விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். கடவுளை எண்ணி விரதம் மேற்கொள்வதால் நமது உள்ளம் தூய்மை அடைவதுடன் அறியாமையினால் நாம் செய்த தீவினைகளும், பாவங்களும் நம்மை விட்டு விலகும்.
விரதம் மேற்கொள்ளும் போது கீழ்கண்டவற்றை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
- சதாசர்வ காலமும் மனதில் இறைவனை மட்டுமே எண்ணி துதித்தல் வேண்டும்.
- தம்மை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்ளாமலும், நாவிற்கு சுவையான உணவு வகைகளை உண்ணாமலும் இருத்தல் வேண்டும்.
- கேளிக்கைச் செயல்களிலோ, வீண் விவாதங்களிலோ ஈடுபடக்கூடாது.
- பிறரைப்பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது.
- அடுத்தவர் மனம் துன்பப்படும்படியான தீய சொற்களைப் பேசக்கூடாது.
- மனதில் தான் என்ற கர்வத்தை அறவே அகற்ற வேண்டும்.
- விரும்பத்தகாத செயல்களை செய்யக்கூடாது.
- அதிகமாக தானம் செய்ய வேண்டும். அவ்வாறு, தானம் செய்யும்போது எவ்வளவு பொருள் கொடுத்தாலும், இவ்வளவு குறைவாகவே கொடுக்கிறோமே! என்ற எண்ணத்துடன் கொடுக்க வேண்டும்.
- அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment