணம், காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னதாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்களே ஏன்?

திருமணம், காதுகுத்தல் போன்றவை நம் குலம் அபிவிருத்தியடைவதற்காகச் செய்யப்படும் சுபநிகழ்ச்சிகளாகும். இவை நல்ல முறையில் நடந்து நம் குலம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலில் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

* இரண்டு மாத இடைவெளியில் இறந்த பெற்றோருக்கு ஒரே நாளில் திவசம் பண்ணலாமா?

தாயின் சிராத்தம் முறை வேறு. தந்தையின் சிராத்தம் முறை வேறு. இரண்டையும் அவரவர்கள் திதியில் செய்தால் தான் பித்ருக்கள் திருப்தியடைவார்கள். ஒன்றாக செய்யக் கூடாது.

* திருமாங்கல்யத்தில் "சிவாயநம' என எழுதி வழங்கலாமா?

திருமாங்கல்யம் என்பது பரம்பரை பரம்பரையாக பழக்கத்தில் செய்து வருகிற ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதிரி அமைந்துள்ளது. நம் குடும்பத்துப் பெரியவர்கள் கூறும் முறைப்படி செய்வது தான் நல்லது. சுவாமி அம்பாள் உருவங்கள் பொறிப்பது தான் வழக்கம். எழுத்துக்கள் எழுதுவது இல்லை.

** கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பயமுறுத்துகிறார்களே! விளக்கம் அளிக்கவும்.

நம் ஊர்க்காரர்கள் சொன்னால் சும்மா பயமுறுத்துகிறார்கள் என்பீர்கள். மேலை நாட்டார் எதைக் கூறினாலும் ஏற்றுக்கொள்வீர்கள். ஒரு அமெரிக்கர் இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்துள்ளார். ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். அப்படி பார்க்கும்போது, கண்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவதை விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிந்திருக்கிறார். இதற்காகவே நம் முன்னோர் அறிந்து "கண்ணூறு கழித்தல்' என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

* வீட்டில் மருமகள் கர்ப்பிணியாக இருக்கும்போது புதுவீடு கட்டத் தொடங்கக்கூடாது என்கிறார்களே! விளக்கம் அளியுங்கள்.

கர்ப்பிணி பெண்கள் வசிக்கும் வீட்டை இடிக்கவோ, புதுப்பித்துக் கட்டவோ கூடாது. வேறு புது இடத்தில் புதுவீடு கட்டலாம். கிரகப்பிரவேசமும் செய்யலாம்.

* கிரகப்பிரவேசம் செய்யும்போது முதலில் பசுவையும், கன்றையும் அழைத்து வந்து கோபூஜை செய்வதன் நோக்கம் என்ன?

பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். நான்கு வேதங்களும் நான்கு கால்களாக உள்ளன. கன்றுக்காக சுரக்கும் பாலை நமக்கும் கொடுக்கும் பசுவை "கோமாதா' என அழைக்கிறோம். இதன் காலடி பட்ட இடத்தில் மங்களம் உண்டாகும். கன்றுடன் கூடிய பசுவை பூஜிப்பதால், லட்சுமியின் அருள்கடாட்சம் நிலைத்திருக்கும். கன்று இல்லாமல் பசுவை தனித்து அழைத்து செல்லவோ, பூஜை செய்யவோ கூடாது.

* சில கோயில்களில் கரன்சி நோட்டுகளால் தெய்வத்தின் திருவுருவத்தை அலங்காரம் செய்கிறார்களே! இது முறைதானா?

காய், கனிகள், பட்சணங்கள் இவற்றினால் அலங்காரம் செய்தல் உண்டு. கரன்சிகளால் செய்யும் பழக்கம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதை சாஸ்திர ரீதியாக மறுக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலாது. அந்தக்காலத்தில் பணப்பரிமாற்றத்திற்கு தங்கநாணயங்களை உபயோகித்தனர். மதிப்புள்ள பொருட்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தில் தங்கக்காசு மாலையை அணிவித்தனர். அதற்கு ஈடாக இன்று கரன்சி இருக்கிறது. எண்ணெய் விளக்குக்குப் பதிலாக மின்விளக்குகளை கோயில்களில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இறைவனுக்கு கரன்சி நோட்டுகளை அர்ப்பணிக்கலாம் என்பதே என் கருத்து.
** திருமணத்திற்கு சிலர் ஜாதகப் பொருத்தம் தான் தேவை என்றும், சிலர் கோயிலில் பூக்கட்டிப் பார்த்தால் போதும் என்றும் சொல்கின்றனர். எது சிறந்தவழி என்பதைச் சொல்லுங்கள்.

கோவையில் இருந்து மதுரைக்கு பழநி, திருச்சி வழியாகச் செல்லலாம். மதுரைக்குச் செல்வது தான் முக்கியமே தவிர, பாதையைப் பற்றி யோசிக்கக் கூடாது. ஜாதகம் பார்த்தல், தெய்வ உத்தரவு கேட்டல் இரண்டும் சிறந்தவை தான். மனம் எதில் திருப்திபடுகிறதோ, அதை தேர்வு செய்து திருமணத்தை இனிதாக நடத்துங்கள்.

* அன்னபூரணி விக்ரஹத்தை வீட்டில் வைத்து பூஜிக்கும் முறையைச் சொல்லுங்கள்.

பூஜை முறைகள் எல்லா தெய்வங்களுக்கும் ஒரே மாதிரி தான். மந்திரங்களும், ஸ்லோகங்களும் தான் மாறுபடும். அன்னபூரணி அஷ்டகம் மிக உயர்ந்தது. இதனை பூஜையின் போது பாராயணம் செய்து வாருங்கள்.

* காலையில் வாசலில் கோலம் போட என் மனைவி மறுக்கிறாள். இதை ஆண்கள் செய்வது சரியா தவறா?

மனைமங்கலமான கோலம் இடுதல், விளக்கேற்றுதல் போன்றவற்றைப் பெண்கள் செய்வது தான் முறை. இருந்தாலும், உங்கள் சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

* வீட்டில் வில்வமரம் வளர்க்க நினைக்கிறேன். என் எண்ணம் சரியானதா?

சரியானதே. வில்வ மரத்தில் சிவபெருமானும், துளசியில் மகாவிஷ்ணுவும் வசிக்கின்றனர். எனவே, இவற்றை வளர்ப்பதால் நாம் அவர்களின் அருளைப் பெற்று மகிழலாம்.

* எமனுக்கு இரக்க சிந்தனை கிடையாது தானே! பின் ஏன் எம தர்மன் என்று குறிப்பிடுகிறோம்?

எமனுக்கு இரக்கம் இல்லை என்று நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. "யம' என்ற சொல்லுக்கு "கட்டுப்பாடு' என்று பொருள். நாம் கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமாக வாழ வேண்டும். இதைத் தான் "நியமம்' என்பார்கள். நியமத்துடன் வாழ்வதையே "அறநெறிப் பட்ட வாழ்க்கை' என்கிறோம். அறம் என்றால் தர்மம். கட்டுப்பாடும், தர்மமும் இணைந்தவர் தான் எமதர்மன். மனிதன் தர்மத்தை சரியான முறையில் கடைபிடிக்கிறானா என்பதைக் கண்காணிப்பது தான் எமனுடைய வேலை. ஆசிரியர் நன்றாகப் படித்தவனைத் தேர்ச்சி பெறச் செய்கிறார். அதே ஆசிரியர் படிக்காதவனை தோல்வி அடையச் செய்கிறார். அதற்காக அவரை இரக்கமற்றவர் என்று சொல்லலாமா?

* செம்பருத்திப் பூவை பெருமாளுக்குச் சாத்தக்கூடாது என்பதற்கு சாஸ்திர சம்மதம் உண்டா?

