Tuesday, April 10, 2012

மார்கழி மாதம் ஒரு சிறப் பான மாதம்

மார்கழி மாதம் ஒரு சிறப் பான மாதம்; புண்ணியம் தரும் ஆன்மிக மாதம். "மாதங்களில் நான் மார்கழி' என ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூறியதில் இருந்தே இம்மாதத்தின் மகிமையை நாம் அறியலாம். அதிக அளவு பிராண வாயு கலந்த ஓசோன் இம்மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தரையில் படியும்.

அப்போது நாம் அதிகாலை நீராடினால்- நீரிலும் ஓசோன் கலந்திருப்பதால் உடலுக்கு நல்லது. திறந்தவெளியில் நடமாடுவதால் காற்றில் உள்ள ஓசோன் நம் உடலில் படியும்.

இதனால்தான் நம் முன்னோர்கள் மார்கழி நீராடல், அதிகாலை பஜனை செய்தல், பெண் கள் வீதியில் கோலமிடல் என ஏற்படுத்தியுள் ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆலயம் செல்ல வேண்டும் என வகுத்துள் ளனர். யாரும் நம்மை எழுப்ப வேண்டாம். ஊரிலுள்ள எல்லா ஆலயங்களில் இருந்தும் அதிகாலை ஒலிபரப்பப்படும் திருப்பாவை, திருவெம்பாவை தெய்வீகப் பாடல்களின் இன்னிசை ஒலியே நம்மை எழுப்பிவிடும்.

மார்கழி விழாக்கள் பல உள்ளன. அவற்றில் சிவாலயங்களில் நடைபெறும் நடராசரின் ஆருத்ரா தரிசனமும், விஷ்ணு ஆலயங்களில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவும் அதிக சிறப்பு வாய்ந்தவை. ஆருத்ரா தரிசனம் சிதம்பரத்திலும், உத்தர கோசமங்கையிலும் அதிக சிறப்பு வாய்ந்தது. அதுபோல வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்தின் புகழ்பெற்ற திருவிழா. அன்று அதிகாலை சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்புதான் பக்தர்களை அதிகம் கவரும்.


வைகுண்ட ஏகாதசி



ஸ்ரீரங்கத்தில் இவ்விழா திரு அத்யயன உற்சவம் என 21 நாட்கள் நடைபெறும். பகல் பத்து என்ற திருமொழி விழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள்தான் வைகுண்ட ஏகாதசி- சொர்க்கவாசல் திறப்பு. திருவாய் மொழி விழா என்னும் இராப்பத்து விழா பத்து நாட்கள், இயற்பா விழா ஒருநாள் என 21 நாட் கள் விழா நடைபெறும். இவை தமிழ் விழாக்கள்.

பகல் பத்தில் அரங்கன் அர்ச்சுன மண்டபத் தில் அனைத்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களு டன் எழுந்தருளி சேவை சாதிப்பார். அப்போது பூர்வாச்சாரியார்களில் முதலாமவரான நாதமுனிகள் வைகுண்ட ஏகாதசி முன்பத்து நாள் விழாவை ஆரம்பித்து வைப்பார். பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகிய திருமொழிப் பாசுரங்களைப் பாடுவார்கள். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர் களால் சேவிக்கப்படும்.

பத்தாம் நாள் மட்டும்தான் அரங்கன் ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவால் திருவரங்கனுக்கு அளிக் கப்பட்டது இந்த ரத்ன அங்கி. வைகுண்ட ஏகாதசி யிலிருந்து ஏழு நாட்கள் மூலவருக்கு முத்துக் களாலான அங்கியை அணிவிப் பார்கள். இதற்கு "முத்தங்கி சேவை' எனப் பெயர். இந்த வெண்மைத் திருக்கோலம் ஓர் அரிய காட்சி; கண்களையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் மாட்சி.

