Wednesday, April 11, 2012

சித்திரை மாத விழாக்கள்

.

அன்று வீட்டின் மூத்தோர் புதிய பஞ்சாங்கத்தை பூஜையறையில் வைத்துப் பூஜித்து அனைவர் முன்னிலையிலும் படிப்பார். பூஜை முடித்து ஆலயம் சென்று வழிபட்டு பின் வீட்டில் அறுசுவை உணவு உண்பர். அதில் வசந்த காலத்தில் பூக்கும் வேப்பம் பூவும் முக்கனி களும் கண்டிப்பாக இடம்பெறும். கோவில் களிலும் இந்த பஞ்சாங்கம் படித்தல் நடை பெறும்.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு விழா, ஆதிசங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, மச்சாவதார ஜெயந்தி, வராக ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, வாசவி ஜெயந்தி, ரமணர் ஆராதனை விழா, காமன் பண்டிகை, ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம், தேர்த் திருவிழா, சமயபுரம் மாரி பூச்சொரிதல் விழா, காரைக்குடி கொப்புடையம் மன் தேர்த் திருவிழா, சித்திரை அன்னா பிஷேகம், சப்த ஸ்தான விழா, ராசிபுர திருமணம், தேர்விழா, மகாலட்சுமி அவதார தினம், பாபநாசம் சிவ- பார்வதி திருமணக் கோல காட்சி, தங்கத்தேர், சித்திரகுப்த பூஜை, குருவாயூர் விஷுக்கனி, நெல்லுக்கடைமாரி செடல் விழா, கூத்தாண்டவர் விழா, கன்னியா குமரியில் சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் கண்டு நிலாச்சோறு என்ற சித்திரான்னம் உண்ணும் விழா, அட்சய திரிதியை கனகதாரா யாகம், மகாலட்சுமி எட்டு நாள் காட்சி தரும் விழா என பற்பல விழாக்களைக் காணலாம். எதைப் பார்ப்பது எதை விடுவது? எல்லாமே நன்மை தரும் விழாக்கள்!

அக்னி நட்சத்திரம் என்ற கொடிய வெயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 21 நாட்கள் நம்மை வாட்டி வதைக்கும். இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். இது சித்திரை மாத இறுதி பத்து நாட்களும்; வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இருக்கும். சில வருடங்களில் 25 நாட்கள்கூட இருக்கும்.

இந்நாட்களில் சூரியனுக்கு மிக அருகே பூமி இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி. கார்த்திகை நெருப்பைக் கக்கும் நட்சத்திரம். எனவே இதை அக்னி நட்சத்திரம் என்பர்.

இந்த அக்னி நட்சத்திர நாட்களில், வெயிலில் இருந்து விடுபட மகா விஷ்ணுவையும், மகா மாரியம்மனையும் சாந்தப்படுத்த வேண்டும். மகாவிஷ்ணுவின் திருநாமங்களை ஜெபித்து வழிபட வேண்டும். நாராயண மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். மாரியை பால், தேன், சந்தனத்தால் அபிஷேகம் செய்து குளிர் விக்க வேண்டும்.

இந்நாட்களில் தான- தர்மம் செய்வது சிறந்த பலனைத் தரும். தண்ணீர்ப் பந்தல் அமைக்கலாம். நீர் மோர், பானகம் விநியோகம் செய்யலாம். விசிறி, காலணி கொடுக்கலாம். சீதாஷ்டக சுலோகம் சொல்லலாம்.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதைமுன்னொரு காலத்தில் சுவேத யாகத்தை 12 வருடங்கள் இடைவிடாது செய்தனர். தொடர்ந்து அக்னி குண்டத்தில் நெய் ஊற்றப் பட்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. நோயினின்று விடுபட, காண்டவ வனத்தை எரித்து உண்ண திட்டமிட்டான் அக்னி.




இதை அறிந்த காண்டவ வன உயிரினங்கள் வருண தேவனின் உதவியை வேண்டினர். வருணன் கனமழை பெய்வித்தான். இதனால் வருந்திய அக்னி திருமாலின் உதவியை வேண்டி னான். திருமால் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சு னன் வான் நோக்கி அம்புகளை எய்து சரக்கூடு கட்டி, மழை நீர் வனத்தில் விழாமல் தடுத்தான். அக்னி வனத்தை எரிக்கலானான்.

அப்போது கண்ணன், "அக்னியே'! உனக்கு 21 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் உன் பசியையும் பிணியையும் போக்கிக் கொள்' என்றார். அதன்படி அக்னி 21 நாட்கள் வனத்தை எரித்து விழுங்கினான். இந்த நாட்களைத்தான் நாம் அக்னி நட்சத்திர நாட்கள் என்கிறோம்.

அக்னி நட்சத்திர நாட்களில் முருகனையும்; பரணிக்கு உரிய துர்க்கை, ரோஹிணிக்கு உரிய பிரம்மன், கார்த்திகையின் அதிதேவதை அக்னி ஆகியோரையும் வழிபடலாம். அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து, கடவுள்
அருளைப் பெறலாம்.