செம்பருத்திப்பூ விநாயகர், முருகன், பார்வதி போன்ற தெய்வங்களுக்குச் சிறப்பானவை. பெருமாளுக்குப் பவழமல்லி, துளசி சிறப்பானவை.

* "ஓம்' என்று சொல்வதற்குப் பதிலாக "ஸ்ரீ' என்று தான் மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது உண்மைதானா?

"ஓம்' என்பதற்கும் "ஸ்ரீ ' என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று அவர்களிடமே கேட்டிருக்கலாமே! இது போன்ற விஷயங்களைக் கேட்டு உங்களைப் போன்றவர்கள் குழம்பிக் கொண்டிருக்கும் வரையில் குழப்புபவர்களுக்குப் பஞ்சமிருக்காது.


** பாதக ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே சனீஸ்வரரை வழிபடவேண்டும் என்பது உண்மையா?

கிரகங்கள் ஒன்பதும் கடவுளின் அடியவர்களே. அவரவர் பாவபுண்ணிய பலன்களை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். சனி ராசிக்கு 3,6,11 ஆகிய மூன்று ஸ்தானங்களில் சுப பலன்களை வாரி வழங்குவார். மற்ற ஸ்தானங்களில் நன்மையும் தீமையும் கலந்தே உண்டாகும். எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் சனியை அனைவரும் வழிபடலாம். ஒருவரின் வாழ்நாளை நிர்ணயிக்கும் ஆயுள்காரகர், தொழிலை நிர்ணயிக்கும் ஜீவனகாரகர் என்னும் இருபெரும் விஷயங்கள் சனீஸ்வரரின் கட்டுப்பாட்டில் உள்ளன. சனி மட்டுமல்ல! கிரகம் ஒன்பதையும் வணங்கவேண்டியது மிக அவசியம்.

* கோயிலில் சிலர் பரிகாரம் என்ற பெயரில் சுண்டல், வாழைப்பழம் போன்றவைகளைத் தருகிறார்கள். அவற்றை பிரசாதமாக வாங்குவதா அல்லது தோஷம் என மறுப்பதா? கூறுங்கள்.

கோயிலில் கொடுக்கும் பொருள் எதுவானாலும், கடவுளின் அருட்பிரசாதமே. தயக்கமில்லாமல் வாங்கி, பக்தியுணர்வுடன் சாப்பிடுங்கள். நவக்கிரகத்தை பரிகாரமாக வழிபட்டு சுண்டல், பழம் கொடுத்தாலும் அதுவும் பிரசாதம் தான்.

* வீட்டில் சுவாமிக்கு சாத்திய பூமாலைகளை எங்கு சேர்ப்பது என விளக்கம் தேவை.

சுவாமிக்கு சாத்திய மாலைக்கு "நிர்மால்யம்' என்று பெயர். ஆறு,குளம், போன்ற நீர்நிலைகளில் சேர்க்கவேண்டும். பொதுவாக, கால்மிதி படாத இடத்தில் பூமாலைகளைச் சேர்ப்பது நல்லது.

* அமாவாசையை நாளில் சுபவிஷயம் கூடாது என்று சிலரும், சிலர் நிறைஅமாவாசை என்பதால் சுபம் நடத்தலாம் என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி?

முன்னோர் வழிபாட்டுக்கு மட்டுமே அமாவாசை உரியது. அமாவாசையில் சுபவிஷயம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அமாவாசை, பிரதமை நாட்களை விடுத்து துவிதியை திதியில் இருந்தே எடுத்துக் கொள்வர்.

* ஈசானம், கன்னி மூலைகளில் எதில் பூஜை அறை அமைப்பது சிறப்பு?
 
வீட்டின் வடகிழக்கு (ஈசானம்), தென்மேற்கு(கன்னி) மூலைகள் இரண்டுமே தெய்வீகமானவையே. அவரவர் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக் கொள்ளலாம். கன்னிமூலையில் பணப்பெட்டியும் (பீரோ) வைக்கலாம்.

*முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டு வாசலில் வைப்பதன் நோக்கம் என்ன?

மங்கல பொருட்களில் கண்ணாடியும் ஒன்று. அதனால், மங்களகரமாக கண்ணாடியை வைப்பர். சிலர் கண்ணாடியை திருஷ்டிதோஷம் நீங்கவும் வாசலில் வைக்கிறார்கள்.

** வாசலில் சிலர் கடவுளின் உருவத்தையே கோலமாக இட்டு வருகின்றனர். இது சரியான முறையா?

மார்கழி நெருங்கும் சமயத்தில் இக்கேள்வி கேட்டிருப்பது பாராட்டுக்குரியது. கோலம் என்றால் "அழகு'. இதனை வடமொழியில் "ரங்கவல்லி' என்பர். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்று வைத்துக் கொள்ளலாம். இதன் தரைப்பகுதியில் அழகுக்காக கொடிகள் போன்று வரையப்படுவது கோலமாகும். "வல்லீ' என்றால் கொடி. கொடிகளைப் போன்ற கோடுகளாலும், புள்ளிகளாலும் அழகாகப் போடப்பட வேண்டியவையே கோலங்கள். தெய்வங்களின் உருவங்கள் வீட்டு வாசலில் கோலமாகப் போடுவது, பிறகு அதன் மீது கால் பட நடப்பது இவற்றையெல்லாம் யோசிக்கவே கஷ்டமாகவே உள்ளது. எனவே இவற்றை நம் சகோதரர்களிடம் சொல்லி அழகான புள்ளி கோலங்கள், சிக்குக் கோலங்கள் முதலியவற்றின் மூலம் தங்களது கைவண்ணத்தை திறம்பட காண்பிக்குமாறு செய்ய வேண்டும்.

* பிறந்த குழந்தையின் ஜாதகத்தை எந்த வயதில் கணிக்க வேண்டும்?

ஒரு வயது முடிந்த பிறகு கணிக்க வேண்டும். 12 வயது வரை பலன் கணிக்கக் கூடாது. பலரும் பலவிதமாகப் பலன் கூறுகிற இக்கால சூழ்நிலையில் சிறுவயதிலேயே குழந்தைகள் குழப்பமான மனநிலைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* அமாவாசை, திதி நாளில் வாசலில் கோலம் போடக் கூடாது என்பதற்கு காரணம் என்ன?

அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் ""பிதுர் தினம்'' என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து விட்டுத்தான் தெய்வ வழிபாடே செய்யப்பட வேண்டும். மங்களகரமான விஷயங்களில் பிதுர்களுக்கு விருப்பம் கிடையாது. எனவே, முன்னோர் காரியங்களில் கோலம் போடக்கூடாது.

* குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள். அது மிக அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம். இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி வந்துள்ளனர். நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான். குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், உங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் பெயர்களை விநாயகர் முதல் அனுமன் வரை சீட்டுகளில் எழுதுங்கள். அருகில் உள்ள கோயிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்த பிறகு எழுதி வைத்திருக்கும் சீட்டுகளை சுவாமி பாதத்தில் வைத்து, ஏதாவது ஒன்றினை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று வழிபாட்டைத் துவக்குங்கள்.
பிரதோஷம் என்பதன் பொருள் என்ன? அதன் சரியான கால அளவு எவ்வளவு?

""ப்ரளீயந்தே அஸ்வின் தோஷா'' என்பது பிரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம். அதாவது அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள். பகல் முழுவதும் மனிதர்கள் எவ்வளவோ செயல்களைச் செய்கிறார்கள். அவற்றில் நல்லவை, கெட்டவை கலந்தே இருக்கின்றன. அறியாமல் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதலும், நல்ல செயல்களுக்கு இறைவன் அருள் செய்தலும் இந்த பிரதோஷ காலத்தில் தான். தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது. இதற்கு "நித்யபிரதோஷம்' என்று பெயர். வளர்பிறை திரயோதசிக்கு பக்ஷ பிரதோஷம், தேய்பிறை திரயோதசிக்கு மாத பிரதோஷம், தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம் என்று பெயர்.

** வெள்ளிக்கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க மறுப்பது ஏன்? வீட்டு வேலை செய்பவர்களுக்கு, மறுநாள் சம்பளம் தருவதாகச் சொல்வது சரியா?

ஒரு சிலர் தான் இப்படிக் கூறி வருகிறார்கள். வேலை செய்பவர்களுக்குக் கூலி கொடுக்கும் பொழுது இப்படிக் கூறுவது மிகவும் தவறு. பஸ், மருத்துவமனை, காய்கறி வாங்குதல் போன்ற அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கு இப்படிக் கூற முடியுமா? வெள்ளிக்கிழமைகளில் பணப் பெட்டிக்கு பூஜை செய்பவர்கள் அன்றைய தினம் அதிலிருந்து பணம் எடுக்க மாட்டார்கள். முதல் நாளே எடுத்து வைத்து வெள்ளிக்கிழமை கொடுப்பதில் தவறில்லை.

* முடிவெட்டுவதையும், எண்ணெய் ஸ்நானத்தையும் ஒரே நாளில் செய்யக்கூடாது என்கிறார்கள். உண்மைதானா?

உண்மை தான். வீட்டிலேயே சவரம் செய்தாலும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தவறு தான். அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும், செவ்வாய், சனிக்கிழமைகளிலும் முடி வெட்டுதல், சவரம் செய்தலைத் தவிர்க்க வேண்டும்.

* மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி அம்மன் கோயில் என்று குறிப்பிடுகிறோம். சுவாமி பெயரால் வழங்கப்படாதது ஏன்?

திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கும் நம் பெண்ணைப் பார்க்கச் செல்கிறோம். அப்பொழுது ""என் பெண் வீட்டிற்குச் செல்கிறேன்,'' என்று தான் கூறுவோமே தவிர, ""மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறேன்,'' என்று கூறுவதில்லையே! மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மதுரையின் அரசியாக மகுடம் சூடி, திக்விஜயமாக கைலாயத்துக்கே சென்றவள் மீனாட்சி. அந்த வீரத்திருமகளை திருமணம் செய்தவர் சிவன். எனவே, அம்பாளுக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.


** சமீப காலமாக மக்கள் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மை தானா?

ஆன்மிக ஈடுபாடு என்பது மக்களிடம் எப்பொழுதுமே குறைந்ததில்லை. இடைக்காலத்தில் கோயில்களுக்குச் செல்வதில் சிறிய சரிவு ஏற்பட்டிருந்தது. காரணம் கடின உழைப்பு, குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர் அதிகநேரம் செலவிடுதல், "டிவி' வரவு என்று எத்தனையோ சொல்லலாம். இப்போது "டிவி' மீதான மக்களின் கவர்ச்சி குறைந்து விட்டது. எத்தனை நாள் தான் ஒரே அழுகை தொடர்களை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்! அரைத்த மாவையே அரைக்கும் வேலையைத் தானே "டிவி' செய்கிறது! எனவே, தங்கள் மனஅமைதியைக் கெடுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கைவிட்டு, கோயில்களின் பக்கம் மக்கள் திரும்பியுள்ளனர்.

* வீட்டில் உள்ள சுவாமி சிலைக்கு அபிஷேகம் செய்யாவிட்டால் தோஷம் உண்டாகுமா?

பூஜை செய்ய வேண்டும் என்று விரும்பி தானே, சிலை வைத்திருக்கிறீர்கள்! அப்படி என்றால் அதற்கான அபிஷேகம், நைவேத்யம் இவைகளைச் செய்வதில் என்ன யோசனை? தினமும் செய்ய முடியாத பட்சத்தில் வாரம் ஒரு முறையாவது அபிஷேகம் செய்யுங்கள். மற்ற நாட்களில் புஷ்பம் சாத்தி பூஜை செய்யுங்கள்.

* மற்றவர் ஏற்றிய அகல் விளக்குகளில் நாம் தீபம் ஏற்றலாமா?

யார் ஏற்றினாலும் தீபம் ஒன்று தான். சுவாமி சந்நிதியில் தீபம் ஏற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால் கிடைக்கும் பலன் தானே தவிர எரிகிற விளக்கில் ஒன்றுமில்லை. ஒருவர்
ஏற்றிய விளக்கில் நாம் மீண்டும் விளக்கேற்றினால் அவரது பாவம் நமக்கு வந்துவிடாது. நமது புண்ணியமும் அவருக்குப் போய் விடாது. சந்நிதியில் விளக்கேற்றுகிறோம் என்ற தூய சிந்தனையுடன் மட்டும் தீபம் ஏற்றுங்கள். அதிகமாக தீக்குச்சிகளை உபயோகிப்பதால் குச்சிகள் குவியும் தொந்தரவும் இருக்காது.

* நவக்கிரக படங்களை விட்டு பூஜையறையில் வைத்து வணங்கலாமா?

சுவாமி படங்கள் என்ற நிலையில் எல்லா படங்களையுமே வீட்டில் வைத்து பூஜிக்கலாம்.

* சில வீடுகளில் வாஸ்து புருஷன் படத்தை வாசலில் திருஷ்டிக்காக கட்டி தொங்க விட்டுள்ளனர். சில வீடுகளில் பூஜையறையிலேயே வைத்துள்ளார்கள். இது எந்த அளவுக்கு சரி?

சுவாமி படங்களைத் தான் வீட்டில் வைக்கலாம். வாஸ்து புருஷன் ஒரு அரக்கன். அவனுக்காகத்தான் வீடு கட்டத் துவங்கும் முன், பூசணிக்காய் வெட்டி பலி கொடுக்கிறோம். அவனது படம் வைக்கக்கூடாது.

 உற்சவர் புறப்பாட்டின் போது மூலவரை வணங்குவது சரிதானா?

மூலவரின் எழுந்தருளித் திருமேனி (விழாக்காலத்தில் பவனி வருபவர்) தான் உற்சவர். உற்சவமூர்த்தி புறப்பாடு என்பது மூலவருக்கு செய்யும் விழா. அந்நேரத்தில் நாமும் திருவீதியுலாவில் கலந்து கொண்டு தரிசிப்பது சிறப்பு. சில கோயில்களில் உற்சவர் புறப்பாடானதும், மூலவர் சந்நிதியை நடை சாத்தும் வழக்கமும் உண்டு.

* எனக்கு 84 வயது, தரையில் உட்கார்ந்து சந்தியா வந்தனம் செய்ய இயலவில்லை. நாற்காலி, ஊஞ்சலில் அமர்ந்து செய்யலாமா?

இத்தனை வயதிலும் அனுஷ்டா னங்களை விடாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களே! அதுவே, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையட்டும். நாற்காலி, பெஞ்சில் அமர்ந்து செய்யலாம். ஊஞ்சல் வேண்டாம். ஜபம் செய்யும் போது நாம் அமரும் ஆசனம் ஆடக்கூடாது.

