சிவந்த மேனி, குள்ளமான உருவம், பெரிய வயிறு, சிரித்த முகம், சிறந்த சிவபக்தர்,
சிவனுடைய இனிய நண்பர், வடக்கு திசை அதிபதி, அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர். இவர் வேறு
யாருமல்ல, அனைவருக்கும் தெரிந்த குபேரர் தான். லட்சுமியின் அன்பிற்கு பாத்திரமான
இவர், செல்வத்திற்கும், தனதான் யத்திற்கும் அதிபதியாக உள்ளார். குபேரரை வணங்குவதன்
மூலம் இந்த செல்வங்களை பெறமுடியும் என்பது நம்பிக்கை. குபேர வழிபாட்டின் போது
லட்சுமியையும், குபேரøனையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. இருவரையும் சேர்த்து,
வழிபடும் பட்சத்தில் முழு பலனும் உடனே கிடைக்கும். ஏனெனில் லட்சுமியின் அன்பிற்கு
பாத்திரமானவர் இவர்.
புத்தமதத்தில் குபேரன்
சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் குபேரனை "சிரிக்கும் சிருஷ்டியாக' வணங்குகின்றனர். குள்ளமான, கள்ளமில்லாத, சிரித்த முகமாக கனத்த தொப்பையும், கையில் கலசமும், பொன்மூட்டை, ஆபரணங்கள் என ஸ்வர்ண நிறமாக பல்வேறு அமைப்புகளில் ஆராதிக்கின்றனர். மதங்கள் மாறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். புத்தமதத்திலும் குபேர வழிபாடு இருப்பதால், சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர்.
குபேரர் நிலதானியங்களுக்கு அதிபதி. விவசாயிகள் தங்கள் விவசாய விளைப்பொருட்களை குபேரர் முன் வைத்து வழிபட்டு, பின் விவசாயத்தை துவக்குகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிப்படைவதாகவும் நம்பிக்கையுள்ளது. அறுவடை காலங்களில் குபேரனுக்கு காணிக்கையாக விளைபொருட்களை வழங்குகின்றனர்.
குபேரனின் குணங்கள்
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணம் (பொறுமையுடன் பணி செய்தல்) அவசியம் என்பதை தன் குணத்தின் மூலம் உணர்த்துகிறார். அடுத்தவனைப் பார்த்து அவனைப் போலவே பணக்காரன் ஆக வேண்டும் என நினைத்தால் முடியாது. அந்த பணக்காரனின் பின்னணியில் எந்த அளவிற்கு உழைப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு உழைப்பவனுக்கு பொருளையும் அருளையும் அவர் வாரி வழங்குவார். தேவலோகத்திலுள்ள குபேரபட்டினம் இவரது ஊர். இங்குள்ள அழகாபுரி அரண்மனை மண்டபத்தில் தாமரைப் பூ, பஞ்சு மெத்தை மீது, மீனாசனத்தில் குபேரன் அமர்ந்துள்ளார். அவரது ஒரு கை அபயமுத்திரை காட்டுகிறது. சிரமமான நேரத்தில், செல்வத்தைக் கொடுத்து உதவுவதே இந்த முத்திரையின் நோக்கம். அவரது தலையில் தங்ககிரீடம் சூட்டப்பட்டுள்ளது. முத்துக்குடையின் கீழ் அமர்ந்திருப்பார். இவரது பிரதிநிதியான சங்கநிதியின் கையில் வலம்புரி சங்கு இருக்கும். இது செல்வத்தின் அடையாளம். இன்னொரு பிரதிநிதியான பதுமநிதியின் கையில் தாமரை இருக்கும். இவர் பரந்து விரிந்த கல்வி அறிவை தருபவர். கல்வியும் செல்வமும் இணைந்து இருக்க வேண்டும் என்பதே குபேர தத்துவம்.

No comments:
Post a Comment