மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் மங்கையர்கள் சூரியன் உதிக்கும் முன்னால் மாக்கோலமிட்டு மகிழ்வார்கள். மணக்கோலம் காண வேண்டிய பெண்கள், கோலத்தில் நடுவில் சாணம் வைத்து அதன் நடுவில் பரங்கிப் பூவை பதித்து வைப்பது நல்லது. மஞ்சள் வண்ணத்தில் பரங்கிப்பூ இருப்பதால் அதைப் பதித்து வைக்கும் இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.மாட்டுச்சாணம் கிருமி நாசினி என்பதால் இல்லத்தில் உள்ளோர்க்கு ஆரோக்கியத்தை வழங்கும். பூ மலர்ந்திருப்பது போல, வீட்டில் உள்ளவர்களும் மலர்ச்சியோடும் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
புஷ்பவதி (ருது) ஆகாத பெண்கள் இவ்வாறு மார்கழியில் பூ வைத்து, கோலமிட்டு இறைவழிபாட்டை மேற்கொண்டால் புஷ்பவதியாகும் வாய்ப்பு உருவாகும். எனவே வண்ணமயமான வாழ்வு அமைய வாசலில் பூ வைத்து வழிபடுவது நல்லது.
No comments:
Post a Comment