** நிஷ்டை என்பதன் பொருள் என்ன?

புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தியானத்தில் அமர்வதே நிஷ்டை. ""ஷட்'' என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருவதே இந்தச் சொல். ""ஷ்ட கதி நிவ்ருத்தென'' என்பது இலக்கணம். அதாவது "இயக்கத்தை நிறுத்திக் கொள்வது' என்று பொருள். கண், காது, மூக்கு, வாய் உடல் ஆகியன இயங்குவதற்கு தகுந்தாற் போல் நம் மனமும் செயல்படுகிறது. கண் பார்ப்பதை காது கேட்பதை, மூக்கு நுகர்வதை, வாய் சுவைப்பதை உடல் இயங்குவதைப் பின்பற்றியே மனமும் செல்கிறது. இவற்றின் இயக்கம் அதிகமாகும் போது, மனம் நிலையில்லாமல் அலை பாய்கிறது. அமைதி குறைகிறது. மன அழுத்தம் கூடுகிறது. இந்நிலையில் மனதில் இறைவனை நிலை நிறுத்தி அமர்வது சாத்தியமில்லை. எனவே தான் முனிவர்கள் நிஷ்டை எனும் அரிய வழியைக் கையாண்டார்கள். கண்களை மூடி மனதில் இறைவனை நிலை நிறுத்தி மற்றைய புலன்களில் இயக்கத்தையும் நிறுத்திப் பழகி விட்டால் "ஏகாக்ர சித்தம்' என்னும் ஒருநிலைப்பட்ட மன அமைதி ஏற்பட்டு விடும்.

* கோயில் பிரகாரத்தில் சுற்றி வரும் பொழுது யாராவது இறந்துவிட்டால் கஜபூஜை செய்கிறார்கள். பிரேத தோஷத்திற்கு இது சரியான தீர்வா?

கஜபூஜை செய்வது விசேஷம் தான். ஆனால், அது பிரேத தோஷத்திற்கு தீர்வாகாது. பிரவேசபலி, ர÷க்ஷõக்ன ஹோமம். வாஸ்து சாந்தி ஆகிய பூஜை, ஹோமங்களைச் செய்ய வேண்டும்.

* இறைவனை எந்த வயதில் வழிபட்டால் மனம் பக்குவமடையும்?
-
இறைவழிபாட்டிற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம்? பிரகலாதன் கருப்பையிலேயே பகவான் நாமம் ஜபம் செய்யத் துவங்கிவிட்டான். திருஞானசம்பந்தர் மூன்று வயதில் தேவாரம் பாடத் துவங்கிவிட்டார். இக்காலத்தில் கூட ஒரு சிலர் இளம் வயதிலேயே இறைவனை வழிபட்டு பக்குவம் அடைந்திருக்கிறார்கள். இறைவனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பக்தியை உண்டுபண்ண வேண்டும். அந்த பக்தி அவர்களைப் பக்குவப்படுத்தி விடும்.


* விநாயகருக்கு விடலைத் தேங்காய் உடைக்கிறார்கள். அதை எடுப்பது பாவமா?
 
விக்னம் போக்குபவர் விநாயகர். அவரை வழிபட்டால் காரியத்தடை நீங்கும். தொடங்கும் பணி குறைவின்றி நிறைவேற அவரை வேண்டி விடலை போடுவர். சுவாமிக்கு படைத்த பின் அதில் எப்படி பாவம் சேரும். தாராளமாக எடுத்து உண்ணலாம்.

* வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது?

பிரம்ம முகூர்த்தம் என்னும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடத்துவது நல்லது. விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது இன்னும் சிறப்பு.

* கிரகப்பிரவேசத்தின் போது முதலில் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?

பசு லட்சுமியின் அம்சம். தர்ம தேவதையின் அடையாளம். பால் தருவதால் "கோமாதா' என்று தாயாகப் போற்றுவர். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

* பவுர்ணமி பூஜையை பகலில் செய்யலாமா?

பவுர்ணமியன்று வீட்டில் செய்யும் பூஜையை பகல் அல்லது மாலையிலும், கோயில்களில் இரவிலும் செய்வது சிறந்தது. பவுர்ணமி நிலவு உதயமான பிறகு கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வெளிபிரகாரத்தை வலம்வருவது ஆரோக்கியத்துக்கு நல்லது. மனதைரியமும் வளரும்.

** திருநீறு இடுவதற்கு எந்த விரலைப் பயன்படுத்த வேண்டும்?
.
திருநீறு இடுவதற்கு வலக்கையில் ஆள்காட்டிவிரல், சுண்டுவிரலை கொம்பு போல நீட்டியபடி மற்ற மூன்று விரல்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு ரிஷப முத்திரை என்று பெயர். பூசும்போது ஓம் சிவாயநம, ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ போன்ற மந்திரங்களைச் ஜெபிக்க வேண்டும். சிந்தாமல் சற்று நிமிர்ந்தபடி பூச வேண்டும்.

*பரிகாரத்திற்கு கட்டுப்படாத பாவம் இருக்கிறதா?

உடலில் நோய் ஏற்பட்டால் தான் மருந்து சாப்பிட வேண்டும். பரிகாரமும் அதுபோலத்தான். அறியாமையால் ஏற்படும் தவறுகளுக்கு, அதாவது தெரியாமல் செய்துவிட்ட பாவத்திற்கு பிராயச்சித்தம் தான் பரிகாரம். தெரிந்தே செய்யும் பாவங்களுக்கு பரிகாரம் செய்து பயனென்ன! பாவமே செய்யாமல் வாழ முயல்வது தான் சிறந்தது.

கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்?

ஒருவர் இறந்த பிறகு அவரது ஆவியின் பயணம் பற்றிக் கூறும் நூல் கருட புராணம். இறப்பதற்கு முன் செய்த பாவ புண்ணிய பலனை உயிர் அனுபவிப்பதை அது விளக்குகிறது. இறந்தவரின் பிள்ளைகள் செய்யும் கர்மாக்களினால் துன்பத்திலிருந்து விடுபட்டு பிதுர் உலகம் செல்வதையும் கூறுகிறது. இதனால் சாதாரண நாட்களில் இதனைப் படிக்க கூடாது என்பர். ஆனால், இந்நூலில் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டால் நம்மிடம் தவறுகள் குறையும். புத்தகம் என்பது மற்றவர் படிக்கத் தான். இறந்த வீட்டில் பத்து நாளுக்குள், இந்நூலை ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்பர். கோயில், மடங்களில் தகுதியான ஒருவர் படிக்க மற்றவர் கேட்கலாம்.

* திருப்பாவையை மார்கழியில் மட்டும் தான் பாடவேண்டுமா?

ஆண்டாள் கொண்டிருந்த கிருஷ்ண பக்தியை வெளிப்படுத்தும் நூல் இதுவாகும். இதைப் பாடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும். நீங்காத செல்வம் கிடைக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் மணவாழ்வு கைகூடும்.எந்த மாதத்திலும் படிக்கலாம்.

*வீட்டில் ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் செய்ய நினைக்கிறேன். என் எண்ணம் சரியானது தானா?

மிக சரியானது. நீங்கள் ஹோமம் செய்வதோடு பிறரையும் செய்யச் சொல்லுங்கள். ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல! உங்கள் ஊரையே காப்பாற்றும். இப்படி எல்லோரும் செய்து வந்தால் காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படும். நன்கு மழை பெய்யும். இயற்கை சீற்றம் ஏற்படாது. ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும். கடந்த சில ஆண்டுக்கு முன் நிகழ்ந்த போபால் விஷவாயு, தினமும் ஹோமம் செய்த ஒருவர் வீட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* * சனி பகவானின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

சனீஸ்வரரையும் ஈஸ்வர பட்டத்தோடு பகவான் என்று தான் குறிப்பிடுகிறோம். அவர் இறைவனின் பிரதிநிதியாக இருந்து நம் பாவபுண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை நமக்கு வழங்குகிறார். அவரைக் கண்டு அஞ்சத் தேவை யில்லை. விரும்பினால், அனுகிரக சனீஸ்வரராக சாந்த கோலத்தில் வைத்து வழிபடுங்கள்.

* மாலையில் தீபமேற்றி வழிபட்ட பின், கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடலாமா?

சந்தேகமே வேண்டாம். தாராளமாக வீட்டில் தீபமேற்றிய பின் கோயிலிலும் தீபமேற்றி வழிபடுங்கள். அதனால், உங்களுக்குப் புண்ணியம் பன்மடங்கு சேரும்.


