ஜமதக்கனி முனிவர்- ரேணுகா தம்பதியின் மகன் பரசுராமர். பதிவிரதையான ரேணுகா தினமும்
குளத்துக்கு சென்று, பச்சை மண்ணில் பானை செய்து, பூஜைக்குரிய தண்ணீர் எடுத்து
வருவது வழக்கம். ஒருநாள் குளத்துக்கு சென்று தண்ணீர் எடுக்க சென்ற போது,
சித்திரரதன் என்பவன் தன்னுடைய மனைவியருடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த ரேணுகா மதி மயங்கினாள். (இதே கதையை ஒரு கந்தர்வனின் நிழல் தண்ணீரில்
தெரிந்ததாகவும், அதை ரேணுகா பார்த்து மயங்கியதாகவும் சொல்வர். கர்நாடகத்தில், சற்று
வித்தியாசப் படுத்துகிறார்கள்) இதனால் அவளது கற்புத்தன்மைக்கு களங்கம் ஏற்பட்டது.
இதனை ஞானதிருஷ்டியால் அறிந்த ஜமதக்கனி, பெற்ற தாயை கொல்லுமாறு பரசுராமருக்கு
உத்தரவிட்டார். பரசுராமரும் அதைச் செய்தார். இதற்கு பிராயச்சித்தமாக சிவனை நோக்கி
தவம் இருந்தார்
No comments:
Post a Comment