Tuesday, September 25, 2012
ஷண்மதம் - ஆறு பிரிவுகள்
ஷண்மதம் - ஆறு பிரிவுகள்
உலகில் இறைவனை வழிபட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்தியத் திருநாட்டில் வடமொழி வேதங்களைப் புறந்தள்ளாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களைப் பற்றிப் பேசாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களை முழுவதும் புறந்தள்ளிய வழிகளும் இருக்கின்றன. ஆதிசங்கரரின் காலத்திலும் இப்படியே எத்தனையோ சமயங்கள் இருந்தன இந்தத் திருநாட்டில். சமயங்கள் ஒன்றில் ஒன்று கலப்பதும் புதிதாக ஒன்று உருவாவதும் இருந்த ஒன்று இன்னொன்றில் கலந்து முழுதும் உருத்தெரியாமல் மறைவதும் காலம் காலமாக எல்லா நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட (கவனிக்கவும் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட என்றோ வேதங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட என்றோ சொல்லவில்லை) சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர். அந்த ஆறு சமயங்களைப் பற்றியே இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
காணபத்யம்:
முழுமுதற்கடவுள் என்று போற்றப்பட்டு எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம்.
கௌமாரம்:
அழகில் சிறந்தவன்; ஆறுமுகங்களைக் கொண்டவன்; முருகன்; குமரன்; கிழவன்; குகன் என்று பலவாறாகப் போற்றப் படும் குமரக்கடவுளை முழுமுதற்கடவுளாகப் போற்றுவது கௌமாரம்.
சௌரம்:
உலகுக்கெல்லாம் ஒளி கொடுத்து உலகச் செயல்கள் எல்லாம் நடக்கச் சக்தியும் கொடுக்கும் கண்கண்ட தெய்வமான சூரியனை முழுமுதற்கடவுளாக, பரம்பொருளாக வணங்குவது சௌரம்
சாக்தம்:
பரம்பொருளை அன்னை வடிவில் சக்தி வடிவில் வணங்குவது சாக்தம்
சைவம்:
பிறப்பிலியான சிவபெருமானைப் பரம்பொருளாக வணங்குவது சைவம்
வைணவம்:
திருமகள் மணாளனை, விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வணங்குவது வைஷ்ணவம் என்றும் சொல்லப்படும் வைணவம்.
ஆதிசங்கரரின் காலத்தில் இந்த ஆறு சமயங்களுக்கும் வேறுபாடுகள் இருந்தன. அவர் காலத்திலேயே அவை ஒன்றுக்குள் ஒன்றாய் கலக்கத் தொடங்கியிருந்தன. தற்காலத்தில் இந்த ஆறு சமயங்களும் இரு பெரும் சமயங்களாக - சைவம், வைணவம் - உருமாறி நிற்கின்றன.
காணபத்யம், கௌமாரம், சாக்தம் இந்த மூன்றும் சைவத்தில் அடங்கிவிட்டாலும் இந்தியாவில் சில பாகங்களில் அவை
இன்றும் சிறப்போடு இருக்கின்றன. காணபத்யம் மஹாராஷ்ட்ரத்திலும் கௌமாரம் தமிழகத்திலும் சாக்தம் வங்காளத்திலும், கேரளத்திலும் இந்த ஆறு சமயங்களிலும் தலைமையிடம் கொள்கின்றன.
சௌரம் சைவத்திலும் வைணவத்திலும் கலந்து மறைந்துவிட்டது. சைவத்தில் சிவசூரியனாகவும் வைணவத்தில் சூரியநாராயணனாகவும் சௌரத்தின் சூரியன் உருமாறிவிட்டான். தற்காலத்தில் சூரியனை முழுமுதற்கடவுளாக வணங்குபவர் இந்தியாவில் இல்லாமல் போய்விட்டார்கள். ஆனால் உலக வரலாற்றைப் பார்த்தால் சூரியனை எல்லா நாட்டினரும் வணங்கியிருக்கிறார்கள் என்பது புலனாகும். பாரசீகத்தில் இருந்த பார்சி வகுப்பினர் இந்த வழிபாட்டில் வந்தவர்களே.