127 comments:

  1. ஆடி அம்மாவசை அன்று வீட்டில் அலங்கார சிலைகளை இடம் மாற்றலாமா

    ReplyDelete
    Replies
    1. ஆடி அம்மாவசை அன்று வீட்டில் அலங்கார சிலைகளை / தெய்வ சிலைகளை இடம் மாற்றலாமா ?

      Delete
    2. ஆடி அம்மாவசை அன்று வீட்டில் அலங்கார சிலைகளை / தெய்வ சிலைகளை இடம் மாற்றலாமா ?

      Delete
  2. ஆடி அம்மாவசை அன்று வீட்டில் அலங்கார சிலைகளை இடம் மாற்றலாமா

    ReplyDelete
  3. மரியாதைக்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம்,

    ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது, தாங்கள் மாமிசத்தை கருமம் என்று வருணித்து இருக்கிறீர்கள். ஒருவர் தமது மாமிச உணவு பழக்கத்தால் பக்தியில் போலித்தனம் கொண்டவர் என்று சொல்லிவிட முடியுமா? உண்ணத் தகுந்தது எது வென்றாலும் அது உணவுதானே! ஹிந்து ரிக் வேதமே பிராமணர்கள் எப்போது எப்படி எப்படி எல்லாம் பங்குபோட்டு மாமிசத்தை உண்ணலாம் என்று விளக்கி உள்ளதே! ஹிந்து தெய்வங்கள் பல ஆயிரம் இருக்கிறதே. ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு விதமாக மக்களால் வழிபடப்படுகிறதே! புராணம் கொண்ட தெய்வம் புராணம் இல்லாத தெய்வம் என்று வேறுபாடு இருக்கிறதே ஏன்? அதைப்போல புலால் விரும்பும் தெய்வங்களும் ஹிந்து தெய்வங்கள் பட்டியலில் இருக்கிறதே. அந்த தெய்வங்கள் ஹிந்து தெய்வங்கள் இல்லை என்று நீங்கள் சொல்வீர்களா? ஆம் அப்படித்தான் என்றால் தயவு செய்து அதை பிரகடனப்படுத்திவிடுங்கள். எங்கள் மக்களும் புரிந்து கொள்வார்கள்.

    வேறு ஒரு கேள்வி விளக்கமாக உங்களுக்கு புரியவில்லை என்று கேள்வி தகுதியிலிருந்து அதை நீக்காமல் பதில் சொல்லும் நீங்கள்,
    இன்னொரு கேள்வி பதில் இடத்தில், எந்த தெய்வ கோயிலுக்கு போகிறேன் என்று விளக்கமாக சொல்லாமல் "அசைவம் சாப்பிடும் நாட்களில் கோயிலுக்கு செல்வது தவறுதானா?" என்று தெளிவில்லாமல் இருந்த கேள்வி உங்களுக்கு நன்றாக புரிந்துவிட்டதோ?

    உங்கள் பதிலில்லிருந்து ஒன்று புரிகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக அவர்களின் உயர்வுக்காக பதில் சொல்கிறீர்கள் என்று. நீங்கள் சாஸ்திரங்கள் பேசுவதைப்போல பாசாங்கு செய்து உங்களுடைய பிராமணியத்தை உயர்த்தி பேசுகிறீர்கள் . சரிதானே. அதுவும் சரிதான் ஹிந்து தர்மப்படி பிராமணர்கள்தான் தம்மை ஹிந்து அதுவும் சனாதன தர்ம ஹிந்து என்று சொல்லிக்கொள்ள உரிமை உள்ளது. நன்றாக புரிகிறது. தொடரட்டும் உங்கள் பண்பான பதில்கள்.

    "எங்கிருந்து கிடைத்தாலும் ஏற்புடையது எனில் அதை உணவாக உண்ணலாம் என்பதே உணவு நீதி."

    ReplyDelete
    Replies
    1. அருமை . பிராமணர்களின் கைகள் ஓங்கி இருப்பது எல்லா இடங்களிலும் தெளிவாக புரிகிறது . இது கூடாது

      Delete
    2. ஆமாம் Sir,சரியாக சொன்னீர்கள்.பிராமணருக்கு மட்டும் அருள்வழங்கும் கடவுள் எங்கும் இல்லை.எவ்வளவு சொல்லியும் இவர்கள் திருந்துவதாய் இல்லை.நம் இந்து தெய்வங்கள் ஏழைப் பங்காளிகள்.அதை உணர்ந்து ஒத்துக்கொள்ள மறுக்கும் இந்தக் கும்பலை ஆண்டவன் தான் திருத்த வேண்டும்

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. மேற்கு பார்த்த அனுமன் வழிபாட்டின் சிறப்பு என்ன வடமாலை சாத்தலாம ?

    ReplyDelete
  7. மேற்கு பார்த்த அனுமன் வழிபாட்டின் சிறப்பு என்ன வடமாலை சாத்தலாம ?

    ReplyDelete
  8. #கன்றுக்காக சுரக்கும் பாலை நமக்கும் கொடுக்கும் பசுவை "கோமாதா' என அழைக்கிறோம்.# அது எங்கே தருகிறது நாமாக தானே எடுத்துகொள்கிறோம் , பசும்பால் அசைவம் ஆகாதா ?

    ReplyDelete
  9. சூலம் பார்த்து பொங்கல் வைக்கும் திசை ?

    ReplyDelete
  10. கோவிலில் ஈசான மூலையில் விநாயகர் சிலை அமைக்கலாமா ???

    ReplyDelete
  11. கோவிலில் விளக்கு ஏற்றி அதை எடுத்து வைக்கும் போது அது கைதவறி கீழே விழுந்துள்ளது, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தயவு செய்து கூறவும்.

    ReplyDelete
  12. இறந்தவர்களுக்கு திதி எப்படி பார்த்து கும்பிட வேண்டும்
    இறந்த தேதி 13.6.2005 வளர்பிறை சஷ்டி திதி

    ReplyDelete
  13. பெரும்பாலான கடவுள்களும் கோவில்களும் ஏன் கிழக்கு பார்த்து உள்ளன?

    ReplyDelete
    Replies
    1. Suriya veliyam padathan, negative energy varamal iruka, positive vibration uruvaga

      Delete
    2. Suriya veliyam padathan, negative energy varamal iruka, positive vibration uruvaga

      Delete
    3. Suriya veliyam padathan, negative energy varamal iruka, positive vibration uruvaga

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. தந்தை இறந்த ஒரு ஆண்டுக்குள் கிரகப்ரவேசம் ஏன் செய்யக்கூடாது

    ReplyDelete
  16. linga uruva silai vitil veithu vanagalama

    ReplyDelete
  17. ப்ரமாஸ்திரம் என்றால் என்ன? அதன் பலம் என்ன?

    ReplyDelete
  18. எங்கள் குடும்பத்திற்கு கன்னிதெய்வமாக உள்ள என் தங்கையின் படத்தைவைத்து வழிபடலாமா...? சிலர் கூடாது என்கிறார்கள்... எனவே எனக்கு விளக்கமாக உதவவும்...

    ReplyDelete
  19. எங்கள் குடும்பத்திற்கு கன்னிதெய்வமாக உள்ள என் தங்கையின் படத்தைவைத்து வழிபடலாமா...? சிலர் கூடாது என்கிறார்கள்... எனவே எனக்கு விளக்கமாக உதவவும்...

    ReplyDelete
  20. நான் கடை வைத்து உள்ளேன்..கடையில் வாரம்தோறும் வெள்ளிகிழமை நாளில் மாலை நேரத்தில்(6 மணிக்கு பின்பு அல்லது இருட்டிய பின்பு) கடை சாத்தும் போது பூ,சூடம் மற்றும் பத்தி ஆகியவற்றை கொண்டு பூஜை செய்வது வழக்கமாக கொண்டு உள்ளேன்.ஆனால் இது சரியா? அல்லது காலை நேரத்திலயே பூஜை செய்யலாமா?