மதுரை சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா என்றாலே மதுரைதான் நினைவிற்கு வரும். மதுரை மீனாட்சியம்மை திருமண விழாவும் அதையொட்டி கள்ளழகர் வைகையில் இறங்கும் விழாவும் உலகப் புகழ்பெற்றவை.

முற்காலத்தில் இவ்விழா பங்குனி மாதத் தில்தான் நடைபெற்று வந்தது. இவ்விழாவை சித்திரை மாத விழாவாக மாற்றியமைத்தவர் மதுரை மன்னன் திருமலை நாயக்கர்தான். பங்குனி மாதம் மக்கள் விவசாய வேலையில் ஈடுபடும் காலம். அப்போது மக்கள் கையில் பணப்புழக்கமும் குறைவாக இருக்கும்.

எனவே மீனாட்சி திருமணத்திற்கும், தேர்த் திருவிழாவுக்கும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அப்போது சைவ- வைணவ பேதமும் இருந்த காலம். எனவே மன்னர் திருமலை நாயக்கர் யோசனை செய்து, பங்குனியில் நடைபெற்ற விழாவை சித்திரைக்கு மாற்றி, கள்ளழகர் விழாவையும் அத்துடன் இணைத்து விட்டார். மன்னரின் உத்தரவை மக்களும் ஏற்றனர்.

அவர் எண்ணியபடி, மீனாட்சி திருமணம், தேர் விழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி மதுரை குலுங்கியது. சைவ- வைணவ பேதமும் நீங்கி அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவை இன்றளவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

சிறுத்தொண்டர் விழா

நரசிம்ம பல்லவ மன்னரிடம் படைத் தலைவராகப் பணியாற்றியவர் பரஞ்சோதி. அவரது சிவத்தொண்டின் மேன்மையறிந்த மன்னன், "தொண்டு புரியுங்கள்' எனக் கூறி அனுப்பிவிட்டார். பரஞ்சோதி தன் பிறந்த ஊரான திருச்செங்காட்டங்குடி (கணபதியீஸ்வரம்) சென்று, திருவெண்காட்டு நங்கையை மணந்துகொண்டு, சிவநெறியில் வாழ்ந்து வந்தார். இவர்கள் பிள்ளையின் பெயர் சீராளன்.

பரஞ்சோதி தினமும் ஒரு சிவனடியாருக்கு அமுது படைத்த பின்னரே குடும்பத்துடன் உணவு அருந்தும் வழக்கம் உடையவர்.

அவரது பக்தியை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் சிவபெருமான். ஒரு சந்நியாசிபோல வேட மிட்டு மரத்தடியில் அமர்ந்துகொண் டார்.

வழக்கம்போல சிவனடியாரைத் தேடி வந்த பரஞ்சோதி, மரத்தடியிலிருந்த ருத்ராபதி என்னும் அந்த சந்நியாசியைக் கண்டு மகிழ்ந்து, உணவுண்ண வருமாறு அழைத்தார்.

அந்த சந்நியாசியோ, ""நான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் உண் பேன். இன்று உணவு உண்ணும் நாள்தான். ஆனால் நான் நரபாகம் உண்பவன். அதை உன்னால் ஏற்பாடு செய்ய முடியுமா?'' என்று கேட்டார்.

திடுக்கிட்டார் பரஞ்சோதி.

""இன்னொரு நிபந்தனை. அவன் தாய்க்கு ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும். அவன் தலையை தாய் பிடித் துக்கொள்ள, தந்தை அரிய வேண்டும். அப்படி சமைத்ததைத்தான் உண்பேன்'' என்றார் சந்நியாசி.

திகைத்து நின்ற பரஞ்சோதிக்கு திடீரென்று மனதில் ஒரு ஒளி தோன் றியது. ""உங்கள் எண்ணப்படியே ஆகட் டும்'' என்று சொல்லி முனிவரை அழைத்துக்கொண்டு இல்லம் சேர்ந்தார்.

தன் மனைவியிடம் விவரத்தைக் கூறி, தன் ஒரே மகன் சீராளனைச் சமைத்து சந்நியாசிக்கு உணவாகப் படைத்தார். அப்போது சந்நியாசி, ""நான் தனியாக உண்ணுவதில்லை. உன் மகனை வரச்சொல்'' என்றார்.

""சுவாமி! அவன் இப்போது வர மாட்டான்'' என்று கூற, ""அவன் பெய ரைச் சொல்லி அழை!'' என்றார் சந்நி யாசி. அதன்படியே பரஞ்சோதி அழைக்க, சீராளன் உயிரோடு வந்தான். திரும்பிப் பார்த்த போது சிவனடியாரைக் காணவில்லை. அப்போது சிவன்- பார்வதிதேவியுடன் காட்சி தந்து அம்மூவருக்கும் முக்தியளித்தார்.

சிவன் அவர்களுக்கு முக்தியளித்தது சித்திரை மாத பரணி நட்சத்திரத்தன்று என்பதால், அந்த நாளில் திருச்செங்காட்டங்குடியில் இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

No comments:

Post a Comment