Monday, September 3, 2012
நாகங்களின் பெயர் தெரியுமா?
இந்தியாவில் மட்டுமின்றி, பிற நாடுகளிலும் பாம்பை வழிபடும் வழக்கம் இருக்கிறது. சிந்துசமவெளி நாகரிக காலத்திலேயே நாகவழிபாடு இருந்து வந்துள்ளது.
விவசாயிகள், ஆடியில் தங்கள் பணிகளைத் தொடங்குவது வழக்கம். அவர்களுக்கு பாம்பு மற்றும் பூச்சிகளால் இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு இறைவழிபாடு செய்தனர். சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்கு கழுத்திலும், இருக்கையாகவும் பாம்புகளை உருவாக்கினர். இன்னும் ஒரு படிமேலாக, பாம்புக்கே மூலஸ்தானம் அமைத்து, நாகராஜர் கோயில்களையும், புற்றுக்கோயில்களையும் உருவாக்கினர். பாம்புக்குரிய தினமாக நாகசதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பது குறித்து கதை ஒன்றும் உள்ளது.
அரசன் ஒருவனின் பிள்ளைகளான ஏழுபேர் ஒரே சமயத்தில் நாகம் தீண்டி இறந்தனர். அவர்களோடு பிறந்த தங்கை ஒருத்தி மட்டும் இருந்தாள். அவள் விரதமிருந்து. பாம்பிருந்த புற்று மண்ணை நீரில் கரைத்து, இறந்த சகோதரர்களின் உடலில் பூசினாள். அவர்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். அந்த நாளே நாகசதுர்த்தி என்பர்.
இந்த விரதத்தை ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் கடைபிடிப்பது வழக்கம்.இந்த ஆடியில் வருகிறது. இந்நாளில், அரசமரத்தடியில் உள்ள ஒன்பது நாகர்களான அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரிஅப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் நாக விக்ரஹங்களுக்கு பால் அபிஷேகம் செய்வர். புற்றுமண்ணை நெற்றியில் இட்டுக்கொள்வர். இந்த விரதத்தால் நாகதோஷம், புத்திர தோஷம் நீங்கும். ராகுகேதுவால் உண்டாகும் திருமணத்தடை அகலும். நாகசதுர்த்தியன்று அரசமரத்தடியில் பாம்புக்கல்லை பிரதிஷ்டை செய்வது சிறப்பு.
No comments:
Post a Comment