    ReplyDelete
  21. அமாவாசை, பௌர்ணமி, கிரகண நாட்களில் ஒரு மந்த்திரத்தை ஒரு முறை சொன்னால் ஆயிரம் முறை கூறிய பலன் கிடைகும் என்று சொல்கிறார்களே அது உண்மையா?

    ReplyDelete
  22. வணக்கம் எனது குழந்தைக்கு ஒன்னு அரை வயது ஆகிறது அவன் அறியாமல் பூஜா அறையுல் இருக்கும் சாய் பாபா சிலையை தூக்கி கிலே போட்டு விட்டான் சிலையின் காய் மட்டும் உடைந்தது எனக்கு மனசு மிகவும் கவலைய உள்ளது எப்படி நாடப்பது நல்லதா கேட்டதா என்று

    ReplyDelete
    Replies
    1. கடவுள் உருவ சிலை தவறி விழுந்தாள் அதில் பாவம் எய்தும் இல்லை, அதனை முறையாக ஆறு, கடல் நீர் போன்ற ஓடும் நீரில் விட வேண்டும்.

      Delete
  23. பூ போட்டு பார்த்தலில் திருநீறு வந்தால் நினைத்த காரியம் நடக்குமா? அல்லது கும்குமம் வந்தால் நினைத்த காரியம் நடக்குமா?

    ReplyDelete
    Replies
    1. பூ போட்டு பார்த்தல் விளக்கம் தேவை :
      பூ போட்டு பார்த்தலில் வெள்ளை நிற பூவந்தால்/ திருநீறு வந்தால் நினைத்த காரியம் நடக்குமா? அல்லது சிவப்பு நிற பூவந்தால் /குங்குமம் வந்தால் நினைத்த காரியம் நடக்குமா? - கே. ஆர். சீனிவாசன்

      Delete
  24. அய்யா வணக்கம் எங்கள் வீடு வடக்கு பார்த்த வாசல்
    வடக்கு,கிழக்கு,தெற்கு என மூன்று வாசல் வைத்து வீடு கட்டி உள்ளோம் இது சரியா

    ReplyDelete
  25. வணக்கம் ஐயா எனது தந்தை கடந்த செப். மாதம் இறைவன் திருவடி அடைந்தார். ஆண் வாரிசுஇல்லாத காரணத்தால் மருமகன் (எனது கணவர்) கொள்ளி வைத்தார். இப்போது எனது சந்தேகம் நான் எனது வீட்டில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் வரலட்சுமி பூஜை செய்யலாமா அல்லது முதல்வருடம் திதி கொடுத்தபின் தான் பூஜை செய்யவேண்டுமா?

    ReplyDelete
  26. எங்கள் குல் தெய்வ கோவிலில் உற்சவர் சிலை செய்ய விரும்புகிறேன்
    இதற்கு தங்களின் செய்முறை விளக்கத்தை தர வேண்டும் நன்றி


    ReplyDelete
  27. அமாவாசையன்று கோவிலுக்கு செல்லக்கூடாது என்று ஜோதிடர் கூறுகிறார் உண்மையா......

    ReplyDelete
  28. உடைந்த சிலை வீட்டில் வைக்கலாமா ????

    ReplyDelete
    Replies
    1. மங்களமிட்டு கோயிலில் சமர்ப்பிக்கவும்

      Delete
    2. kovilil irunthu konduvantha thengai mattrum prasadham varum valiyil thavari roadtil vilunthathu ithuku enna artham

      Delete
  29. ஆணின் அண்ணன் மகள் பூப்பு அடைந்தால் எத்தனை நாளைக்கு கோவிலுக்கு செல்ல கூடாது

    ReplyDelete
  30. ஆணின் அண்ணன் மகள் பூப்பு அடைந்தால் எத்தனை நாளைக்கு கோவிலுக்கு செல்ல கூடாது

    ReplyDelete
  31. குலதெய்வ கோயில் புதுப்பித்து கட்டும்போது இடம் மாற்றி கட்டலாமா?

    ReplyDelete
  32. வெள்ளி கீழே கிடைக்கும் பலன்கள் enna???

    ReplyDelete
  33. முனிஸ்வரர் கோவிலுக்கு எந்த மரம் வைக்கலாம்

    ReplyDelete
  34. அம்மன் சிலை வீட்டில் வைத்து வாழிபாடு செய்யலாமா?

    ReplyDelete
  35. வெள்ளி,செவ்வாய் கிழமைகளில் தான தர்மம் செய்யலாமா

    ReplyDelete
  36. செவ்வாய் வெள்ளி கிழமைகளில் தான தர்மம் செய்யலாமா

    ReplyDelete
  37. திதீ கொடுக்கும் வீட்டில் பிறர் சாப்பிடலாமா. அந்த வீட்டாருடன் சம்மந்தம் இல்லாதவர்கள்

    ReplyDelete
  38. என்னுடைய பாபா சிலை கீழே விழுந்து உடைந்து விட்டது..மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.. அதனால் எதுவும் கெடுதல் வருமா??

    ReplyDelete
  39. Vedu poojai arayil gomatha silai veipathin palan enna??

    ReplyDelete
  40. வாரத்தில் எந்த எந்த நாட்களில் முகச்சவரம் செய்யலாம் / செய்யக்கூடாது

    ReplyDelete
  41. கோயிலி்ல் சாமி சிலையில் இருந்து வேண்டுதலின் போது பூ மாலை எந்த பக்கம் விழந்தால் நல்லது.? நான் வேண்டும் போது முருகன் சிலையில் இருந்து இடது பக்கமாக மாலை விழந்தது இது நல்லதா கெட்டாதா ? பதில் சொல்லுக எனக்கு இடது பக்கம் விழந்ததால் பயமாக உள்ளது.....

    ReplyDelete
  42. கோயிலி்ல் சாமி சிலையில் இருந்து வேண்டுதலின் போது பூ மாலை எந்த பக்கம் விழந்தால் நல்லது.? நான் வேண்டும் போது முருகன் சிலையில் இருந்து இடது பக்கமாக மாலை விழந்தது இது நல்லதா கெட்டாதா ? பதில் சொல்லுக எனக்கு இடது பக்கம் விழந்ததால் பயமாக உள்ளது.....

    ReplyDelete
  43. காலையில் குளித்து விட்டு ஈரதுண்டுடன் வீட்டில் சுவாமி கும்பிடலாமா...?

    ReplyDelete
  44. கோவில்களில் உள்ள கடவுள் சிலை மற்றும் ஒவியங்களை தொட்டு வணங்கலாமா??? தோழரே

    ReplyDelete
  45. கோவில் களில் பூஜை முடிந்து தரும் விபூதியை பூசாரி தருவதற்கு பதில் நாமாக எடுத்து நெற்றியில் இடலாமா???
    தோழரே

    ReplyDelete
  46. கோவில்களில் உள்ள கடவுள் சிலை மற்றும் ஒவியங்களை தொட்டு வணங்கலாமா??? தோழரே

    ReplyDelete
  47. அய்யா ..! வினாயகருக்கு சாத்துகிற வெள்ளி கவசம் ஆலயத்தில் பூஜை முடிந்த பின் வீட்டில் பூஜை அறையில் வைத்து உள்ளாேம் ... மற்ற சுவாமி படங்களை வணங்குவது பாேல் தினமும் மலர் சார்த்தி பத்தி ஏற்றி வணங்குகிறாேம் ...இது சரியானதா ... கவசம் வீட்டில் இருக்லாமா ..எந்த முறையில் வணங்க வேண்டும் என்று தெரிவிப்பிர்களா ..? நன்றியுடன் செல்வராஜன் ...!

