வாலிபம் என்பது உணர்ச்சிவேகம் கட்டறுத்துக் கொண்டு புரளும் பருவம். தற்காலத்தில்
மிதமிஞ்சிய சக்தியுடன் ஜனங்கள் மீது ஆளுகை செலுத்திக் கொண்டிருக்கின்ற பாலிடிக்ஸ்,
சினிமா, ஸ்போர்ட்ஸ் ஆகியவை, அத்தனை பேரையும் உணர்ச்சி வேகத்தில் தூண்டி விடுகின்றன.
வாலிப வயசில் இப்போது படித்துக் கொண்டிருப்பவர்கள் ஒழுக்கத்துடன் வாழ்வது இரண்டு
பங்கு சிரமம் தான். ஆனாலும், தங்களின் எதிர்கால வளர்ச்சியை முன்னிட்டு அவர்கள் இந்த
சிரமத்தை சமாளித்தே ஆகவேண்டும்.
அதிலேயே நம் நாட்டின் தற்போதைய அமைதி, எதிர்கால அமைதி ஆகியவை அடங்கி இருக்கின்றன. வாலிபர்கள் கட்டுப்பாடு இழந்தால் அவர்களும் கெட்டுப்போய், வீட்டிலும் அமைதி குலைந்து போகும். கட்டறுத்துப் புரளும் இந்த உணர்ச்சி வெள்ளத்திற்கு அணைபோடவே, குருகுலங்களில் பெரியவர்கள் சிறுவயதிலேயே தெய்வ பக்தி, குருபக்தி, அந்த பக்தியில் இருந்து உண்டாகும் விநயம் என்கிற அடக்கம் ஆகியவற்றை வாலிபர்களுக்கு நடைமுறையாக்கிக் கொடுத்தார்கள். தற்காலக் கல்வி முறையில் தெய்வநம்பிக்கை, அதோடு கைகோத்துக் கொண்டு வரும் தர்மம், நீதி என்கிற நன்னெறிக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நன்னெறி விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைப் பெரியவர்கள் செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment