Friday, February 17, 2012

காசியாத்திரை செல்வது எப்படி?


காசியாத்திரை செல்வது எப்படி?

காசிக்கு புனிதயாத்திரை செல்வதற்கு முன்பு,இராமேஸ்வரம் வந்து இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி பின்னர் அக்னி தீர்த்தத்தில் நீராட வேண்டும்.அக்னி தீர்த்தக் கடலில் மணல் எடுக்க வேண்டும். அதை சேது மாதவர் சன்னதியில் அந்தணர் மூலம் மூன்று பிரிவாக பிரித்து பூஜை செய்ய வேண்டும்.ஒரு பிரிவை சேது மாதவர் சன்னதியில் விட்டுவிட வேண்டும்.மற்றொரு பிரிவை அந்தணருக்கு தானமாக வழங்க வேண்டும்.மூன்றாவது பிரிவை தன்னுடன் எடுத்துக் கொண்டு காசிக்குச் செல்ல வேண்டும்.

இந்த மூன்றாவது பிரிவு மணலை கங்கையில் சேர்த்திட வேண்டும்.காசியில் விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும்.அதன்பிறகு கங்கையில் நீர் எடுத்துக்கொண்டு இராமேஸ்வரம் திரும்ப வேண்டும்.கொண்டு வந்த கங்கை நீரால் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதே முறையான காசி யாத்திரை ஆகும்.

No comments:

Post a Comment