    ReplyDelete
  48. பிரதோஷ காலத்தில் இரவு நேரத்தில் தாம்பத்யம் பண்ணலாமா

    ReplyDelete
    Replies
    1. பிரதோஷ காலம் முடிந்து மூன்று மணி நேரம் கழித்து ...

      Delete
  49. தலையில் வைத்த பூ கீழே விழுந்தால் அதனை திரும்ப தலையில் வைக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. சுத்தமான இடத்திலோ ... கோவிலிலோ ... மறுபடியும் எடுத்து வைத்துக் கொள்ளலாம் ... தூசு ... அழுக்கு ... மாசு நீர் இவற்றில் விழுந்தால் ... விட்டு விடவும் ...

      Delete
  50. அலரி பூவை தலையில் வைக்கலாமா????

    ReplyDelete
  51. ஆலயங்களில் மற்றவர்கள் உடைக்கும் சிதர் தேங்காயை வீட்டில் எடுத்து வந்து சமைத்து உண்ணலாமா, உண்ண கூடாதா

    ReplyDelete
    Replies
    1. உணவு விடுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்கிறார்கள் ... இறை பக்தியுடன் நாம் உண்டால் வாழ்க்கையில் ஒரு குறையும் இல்லை ... ஆனால் அனுபவம் வேறு மாதிரி சொல்கிறதையா ... நாற்பது வருடங்கள் முன்பு பள்ளி மாணவர்கள் சிலர் வகுப்பு ஆசிரியருக்குத் தெரியாமல் வெளிவந்து சிதறு தேங்காயை ... விழுந்து அடித்துப் பறித்து உண்டவர்கள் ... இன்று கோடீஸ்வரர்கள் ஆகியும் ... மனதளவில் பிச்சைக் காரர்களாகவே உள்ளனர்... எத்தனை கோடி வந்தாலும் போதவில்லை ... சிலர் ரகசியம் பகிர்ந்ததற்கு சிவபிரான் என்னை மன்னிப்பாராக ...

      Delete
  52. 2 வருடம் முன்பு எங்க வீட்டில் சாமி கும்பிட்டு இருக்கும் போது ஒருவருக்கு நான் பணம் கொடுத்து விட்டேன் அதிலிருந்து எங்களுக்கு மிகவும் கஷ்டமா உள்ளது. அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஐய்யா தவறான கருத்து ... சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்கும் போது... அதற்கு முன்னும் பின்னும் ... வெள்ளிக்கிழமை - செவ்வாய்க்கிழமை ... இரவு ... பகல் ... என எப்போது கொடுத்தாலும் பணம் வளரும்... ஆனால் இதில் சங்கடம் என்றால் ... வாங்குவோருக்குக் குறையலாம்.... எனவே கொடுப்பவர் ... மனம் நிறைய ... முகம் மலரப் புன்னகையோடு ... இறைவா ... வாங்குபவர் நலிவுரக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொடுக்கலாம்....
      நீங்கள் மூலகாரணத்தை ஆய்வு செய்யுங்கள் ... தவறான ... தவிர்க்கக்கூடிய செலவுகளை ... ஆடம்பரச் செலவுகளை ஆராயுங்கள்...

      Delete
  53. விட்டில் லட்சுமி சாமி படம் வெள்ளிகிழமை உடைந்துவட்டது என்ன செய்வது

    ReplyDelete
  54. விட்டில் லட்சுமி சாமி படம் வெள்ளிகிழமை உடைந்துவட்டது என்ன செய்வது

    ReplyDelete
  55. இருகை கூப்பிமுருகன் வாணங்குவது போல் உள்ள படத்தை விட்டில் வைத்து வாணங்கலாம

    ReplyDelete
    Replies
    1. வணங்கலாம் நல்லதே ... ஒரு கையில் வேல் ... மறு கையால் ஆசீர்வளிப்பது போல உள்ள படம் மிகவும் சிறப்பு ... (வேப்ப மரம் - புங்க மரம்) வீட்டைச் சுற்றி மரம் நடுவதாலும் ... பொது இடங்களில் மரம் நடுவதாலும் மாணவர்களுக்கு கல்வி கற்கும் திறன் முருகன் அருளால் வளரும்... மக்குப் பிள்ளையும் ...மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் பிள்ளையாக மாறும் .... சப்பாணிப் பிள்ளைகளும் முறுக்குத் தசைகளுடன் பொலிவு பெறுவர்... ...

      Delete
  56. வீட்டில் உள்ள கண்ணாடி கை தவறி உடைந்து விட்டது அதற்கு என்ன பலன்

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது ... மனம் அதிரும் படி ... வருந்தும் படி ... செய்தி வரலாம்... தெரிந்த வட்டத்திலோ ... சுற்றுப் புறத்திலோ ... ... இறைவனைத் துதித்து ... இல்லாதோருக்கு உதவுங்கள் ... அனைத்தும் சரியாகும்

      Delete
  57. Sai Baba silai (Small size - oru ullankai alavu) veettil vaithu poojai seiyalama???. Please reply to dhanushbalaji.sivaraman@gmail.com in tamil langauage.
    And Give Some tips regarding this...

    ReplyDelete
  58. ராகு காலத்தில் வீட்டில் பூஜை செய்யலாமா

    ReplyDelete
  59. வீட்டில் கர்பிணி இருக்க பசுமாடு இருப்பது நல்லதா

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நல்லது

      Delete
  60. வீட்டில் கர்பிணி இருக்க கர்ப்பிணியான பசுமாடு இறப்பது நல்லதா கெட்டதா

    ReplyDelete
    Replies
    1. ஏழை விவசாயி ... ஏழை அந்தணர் ... பள்ளி மாணவர்கள் போன்றவர்களுக்கு பண உதவி ... பொருள் உதவி ... உழு பொருள் ...வஸ்திரம் ... எழுது பொருள் ... கொடுக்கலாம் (செய்து விட்டு) .... கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் போதும் ... இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும் ....

      Delete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. ammanai aarathanai seiyum podhu amman silayil irundhu poo thaanaka vilundhadhu..

    idhu nalladha kettadha pls send me

    ReplyDelete
  63. +2 ஹால் டிக்கெட் கொடுக்கும் போது தவறுவது நல்லதா?

    ReplyDelete
  64. விளக்கேற்றும்ஐந்து வகை எண்ணையில் தேங்காய் எண்ணை வருகிறதே ஆனால் தாங்கள் தேங்காய் எண்ணை சாப்பாட்டுக்கு என்று சொல்கிறீர்கள் விளக்கம் தேவை

    ReplyDelete
    Replies
    1. ஐந்து எண்ணெய்கள் கலந்து ... தீப விளக்குகளில் பயன் படுத்தலாம் ....( மூன்று எண்ணெய்களும் ) ... தனியாக தேங்காய் எண்ணெய் மட்டும் கூடாது ...

      Delete
  65. மகனின் திருமணத்திற்கு மண்டபத்துக்கு பணம் கட்டிய அன்று வீட்டில் இருந்த மாட்டு கன்று இறந்துவிட்டது. இன்னமும் நிச்சயதார்த்தம் செய்யவில்லை. இதற்கு ஏதாவது பூஜை அல்லது பரிகாரம் செய்யவேண்டுமா?

    ReplyDelete
  66. En APPA iranthu 12vathu naal poojain pothu thengai thanaga virisal vittathu ithu ethenum apadagunama

    ReplyDelete
  67. வீட்டில் ராஜ அழங்காரத்துடன் கூடிய முருகன் சிலை ைவக்கலாமா?

    ReplyDelete
  68. வீட்டில் நாள் முழுவதும் தீப விளக்கு எரிய விடலாமா

    ReplyDelete
  69. Veetil poojai arai clean pannum pothu Samy silaiyin thalai udaindhu vitathu. Ithanal ethum sangadam Varuma?

    ReplyDelete
  70. இரவு நேரங்களில் ஊருக்கு கிளம்பும் போது வார சூலம் பார்க்க வேண்டுமா

    ReplyDelete
  71. This comment has been removed by the author.

    ReplyDelete
  72. ஐயா
    நான்கு வருடத்திற்கு முன் துர்மரணம் அடைந்து மறைந்த என் அண்ணனின் பெயரை குழந்தைக்கு வைக்கலாமா.மற்றும் வீட்டின் பெயராக வைக்கலாமா ஆலோசனை கூறவும்

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. என் மாமா வீட்டில் சாமி படம் விளக்கில் உள்ள தீபம் பட்டு எறிந்து விட்டது ஏதேனும் பரிகாரம் உண்டா அய்யா

    ReplyDelete
  75. நாய் கடிக்கும் படி கனவு வந்தது அது நல்ல அறிகுறியா இல்லை கெட்ட அறிகுறி யா??

    ReplyDelete
  76. கண்ணாடி உடைந்தால் என்ன இதில் ஏற்படும் நன்மை தீமை விளக்கம் உண்டா அய்யா இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா???

    ReplyDelete
  77. வணக்கம் என் கணவரின் அண்ணன் மகள் நான் தலையில் வைத்த பூவை கேட்டு அடம்பிடிப்பால் என்னுடைய மாமனார் மாமியார் குழந்தையை அழவைக்க வேண்டாம் கொடு என்பார்கள் ... எனக்கு திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது .... சமீபத்தில் நாங்கள் குடும்பத்தோடு குலதெய்வம் கோவில்க்கு சென்றோம் கோவிலுக்கு உள்ளேயும் நான் வைத்த பூவை கேட்டு அழுதால்.. மாமியார் பூவை கொடு என்றார்கள். .. நான் தந்துவிட்டேன் ... அன்றிலிருந்து மூன்றாவுது நாள் என் கணவனுக்கு உடம்பு சரியில்லை... இன்றோடு 10 நாட்கள் ஆகிய நிலையில் உடம்பு சரியாகவில்லை ... இதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா?...

    ReplyDelete
  78. தந்தை இருக்கும்போது அம்மாவசை தர்பணம் செய்யலாமா?

    ReplyDelete
  79. ஐயா,
    வீட்டில் சுவாமிக்கு செய்யும் அக்ஷ்டோத்ர/ சஹஸ்ர அர்ச்சனையில் விபூதியால் அர்சனை செய்யலாமா. தயவு செய்து எனது எனது ஐய்யத்தை நிவர்தியுங்கள்.
    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

    ReplyDelete
  80. ஐயா எருமை வெள்ளி கிழமை அன்று கன்று ஈன்றால் அது மிகவும் கெட்ட சகுனம் என்கிறார்கள் உண்மையா?

    ReplyDelete
  81. வணக்கம். பெண்கள் வீட்டிலேயே நடைபயிற்சி செய்வது வீட்டுக்கு கெடுதலா

    ReplyDelete
  82. பூஜை அறையில் மணி இரவில் கீழே விழுந்தால் என்ன nadakum

    ReplyDelete
  83. Sami arayil ulla sami photovil virisal vilunvathal ethum abasakunama

    ReplyDelete
  84. கோவிலில் கருபாசமியையும் முருகரையும் ஓர் கருவறையில் வைக்கலாமா ?? அப்படி வைத்தல் என்ன நடக்கும் ?? ஒரு சில முட்டாள்கள் தவறு செய்கிறார்கள் . எப்படி மாற்றுவது

    ReplyDelete
  85. பெண்கள் நாரயணனின் நாமம் நெற்றியில் இட்டுக்கொள்வது சரியா... எனில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏதேனும் உண்டா...

    ReplyDelete
  86. Oru kovil karuvaraiel 2 kadavul silai vaikalama iya.....

    ReplyDelete
  87. Thaivathuku veetil saitha archanai poovai podi saithu kulikalama.

    ReplyDelete
  88. Oru vetil pojai seitha vikrahangalai very vetuku eduthu pogalama

    ReplyDelete
  89. Velli kizhamai poojai mudithu vitu sanikizhamai kaalaiyil vilakil oru roja roja vizhunthu irunthathu ithan artham enavo

    ReplyDelete
  90. என் தந்தை இறந்த 7வது நாளிலிருந்து இரவு 7 மணி அளவில் காகம் வாசலில் அமர்ந்து கரையும். உணவு வைத்ததுடன் சாப்பிட்டு சென்று விடும். அதனால் என்ன பலன் கூறவும்.

    ReplyDelete
  91. நான் வீட்டில் ஆடிப்பெருக்கு சாமி கும்பிட்டு தாலி நூல் மாற்றி விழுந்து வணங்கி எழும் பொழுது சாமி தீப சுடர் பட்டு என் முடி எரிந்து விட்டது இதனால் ஏதும் சங்கடமா???

    ReplyDelete
  92. ஐயா வணக்கம்
    இறந்தவர்களின் சிலை கருங்கல்லால் ஆன சிலையை வீட்டின் ஊள்ளே வைத்து பூஜிக்கலாமா

    ReplyDelete
  93. kovilil irunthu kondu vantha thengai mattrum prasadham thavari roadtil vilunthuvittathu ithuku enna artham

    ReplyDelete
  94. *வீட்டில் கோமாதா சிலை வழிபாடு* : கை பிடி அளவு உள்ள கோமாதா சிலை வைத்து வழிபடலாமா.. அதற்கு நம்மால் முடியும் எளிய பூஜை வழி முறைகள் கூறுங்கள் ..

    ReplyDelete
  95. Shivan kovilil oru.sivanadiyaar yenaku vazhaipazham thanthar . Nan vanga maruthum avar kizha vaithu vitu yeduthoku nu thalaiyasaithar . Pinbu sivalingathirkum poojai seiya vantha swami oruvar piravi vaerai aruthuvitar vangikoma nu sonar athan vilakam yena konjam solunga swami
    .

    ReplyDelete
  96. ENNODA OFFICE IL SWAMY PHOTO UDAINTHU VITTATHU , ithunala ethuvum kettathu nadakkuma?

    ReplyDelete
  97. This comment has been removed by the author.

    ReplyDelete
  98. அப்பா இறந்து விட்டார், அவரது பெயரில் எமது குடும்பத்திற்கு அர்ச்சனை செய்யலாமா?

    ReplyDelete
  99. SAMI PADAM .VEETIL .ENTHA DISAI PATHU VAIKAVUM...NANGAL ENTHA DISAI PATHU NAMASKARAM SEIA VENDUM...PLZ KOORAVUM SIR

    ReplyDelete
    Replies
    1. தென் திசை தவிர எந்த திசை பார்த்து வேண்டுமானாலும் வைக்கலாம் ... நாம் வணங்கும் போது தென் திசை பார்த்து இறைவனை வணங்க கூடாது.. தென் திசையில் இறந்தவர்களின் படம் வைத்து கொள்ளலாம் ..கிழக்கு வடக்கு பார்த்து சுவாமி படங்கள் வைப்பது நல்லது...

      Delete
  100. எனது குல தெய்வம் கருப்பசாமி ஐ பிடிமண் எடுத்து வழிபட நினைக்கிறேன்... அதற்கான வழிுறைகளைக் கூறுங்கள்....

    ReplyDelete
  101. Sir husband wife ondraga erugum bothu samyaku deppam yatralama..ila thali kulithu vittu tha seiyanuma..

    ReplyDelete
  102. Vassthu Nallil Boomi poojai ragu kalathil pannalama?

    ReplyDelete