வைணவம் மட்டுமே ஆதிசங்கரரின் காலத்திலிருந்து எந்த சமயத்தையும் எடுத்துக் கொள்ளாமலும் எந்த சமயத்திலும் கலந்துவிடாமலும் இருப்பது போல் தோன்றினாலும் மற்ற சமயங்களில் இருந்தத் தத்துவங்களை வைணவம் ஏற்றுக் கொண்டிருப்பது கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் தெளிவாகும்
பொதுவாக இந்து சமயம் எனப்படும் தொன்று தொட்டு வரும் சமயத்தில் உள்ள பற்பல பிரிவுகள் உண்டு. ஆதி சங்கரர் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தொகுத்தவையாகக் கொள்ளப்படும் ஆறு உட்பிரிவுகள் சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை அவ்வவ் பிரிவிற்குத் தலையாய முழுமுதற் கடவுளாகக் கொண்டவை. ஸ்மார்த்தம் என்பது ஆறு கடவுளரையும் வணங்கும் பிரிவு. இவை அனைத்தும் வடமொழி மரபு வழியான பிரிவுகள். தமிழ் மரபிலும், பிற இந்தியப் பழங்குடிகளின் மரபிலும் பற்பல வேறுபாடுகள் உண்டு. தமிழ் மரபில், இந்தியப் பழங்குடிகள் மரபில் உள்ள இறைக்கொள்கைகள் ஆய்வாளர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பரவலாக அறியப்படாமல் உள்ளன
இந்த பிரிவுகளில் இருக்கும் ஒற்றுமைகள் அல்லது வேற்றுமைகள் கீழுள்ள கருத்துக்களில் பார்க்கலாம்:
இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி
சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை
சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.
வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.
ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்.
ஜீவனும், பரமனும் பற்றி
சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.
சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத மோக்ஷம் அடையலாம்.
வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.
ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.
சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதனைகளை செய்வது.
சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.
வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
ஸ்மார்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் - இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள்.
மறைகள்
சைவம்: வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம்.
சாக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள்.
வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள், பிரபந்தம்
ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி, புராணங்கள், இதிகாசங்கள்.
சமகால இந்து இயக்கங்கள் . காணபத்தியம் . கெளமாரம் . சௌரம்
புனித நூல்கள்: வேதங்கள் · உபநிடதங்கள் · தேவாரம் · திருவாசகம்· ஆழ்வார் பாசுரங்கள்·
ஸ்மிருதி: இதிகாசம் (இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை) · புராணங்கள் · சூத்திரங்கள் · ஆகமங்கள் (தந்திரம், யந்திரம்) · வேதாந்தம்
கருத்துருக்கள்: அவதாரம் · பிரம்மன் · தர்மம் · கர்மா · வீடுபேறு · மாயை · இஷ்ட தேவதைகள் · மூர்த்தி · மறுபிறவி · இல்லறம் · தத்வம் · மும்மூர்த்திகள் · குரு
தத்துவம்: சாங்கியம் · நியாயம் · வைசேஷிகம் · யோகம் · மீமாம்சை · வேதாந்தம் · தந்திரம் · பக்தி · சர்வாகம்
சடங்குகள்: சோதிடம் · ஆயுள் வேதம் · ஆரத்தி · பஜனை · தரிசனம் · தீட்சை · மந்திரங்கள் · பூசை · சத்சங் · தோத்திரங்கள் · திருமணம் · ஞானம்
குருமாரும் சுவாமிமாரும்: சங்கரர் · ராமானுஜர் · மாதவாச்சாரியார் · இராமகிருஷ்ணர் · விவேகானந்தர் · நாராயண குரு · அரவிந்தர் · ரமண மகரிஷி · சிவானந்தர் · சின்மயானந்தா · சிவாய சுப்பிரமுனியசுவாமி · சுவாமி நாராயணர் · பிரபுபாதா · லோகேநாத் . ஷிர்டி சாயிபாபா
யுகங்கள்: கிருத யுகம் · திரேதா யுகம் · துவாபர யுகம் · கலியுகம்
சைவ சமயம்
சைவ சமயம், சிவன் அல்லது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை. இம்மதத்தினை இன்று 220 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர்.
சைவத்தின் மூன்று பிரிவுகள்
இன்று நிலவும் சைவத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1)காஷ்மீர சைவம் 2) வீர சைவம் 3) சித்தாந்த சைவம்
இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை.
சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம். இச்சைவம் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.
பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டுப் பண்பும், பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்ட கால அனுபவத்தில் பாசத்தடையில் இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும்.
சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் சிவாகமங்கள் இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான ஆலயமும் ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் கிரியைகள் யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் பூசை செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும்.
சைவ ஆகமங்கள் : சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன,
1) காமிகம் - திருவடிகள் 2) யோகஜம் - கணைக்கால்கள் 3) சிந்தியம் - கால்விரல்கள்
4) காரணம் - கெண்டைக்கால்கள் 5) அஜிதம் அல்லது அசிதம் - முழந்தாள் 6) தீப்தம் - தொடைகள்
7) சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்) 8) சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு
9) அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு 10) சுப்ரபேதம் - தொப்புள்
11) விஜயம் - வயிறு 12) நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் - நாசி 13) ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் - முலை மார்பு 14) அனலம் அல்லது ஆக்னேயம் - கண்கள் 15) வீரபத்ரம் அல்லது வீரம் - கழுத்து 16) ரௌரவம் - செவிகள் 17) மகுடம் - திருமுடி 18) விமலம் - கைகள் 19) சந்திரஞானம் - மார்பு 20) பிம்பம் - முகம்
21) புரோத்கீதம் - நாக்கு 22) லளிதம் - கன்னங்கள் 23) சித்தம் - நெற்றி 24) சந்தானம் - குண்டலம்
25) சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் - உபவீதம் 26) பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் - மாலை
27) கிரணம் - இரத்தினா பரணம் 28) வாதுளம் - ஆடை
சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூல்கள்
இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் வேதங்களையும் அவற்றின் இறுதிப்பகுதியாகக் கொள்ளப்படும் உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏராளமான ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சில சைவ சமயத்துக்கும், வேறுசில வைணவ சமயத்துக்கும், மற்றவை சாக்த சமயத்துக்கும் உரியவை. சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுட் தலையாயவை காமிகாகமம், காரணாகமம் என்பன.
சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.
தத்துவ அடிப்படைகள் : பதி (இறைவன்) பசு (உயிர்) பாசம் (மலங்கள்)
ஆகிய மூன்றையும் என்றென்றும் உள்ள நிலைத்த பொருள்களாக ஏற்றுக்கொள்வது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். சைவ சித்தாந்தத்தின்படி இம் மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவை. இதனால் இவை மூன்றையுமே யாரும் படைத்ததில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆயினும், என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை எனக்கூறும் இத் தத்துவம் இவை பற்றிப் பின்வருமாறு விளக்குகின்றது.
இறைவன்: அறிவு வடிவாகவே இருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்திருப்பவன், அளவற்ற வல்லமை பெற்றவன்.
உயிர்: உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை ஆனால் மலங்களினால் பிணிக்கப்படும்போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணிப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும்.
மலங்கள்: மலங்கள் சடப்பொருள்கள். அறிவற்றவை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டவை. இவை இறைவனை அடைய முடியாது.
சித்தாந்தமும் வேதாந்தமும்
"உமாபதி சிவம் நெஞ்சுவிடுதூது என்னும் சிந்தாந்த பிரபந்தத்தில் உலகாயதம், வேதாந்தம், பெளத்தம், சமணம், மீமாம்சகம் ஆகிய தத்துவங்களைச் சித்தாந்தப் பார்வையில் மறுத்துக் கூறிச் சித்தாந்த சைவத்தினை நிலைநாட்டியுள்ளார்."
சைவசித்தாந்தமும் அதன் சமூக நிலைப்பாடுகளும்
சைவ சித்தாந்தம் சாதியமைப்பை பெருமாபாலும் ஏற்றுக்கொண்டு, அதனை வலியுறுத்துகின்றது. இது அது தோற்றம் கண்ட காலத்தில் (சோழர் காலம்) இருந்தே இருந்து வருகின்றது. பிராமணர் அல்லாதவர்கள் இந்தக் கட்டமைப்பில் அதிகாரமும், செல்வாக்கும் மிக்கவர்களாகவும், மதக்குருமார்களான பிராமணர்கள் சடங்கு ரீதியில் முக்கியத்துவம் பெறுவர்களாகவும் இருக்கின்றார்கள்.
நூல்கள் : தேவாரம், திருவாசகம், பெரிய புராணம்
கோவில் : திருக்கயிலாயம், காசி, சிதம்பரம், காஞ்சிபுரம் உட்பட எண்ணிலடங்கா திருக்கோவில்கள்
வைணவம் - (விஷ்ணு) திருமால் வழிபாடு
வைணவம் : வைணவ தத்துவம்
இந்து சமயத்தில் மும்மூர்த்திகளாகக் கருதப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரில் விஷ்ணுவை முழு முதற் கடவுளாகக் கருதும் சமயம் வைணவம் அல்லது வைஷ்ணவம் என்று அழைக்கப்படும். விஷ்ணு உலகில் பத்து அவதாரங்களாக அவதரித்தார் என்பது வைணவ நம்பிக்கை. உபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும். பன்னிரு ஆழ்வார்கள் வைணவ சமயம் பற்றித் தமிழிற் பாடியுள்ளனர்.
இராமானுஜர் பரப்பிய வைணவ தத்துவத்தில் ஆதிப்பரம் பொருள் நாராயணன் என்ற விஷ்ணுவே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் பிரம்மம். அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். அறம், ஞானம், சக்தி, அன்பு இவை யாவும் முடிவிலாத அளவுக்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் அபார கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர் போக்கி தன்னுடன் சேர்ந்துகொள்ள வழி வகுக்கிறான். பிரம்மமும் ஜீவனும் உயிரும் உடலும் போல. ஜீவர்களனைவரும், மற்றும் பிரபஞ்சமனைத்தும் பிரம்மத்தின் உடலாகும்.
இதற்கு பிரமாணம் பிருஹதாரண்யக உபநிஷத்து
" யோ விஞ்ஞானே திஷ்டன், விஞ்ஞானாதந்தர:, யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானமந்தரோ யமயதி ஏஷ ஆத்மா அந்தர்யாம்யம்ருத:."
இதன் பொருள்: எவன் அறிவுக்குள் உறைபவனோ, அறிவுக்குள் அறிவாக இருப்பவனோ, எவனை அறிவும் அறியமுடியாதோ, எவனுக்கு அறிவே உடலோ, எவன் அறிவையும் உள்ளிருந்து ஆட்டிவைப்பவனோ அவன்தான் இவ்வான்மா, அழியாமல் உள்ளுறைபவன்.
உயிரும் உடலும் வெவ்வேறானதால் பிரம்மத்திற்கு தன்னுள் வேற்றுமை (ஸ்வகத பேதம்) உண்டு. ஆனால் வேறு வேற்றுமைகள் கிடையா. பிரம்மத்திற்கு சமானமான வேறு உண்மைகள் இல்லை. அதனால் பிரம்மத்தினிடத்தில் ஸஜாதீய பேதம் என்று கூறப்படும் பகுப்புக்குள்ளிட்ட வேற்றுமை கிடையாது. பகுப்புக்கும் பகுப்புக்கும் உள்ள வேற்றுமையும் (விஜாதீய பேதம்) கிடையாது; ஏனென்றால் வேறு ஒரு பகுப்பு அறவே இல்லை. இதனால் இதுவும் ஒருவித அத்வைதம் (இரண்டற்றது) தான். பிரம்மத்தினிடம் குணம் என்ற தன்மை உள்ளதா இல்லையா என்ற ஒரு ஆழமான பிரச்சினையின் இருவேறு விடைகள் தான் இதை அத்வைதக் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது. அதனால் இராமானுஜரின் இக்கோட்பாட்டிற்கு விசிஷ்டாத்வைதம் (விசிஷ்டமான அத்வைதம்) என்று பெயர். விசிஷ்டம் என்றால் சிறப்புற்ற என்று பொருள்
ஸ்ரீ:
விசிஷ்டாத்வைதத்தில் ஸ்ரீ என்ற அன்னை தத்துவம் மையத்திலுள்ளது. இதனால் தான் இந்த சமயப் பிரிவுக்கே ஸ்ரீவைஷ்ணவம் என்ற பெயர். இராமானுஜருடைய எல்லா நூல்களிலும் (முழுவதும் வேதாந்தக் கடலிலேயே நீந்துகிற ஸ்ரீபாஷ்யத்தைத் தவிர) ஸ்ரீ என்ற மகாலட்சுமி, விஷ்ணுவின் மார்பில் அவருடன் என்றும் இருப்பதாகவே பேசப்படும். யாண்டும் கூட இருப்பவள் என்று பொருள்படும் அனபாயினி என்ற வடமொழிச் சொல்லை அடிக்கடி காணலாம். இராமானுஜருக்குப் பின் வந்தவர்கள் அன்னை ஸ்ரீயின் அருள் இல்லாமல் கடவுளிடம் நம் வேண்டுதல் செல்லாது என்பர்.
வைணவத்தில் மோட்சம்
படைத்தல் ஒரு மாயையல்ல, அது கடவுளின் ஒரு உண்மையான செய்கை. உலகப்பொருள், ஜீவன், ஈசன் ஆகிய மூன்று தத்துவங்களும் மூன்று படிகளிலுள்ள உண்மைகள். கீழ்ப்படியிலுள்ள பொருள் அறிவற்றது. ஜீவன் அறிவுள்ளது. ஆனால் இரண்டும் கடவுளுடைய எள்ளத்தனை பாகமே. மனிதனுடைய புலன்கள் கீழ்ப்படியில் உறையும் பொருள்களின் பலவித சேர்க்கையே. ஜீவர்கள் இப்புலன்களின் உந்துதலாலும் உதவியாலும் பொருள்களை அனுபவிக்கின்றன. அவர்களுடைய முந்தைய பிறவிகளில் செய்த தீவினை, நல்வினையை யொட்டி அவர்களுக்கு பயன்களைக் கொடுத்து ஆள்பவன் ஈசன். மோட்சம் என்பது ஈசனான நாராயணனுடன் வைகுண்டத்தில் வசிப்பதே. ஈசனுடன் ஐக்கியமாவதல்ல. அங்கு ஜீவர்களின் தனித்துவம் மறைவ தில்லை. பிறவிப் பெருங்கடலைக் கடப்பது என்பது மட்டுமே மோட்சம். மோட்சத்தை அடைவதற்கு கடவுளின் அருள் தேவை. இவ்வருளைப் பெறுவது தன்னலமற்றதும் தன்னை மறந்ததுமான பக்தியாலும் சரண்புகுதலாலும் தான் முடியும்.
வைணவத்தில் கடவுள்
இறைவனுக் கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய மகாவிஷ்ணுவும் இராமர், கிருஷ்ணர் உள்பட அவருடைய பல அவதாரங்களும். அவர்தான் திருமூர்த்திகளில் மற்ற இருவர்களான பிரம்மனையும் சிவனையும் படைத்தவர். யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். இவைகளை வணங்குவதே அவரை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். திவ்யப் பிரபந்தங்களில் இச்சுவையை நிறைய ருசிக்கலாம். ஆண்டவனின் இச்சுலபத்தன்மை தான் வைணவத்தின் சிகரமான மதச்சாதனை.
வைணவ ஆச்சாரியர்கள்
புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார் காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் நாதமுனிகள் என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.
சுந்தரசோழர் என்ற இரண்டாம் பராந்தகன் (956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தாராம். இவர் தான் நாதமுனிகளாக இருக்கலாம் என்ற அபிப்பிராயமும் உள்ளது. ஸ்ரீரங்கம் கட்டுரை
நாதமுனிகளுக்குப்பிறகு ஆச்சாரிய பதவியில் வந்தவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவர்கள் மூவர். இராமானுஜர், வேதாந்ததேசிகர், பிள்ளை லோகாச்சாரியர். வேதாந்த தேசிகர் தென்னிந்தியாவின் வைணவத்தின் வடகலைப் பிரிவின் முதல் ஆச்சாரியராகவும், பிள்ளை லோகாச்சாரியர் தென்கலைப் பிரிவின் முதல் ஆச்சாரியராகவும் போற்றப்படுகிறார்கள்.
வைணவ பிரிவு : வடகலையும் தென்கலையும்
தமிழ்ப் பிரபந்தங்களை வேதங்களாகவே மதிக்கவேண்டும் என்பது இராமானுஜரின் போதனை. அதனால் வேதங்கள், உபநிடதங்கள் இவைகளுக்கு பதிலாகவே பிரபந்தங்களை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கருத்து தலை தூக்கியது. இரு நூற்றாண்டுகளில் இந்த விதைக்கருத்து கொழுந்துவிட்டு மரமானபோது அது வைணவத்தையே இரு பிரிவுகளாக்கிவிட்டது. இப்படி ஏற்பட்டது தான் வடகலையும் தென் கலையும். தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தென்கலை. வடகலையாருக்கு முக்கிய நகரமாக காஞ்சீபுரமும், தென்கலையாருக்கு ஸ்ரீரங்கமுமாக இருந்ததே அவர்கள் அப்படி அழைக்கப்பட்டதற்குக் காரணம். காஞ்சீபுரத்தில் வடமொழிப் புலவர்களின் நடமாட்டம் அதிகம். ஸ்ரீரங்கமும் அதன் சுற்றுவட்டாரமும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
இதைத்தவிர தத்துவ ரீதியாகவும் இருபிரிவுகளுக்கும் கருத்து வேறுபாடுகள் வேரூன்றின. ஆண்டவனின் அருள் யாருக்குக் கிடைக்கும்? சுயமுயற்சியுடன் ஆண்டவனை வழிபடுபவனுக்கா, அல்லது, ஆண்டவன் விட்ட வழி விடட்டும் என்று சுயமுயற்சியையும் கைவிட்டவனுக்கா? இரண்டாமவனுக்குத் தான் என்பது தென்கலை வைணவர்கள் கொள்கை. இக்கொள்கையை பூனை விதி என்பர். ஏனென்றால் பூனைக்குட்டியை தாய்ப்பூனை கவ்வி எடுத்துச்செல்கிறது. பூனைக்குட்டி சுயமாக முயற்சி ஏதும் செய்வதில்லை. ஆனால் குரங்குக் குட்டியோ தானே தாய்க் குரங்கைக் கவ்விக் கொள்கிறது. வடகலை வைணவக் கொள்கை இதுதான். சுயமுயற்சியால் தான் ஆண்டவனின் அருளைப்பெற முடியும் என்பர். சுயமுயற்சி என்பது இவ்விடத்தில் பக்தியும் பிரபத்தியும்.
வடகலையார் ஸ்ரீயாகிய மகாலட்சுமியை நாராயணன் என்ற மலரிலிருந்து பிரிக்கமுடியாத அதன் மணமாகக் கொள்வர். அதனால் ஸ்ரீயும் மோட்சத்தைக் கொடுக்கக் கூடியவள். தென்கலையாருக்கோ ஸ்ரீயும் ஒரு ஜீவன் தான்; ஆனால் முக்கியமான ஜீவன். ஆண்டவனிடம் நமக்காகப் பரிந்து பேசக்கூடிய ஜீவன்.
மதக்கோட்பாட்டு வல்லுனர்கள் வடகலைக்கும் தென்கலைக்கும் 18 வேறுபாடுகள் சொல்வர். ஒரு சராசரி வைணவனுக்கு இந்த வேறுபாடுகள் பொருளற்றவை. ஒரே பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனிடம் அளவு கடந்த பக்தியும், இராமானுஜர் சொல்லியபடி எல்லா ஜீவர்களிடமும் காட்ட வேண்டிய அன்புமே அடிப்படை வைணவ லட்சணமாகும்.
வைஷ்ணவ ஆகமங்கள்
வைஷ்ணவ ஆகமங்கள் 2 ஆகும். இவை,
1) பாஞ்சராத்திரம், 2) வைகானசம் என்பனவாகும்.
விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணமாகும். இந்து மதத்தவரில் பெரும்பாண்மையோரால் பின்பற்றப்படும் சமயமும் இதுவாகும்.சைவரை எவ்வாறு மிளிரும் திருநீறு அடையாளம் காட்டுகிறதோ அவ்வாறே வைஷ்ணவரை திருநாமாம் உணர்த்துகிறது. விஷ்ணுவை முத்தொழில்களுள் காத்தல் தொழிலையும் புரியும் தெய்வம் எனக் குறிப்பிடுவதுண்டு. விஷ்ணு என்னும் என்னும் பொருள் எங்கும் பரந்து இருப்பவன்
என்பதாகும். கவே கடல்,வானம் என்று உலகெங்கும் வியாபித்துள்ள நீல நிறத்தை
அவனுடைய நிறமாகக் கருதுவது சாலப் பொருத்தமானது. இதன் பொருட்டே கார்மேக
வண்ணன் என வர்ணிக்கப்படுகிறான். பாற்கடலின் நடுவே திசேஷன் யோக நித்திரை
ழ்ந்திருந்தவாறே திருமால் நமக்கு பல்வேறு தத்துவ விளக்கங்களை அருள்கிறாள்.