சொர்க்க வாசல் என்ற பரமபத வாசல் திறப்பு

வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து நான்கு வேதங்களும் ஓதப்பட்ட பிறகு, பெருமாள் ஜோதி ஸ்வரூபமாக ஆபரண தேஜஸுடன் காட்சியளித்துக் கொண்டே மங்களவாத்தியம் முழங்க வாசலைக் கடந்து வருவார். பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பகவானைப் பின்தொடர்ந்து செல்வார்கள்- "ரங்கா, ரங்கா' என ஜெபித்தபடி. முன்பு நம்மாழ்வாரின் மோட்சத்துக்காக இந்த வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் இப்போதும் பரமபத வாசல் திறப்பு விழா என கொண்டாடுகின்றனர். இவ்வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் வாசலைக் கடக்கும்போது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் போவதாக ஐதீகம். (பகல் பத்தின் பத்தாம் நாள் பெருமாள் நாச்சியார் கோலம் கொள்வார். இதற்கு மோகனாவதாரம் என்று பெயர்.)
வைகுண்ட ஏகாதசியன்று இராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. நம்மாழ்வார், மதுரகவியாழ்வார்களை திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் எழுந்தருளச் செய்வார். பின் பெருமாள் முன்னிலையில் சமஸ்கிருத வேதத் துடன் தமிழ் வேதமாகிய திருவாய்மொழி பிர பந்தத்தையும் பாடச் செய்து விழா நடத்துவார் கள். கடைசி நாள் நம்மாழ்வாரை பெருமாள் தம் திருவடியில் சேர்த்துக் கொள்வார்.

இராப்பத்தின் ஏழாம் நாள் கைத்தல சேவையும்; எட்டாம் நாள் திருமங்கை மன்ன னின் வேடுபறி உற்சவமும்; பத்தாம் நாள் நம்மாழ்வாரின் மோட்சமும் நடைபெறும். இராப்பத்தின் 11-ஆம் நாள் இயற்பாவை அமுத னார் மூலம் சேவித்து சாற்று முறை நடக்கும். இப்படி 21 நாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும்.

பரமபத விளையாட்டு

வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங் கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்கிரமரனம், அர்ச்சி ராத்திரி, திவ்ய தேசப்பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்லை.

அன்று பட்டினி இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து, நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை, புருஷசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால் அளவற்ற பயன் பெறலாம்.

ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்ய வேண்டும். துவாதசியன்று நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

மாதத்திற்கு இருமுறை வரும் எல்லா ஏகாதசிகளிலும்கூட விரதம் இருக்கலாம். முடியாவிடில் மார்கழி வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணு மகிழ்வுடன் சொர்க்கத்தில் இடம் தருவார். இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பாவம் விலகும். மறுமையில் சொர்க்கம் கிட்டும். எட்டு வயது முதல் 80 வயது வரை இவ்விரதத்தை ஆண்- பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்.

வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ் டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங் களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும்; மோட்ச ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர்.

சொர்க்க வாசல் கதை

மகாவிஷ்ணு பிரளய காலத்தில் ஆலிலை மேல் பள்ளி கொண்டு நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத் தார். அப்போது பிரம்மாவுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அதனால் எம்பெருமாள் காதுகளில் இருந்து இரு அசுரர்கள் தோன்றி பிரம்மனைக் கொல்ல முயன்றனர். அதை திருமால் தடுத்ததால் அசுரர்கள் திருமாலுடன் போரிட் டனர். முடிவில் திருமால் அவ்விருவருக்கும் சுக்லபட்ச ஏகாதசியன்று வடக்கு வாசல் திறந்து வைகுண்டத்தில் சேர்த்துக் கொண்டார். (உத்தர துவாரம்).

அப்போது அவ்வசுரர்கள், "எங்களுக்குப் பரமபதம் அளித்ததுபோல இந்நாளில் தங்களை விரதமிருந்து வழிபடுபவர் அனைவருக்கும் இவ்வாசல் திறந்து இவ்வழியே பரமபதம் அருளவேண்டும்' என்று கேட்டனர்.

அதன்படிதான் வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.

ஏகாதசி விரதப் பெரும்பயன்!

அம்பரீச சக்கரவர்த்தி சிறந்த பக்திமான். பகவானைப் பிரார்த்தித்து பூஜை, தானம்- தர்மம் போன்றவற்றை சிறப்பாகச் செய்து வந்தான். இதனால் மகிழ்ந்த மகாவிஷ்ணு தன் சக்ராயுதத்தை அவனுக்குப் பரிசாகத் தந்தார். இம்மன்னன் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்து துவாதசியன்று யமுனை நதிக்கரையில் வேத மறிந்த பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து, 60 கோடி பசுதானம் செய்தான்- மனைவியுடன்.
விதர்ப்ப தேச மன்னன் ருக்மாங்கதனின்
தோட்டத்தில் பூக்கும் வாசனை மலர்கள்மீது மோகம் கொண்ட தேவகன்னிகள் தினமும் அதைப் பறித்துச் சென்றனர். பூக்கள் குறைவதைக் கண்ட மன்னன் அதைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டான். ஆனால் வீரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் தோட்டத்தில் எந்த காலடிச் சுவடும் காணப்படாததே. (தேவகன்னிகள் பூமியில் கால் பதிக்க மாட்டார்கள்.)

