Friday, February 17, 2012

குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்?


குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்?

குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்?
உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வரவேண்டும்.ஒருவேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் வாழ்ந்துகொண்டிருந்தால்,ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரியபணத்தை மணி ஆர்டர் அனுப்பிவிடுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர்,நட்சத்திரம்,ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள்(பல இடங்களில் இதை நடைமுறையாகவே வைத்திருக்கின்றார்கள்).நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.
மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.

1 comment:

  1. ஒருமனிதன் எப்படி எனக்கு ஒன்றுக்கு மேற்ற்பட்ட அப்பா உள்ளார் என்று பெருமை அடித்து கொள்ளமுடியாதோ அதுபோல் தான் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் உண்டு என்றும் சொல்லமுடியாது

    ReplyDelete