ஊழிக்கால் முடிவினிலே அண்டங்களெல்லாம் ஒடுங்கிய நிலைக்கு வருவதை பாற்கடல்
விளக்குகிறது. அப்போது அண்டங்கள் அனைத்திற்கும் சுகமாக இருக்க திசக்தி
என்னும் திருமாலே.திசேஷன் என்னும் பாம்பு ஐந்து தலையையுடையவனாகவும்
இருக்கிறான்.இது பஞ்ச பூதங்களை குறிக்கிறது. திருமாலின் யோக நித்திரையானது
அறிதுயில் என்னும் தூங்காத்துயில் என்றும் பொருள் உணர்த்தப்படுகிறது. சித்தர்கள்
இதனை, 'தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது' என்பார்கள். அந்நிலையிலிருந்தவாறே
உலகனைத்தையும் காத்துக் கொண்டிருக்கிறார். திருமாலின் நாபிக் கமலத்தின்று
உருவானவர் நான்முகன் பிரம்மா. பஞ்ச பூதங்கள், உயிர்கள், இயற்கை அனைத்துக்கும்
தோற்றுவாயிலாக அமைந்துள்ளது பிரம்மாவின் தோற்றம். திருமாலின் நான்கு
திருக்கரங்களுள் சங்கை ஏந்திய கை. இறைவன் பிரணவப் பொருள் என்பதை உணர்த்துகிறது. மற்றக்கை உள்ள தர்ம சக்கரம் அல்லது அறிவாழியைக் கொண்டு உலகனைத்தையும் காத்துக் கொண்டு வருகிறார் திருமால்.அறம் செய்கின்றவர்களை காப்பாற்றியும் கேடு செய்கின்றவர்களை தண்டித்தும் வருகின்றது. இவ்வறவாழி திருமாலே காலச்சொரூபம் எனபதை உணர்த்த ழியை காலச்சக்கரம் எனச் சொல்வதும் உண்டு. மற்ற இரண்டு கைகளிலுள்ள கதையும், கமலமும் அறிவின் தோற்றங்களாகிய வல்லியல்பு, மெல்லியல்பை உணர்த்துகின்றன. துன்பம் வழங்கும் வல்லியல்பானது, முன்னேற்றத்தை வழங்குகிறது.
இதை உணர்த்த கதையும், இனிமையின் வடிவினை தரும் மெல்லியல்பை உணர்த்த
கமலமும், திருமாலின் கையில் விளங்குகின்றன.இவ்வாறு உலகெங்கும் நீக்கமற
வீற்றிருக்கும் விஷ்ணுவை பற்பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.
நாராயணன் : தன்னிடத்தினின்று தோன்றி வந்த உலகில் வீற்றிருப்பவன்.
கோவிந்தன் : சீவன்களின் நிலையை அறிபவன்.
பரமாத்தமன் : பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ளவன்.
கேசவன் : மும்மூர்த்தி வடிவினன்
என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுப்படுவதுண்டு.
விஷ்ணு வழிபாடானது திகாலந் தொட்டே இருந்து வந்ததாயினும் இதிகாச
புராண காலத்தின் (கி.மு 600 - கி.பி 200) போது வளர்ச்சி பெற்றதுள்ளது.
இக்காலத்தில் தோன்றிய இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் என்பன.
விஷ்ணுவின் அவதாரமாக இராமன், கிருஷ்ணன்-- விஷ்ணுவையே முழுமுதற்
கடவுளாக கொண்டு எழுதப்பட்டன. மேலும் விஷ்ணுவை நோக்கி நோற்க்கபடும்
விரங்களில் ஏகாதசியும்,கிருஷ்ண ஜெயந்தியும் முக்கியமானவை.இன்றும் இவை
உலகெங்கும் பெருவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
சைவத்தில் நாயன்மார் போன்று வைஷ்ணவத்தில் பொய்கைழ்வார், பூதத்ததா ழ்வார் முதலிய பன்னிரு ஆழ்வார்கள் இறைவனை வணங்கி பேறு பெற்றனர்.