எனவே, ஜாபாலி முனிவரி டம் உதவி கேட்டனர். அவர், "இதைச் செய்பவர்கள் தேவ கன்னிகைகள்தான். அவர் களைப் பிடிக்க வேண்டு மானால் கொமட்டி விதை களை விதையுங்கள்' என்று சொன்னார். அப்படியே செய்யப்பட்டது. பூப்பறிக்க வந்த தேவகன்னிகள் கால்களை கொமட்டிக் கொடி சுற்றியதால், அவர்களின் பாதங்கள் பூமியில் பதிந்தன. அதனால் தெய்வத்தன்மை அவர்களை விட்டு நீங்கியது. அவர்களால் விண்ணுலகம் செல்ல முடியவில்லை.

அவர்கள் மன்னனிடம், "நாங்கள் மீண்டும் வானுலகம் செல்ல யாராவது ஏகாதசி விரதப் பலனை எங்களுக்குத் தந்தால் விமோசனம் கிடைக் கும்' எனக் கூறினர். அரண் மனை வண்ணாத்தி, இவ்விர தம் இருக்கும் வழக்கத்தைக் கண்டறிந்து, அவளை வர வழைத்து ஏகாதசி விரதப் பலனை அளிக்கச் சொன்னான் மன்னன். அதனைப் பெற்ற தேவகன்னிகைகள் தேவலோகம் சென்றனர். அன்றிலிருந்து மன்னனும் மக்களும் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து நற்கதி அடைந்தனர்.

கிருத யுகத்தில் நதிஜஸ் என்ற அசுரன் மகன் முரன் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அதை விஷ்ணுவிடம் முறையிட் டனர். விஷ்ணு முரனுடன் கடும்போர் செய்தார். ஒரு சமயம் அவர் களைப் படைந்து ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப் போது முரன் விஷ்ணுவைக் கொல்ல முயன்றான்.

அச்சமயம் விஷ்ணுவின் 11 இந்திரியங்களில் இருந் தும் சக்தி உருவாகி, ஒரு சௌந்தர்ய தேவதை தோன்றி முரனை அழித் தாள். விஷ்ணு எழுந்து நடந்ததை அறிந்தார். 11 இந்திரியங்களிலிருந்து தோன்றியதால் அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு, "உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்றார்.

"இந்த நன்னாளில் எவர் விரதம் இருந்து தங்கள் நாமத்தை உச்சரித்து வழிபடுகிறார் களோ, அவர்கள் செய்த பாவத்தை விலக்கி வைகுண்ட பதவி தரும் சக்தியை எனக்குத் தாருங்கள்' என்றாள். அப்படியே திருமால் வரம் அருளினார். இப்படி உருவானதுதான் மார்கழி வளர்பிறை ஏகாதசி விரதம்.

ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியன்று கொண்டாடப்படுவது ஆருத்ரா தரிசனம் என்ற ஆடல்வல்லானின் ஆனந்த திருநடன நன்னாள். இது சிதம்பரத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். நடராச ருக்கு வருடம் ஆறு அபிஷேகம் நடைபெறும். அதில் சிறப்பானவை மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனமும், ஆனித் திருமஞ்சனமும்தான். ஆருத்ரா அன்று திருவாதிரைக் களி செய்து படைப்பர். "திருவாதிரைக் களி ஒரு வாய்' என்பது வழக்கு. அதை ஒரு கவளமாவது சாப்பிட வேண்டும்.

மார்கழித் திருவாதிரை

இது தேவர்களின் வைகறை பூஜை நேரமாகும். அதனால் திருவாதிரையன்று நடராசருக்கு வைகறையில் ஆயிரங்கால் மண்டபத்தில் அபிஷேகம் நடை பெறும். இவ்விழா பத்து நாட்கள் நடை பெறும். பத்தாம் நாளான திருவாதிரைத் திருநாளில் திருத்தேர் உலா நடைபெறும்.

பத்து நாட்களும் நடராசர் வாகனத்தில் உலாவருவார். முதல் நாள் கொடியேற்றம்; இரண்டாம் நாள் சந்திர பிரபை; மூன்றாம் நாள் சூரிய பிரபை; நான்காம் நாள் பூத வாகனம்; ஐந்தாம் நாள் ரிஷப வாகனம்; ஆறாம் நாள் ஆனை வாகனம்; ஏழாம் நாள் கைலாச வாகனம்; எட்டாம் நாள் பிட்சாண்டவர்; ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா. அன்று மூலவரே தேரில் உலா வரும் அதிசயம் காணலாம்.

