கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் சாஸ்தா. இவர் பங்குனி உத்திரத்தன்று அவதரித்தார். இவரை அஷ்டசாஸ்தா என எட்டுவித கோலங்களில் வணங்குவர். சம்மோகனசாஸ்தா, கல்யாணவரத சாஸ்தா, வேத சாஸ்தா, சந்தான ப்ராப்தி சாஸ்தா, மகாசாஸ்தா, ஞானசாஸ்தா, தர்மசாஸ்தா, வீரசாஸ்தா ஆகியோரே இவர்கள். சந்திரனைப் போல குளிர்ச்சியான அருளைக் கொண்ட சம்மோகன சாஸ்தா இல்லறவாழ்வில் நிம்மதியை அருள்வார். கல்யாண வரத சாஸ்தா செவ்வாய் தோஷம் போக்கி மங்கலவாழ்வு தருவார். ஆன்மிக வழியில் நம்மை நடக்கச் செய்பவர் வேதசாஸ்தா. மகப்பேறு வழங்கி வீட்டில் மகிழ்ச்சியை நிலைக்கச் செய்பவர் சந்தான ப்ராப்தி சாஸ்தா. ராகுதோஷம் போக்கி வாழ்வில் வளர்ச்சி தருபவர் மகாசாஸ்தா. தட்சிணாமூர்த்தியைப் போல விளங்கும் ஞானசாஸ்தா கல்வி வளர்ச்சிக்கு வித்திடுபவர்.
சனியின் கெடுபலன்களில் இருந்து பக்தர்களைக் காத்தருள்பவர் தர்மசாஸ்தா. குதிரை மீது காட்சியளிக்கும் வீரசாஸ்தா கைகளில் ஆயுதம் ஏந்தி தீயவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாப்பார். சாஸ்தாவை அஷ்ட சாஸ்தாவாகக் கருதி வழிபடுபவர்க்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
No comments:
Post a Comment