பத்தாம் நாள் அதிகாலை வேளையில், சிறுசிறு மணிகள் அசையும் வெண்சப்பரத்தில் நடராசர் திருவீதி உலா வருவார். அப்போது நடராசர் சிலையைத் தூக்குபவர்கள் நடராசர் ஆடுவதுபோல அசைந்தாடி வருவது மெய் சிலிர்க்கும் காட்சியாகும். பக்தர்கள் ஆர்வத் துடன்- பக்தியுடன் நடராசரைத் தரிசிப்பார்கள். அன்று மட்டும் களியும் படைப்பார்கள்.

கோவைத் திருவாதிரை

இந்நாளில் கோவை மாவட்டப் பெண்கள் மாங்கல்ய நோன்பு நோற்பார்கள். அன்று புது மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வர். பாவம் விலக நெய் தீபம் ஏற்றுவார்கள்.

கேரளத் திருவாதிரை

மணமான புதுப் பெண்கள் "பூத்திருவாதிரை' என்ற பெயரில் முதல் திருவாதிரை நாளைக் கொண்டாடுவார்கள். அன்று இப்பெண்கள் பத்து வித மலர்கள் பறித்து மணமாகாத பெண்களுக்குச் சூட்டி, "உங்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கணும்' என்பர்.

உத்தரகோச மங்கை

இவ்வாலயத்தில் ஆறடி உயர மரகத நடராசர் சிலை அமைந்துள்ளது. எப்போதும் சந்தனக் காப்பால் மூடப்பட்டிருக்கும். இக்கோவிலில் நடராசர் சந்நிதி மூடப்பட்டே இருக்கும். வெளியில் இருந்து மட்டும் தரிசிக்கலாம். ஆருத்ரா தரிசன விழா பத்து நாட்கள் நடக்கும். திருவாதிரையன்று முதல் நாள் மரகத நடராசரின் சந்தனக்காப்பு களை யப்படும். காலை 9.00 மணிக்கு காப்பு களைந்து அபிஷேகம் செய்வர். இரவு 11.00 மணி வரை மரகத மேனி தரிசனம் காணலாம். விடியற்காலை சந்தனக் காப்பிடப்படும். பின் அடுத்த வருடம் தான் இக்காட்சியைக் காணலாம்.

இங்குள்ள மரகத லிங்கத்திற்கும் படிக லிங்கத்திற்கும் தினம் அன்னாபிஷேகமும் நடத்துவார்கள். பின் பெட்டியில் வைப்பார்கள். உத்தரகோச மங்கை தலம் ராமநாதபுரம் அருகேயுள்ளது.

நடராசர் சந்திப்பு வைபவம்

சென்னை சவுகார்பேட்டையில் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று, வெவ்வேறு நான்கு கோவில்களிலிருந்து வரும் நான்கு நடராசர் திருவடிவங்கள் சாலை ஒன்றின் சந்திப்பில் ஒன்றை ஒன்று பார்த்தபடி நிற்கவைப்பர். பக்தர் கள்கூடி ஆராதனை செய்வர். இவ்வைபவம் சுமார் 250 ஆண்டு காலமாக நடைபெறுகின்றது. அந்த நான்கு கோவில் நடராசர்கள்: ஏகாம் பரேஸ்வரர் நடராசர், அருணாசலேஸ்வரர் கோவில் நடராசர், குமரக் கோட்ட நடராசர் (சிவசுப்ரமணியர் ஆலயம்), காசிவிஸ்வநாதர் ஆலய நடராசர். (இவர் நால்வரில் மிகப் பெரிய வடிவினர்.)

வியாதிபாத யோகம் வரும் நாளில் நடராசர் திருநடனத்தினைக் காண்பது சிறப்பு என புராணங்கள் கூறுகின்றன. மார்கழி மாதத்தில் வரும் வியாதிபாத யோகத்தன்று நடராசர் திருக்கோலம் காண்போருக்கு வாழ்வில் சுபப் பலன்கள் யாவும் கிட்டும்; வேண்டியவற்றைப் பெறுவர்.

காரைக்கால் அம்மையார்

இவர் தலையைக் கீழே ஊன்றி சரீரத்துடன் கயிலாயம் சென்று இறைவனை வணங்கினார். "என் அம்மை வருகிறாள்' என்றார் ஈசன். பின் திருத்தாண்டவம் ஆடிக் காட்டினார். இதே நடனத்தை திருவாலங்காடு தலத்தில் திருவாதிரை அன்று ஆடிக் காட்டுமாறு அம்மை வேண்ட, அப்படியே அங்கு சென்று நடனமாடி நடராசர் என்ற திருப்பெயரைப் பெற்றார் சிவன்.

No comments:

Post a Comment