''பச்சைமாமலைப்போல் மேனி
பவளவாய் கமலச்செங்கன்
அச்சுதா வமரரேறே யர்தம்
கொழுந்தோ வென்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகமாளும்
அச்சுவைபெறினும் வேண்டேன்!''
நூல்கள் : நாலாயிர திவ்ய பிரபந்தம், பஜகோவிந்தம்,
கோவில் : காஞ்சிபுரம், அயோத்யா, துவாரகை, மதுரா, திருப்பதி, திருவரங்கம், திருபெருமந்தூர் உட்பட108 பாடல்பெற்ற திருத்தலங்கள்
கணபத்யம்- விநாயகர் வழிபாடு
விநாயகர்
விநாயகரை முழு முதற் கடவுளாக வழிபடும் சமயம் காணபத்யம். ஆனால் இந்து
மதம் முழுவதற்கும் பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் விநாயகர்.
எந்த ஒரு நற்காரியத்தைத் தொடங்கு முன்னும் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் போது காரியம் சித்தியடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் விநாயகர் வழிபாட்டில்
விநாயகரை உருவத்தில் கொண்டு வருவதும் எளிது. மண்ணினால், சாணத்தினால்,
அல்லது அரிசி மாவினால், மஞ்சளினால் பிள்ளையரை எளிதில் உருவாக்கிடலாம்.
வேறு சின்னம் ஒன்றும் அகப்படாத இடத்து அறுகம்புல் அவருக்கு அறிகுறியாக வந்து
நிற்கும்.
இயற்கையின் முறைமகயைக் காக்க சிவசக்தியின் அருட்பிரசாதமாக னைமுகன்
உருவெடுத்தான் என்பது ஐதீகம்.மும்முறை தலைக்குட்டி தோப்புக்கரணம் போடுவது,
தேங்காய் உடைத்தல் விதவிதமான உணவுப்பொருள் படைத்தல், போன்ற விசேட
வழிபாட்டு முறைகளும் இவருக்கே உரியன. ஆண்,பெண் பேதத்திற்கு அப்பாற்பட்டவர்
கையால் மற்ற தெய்வங்களைப் போன்று அவருக்கு சிக்தி,புத்தி என இரண்டு சக்திகளை
அவரோடு இணைத்து சொல்வது உண்மையாய் அவர் மகிமையை விளக்குவதாகும்.
உடலின் அளவிற்கும் ஆன்மாக்களின் அளவிற்கும் தொடர்பில்லை என்பதை உணர்த்த
சிறிய உருவமான எலி பிள்ளை வாகனமாகிறது. அத்துடன் விநாயகரின் உருவமானது
பல்வேறு த்ததுவங்களை எமக்கு புகட்டுகிறது.
விநாயகர் 'ஓம்'கார மூர்த்தியானவர் என்பதை விளக்க ஆனைமுகத்தானாக அவர் உருவெடுத்துள்ளார். அண்டங்கள் யாவும் அவனிடத்து அடங்கியுள்ளன என்பதை விளக்க அவரது பேழை வயிறும், தன்னிடத்து தங்கியிருக்கும் யாவையும் தனது சக்தியால் தாங்கிக்கொண்டிருக்கிறான் என்பதை வயிற்றைச் சுற்றியிருக்கும் சர்ப்பமும் உணர்த்துகிறது. ஆற்றலிலே மானுடரை விட மிக்கவர் என்பதைக் காட்ட தும்பிக்கையுட்பட்ட ஐந்து கைகளைக் கொண்டுள்ளார். மக்களை நல்வழியில் நடத்துதலை உணர்த்த அங்குசமும் துன்பத்திலிருந்து காக்கப்பாசமும், சிந்தனாசக்தி வளர்ப்பது அவசியம் என்பதைக் காட்ட ஜபமாலையும்,கல்வியை உணர்த்த தந்தமும், அவரது கைகளில் இருக்கின்றன.
மேலும் தும்பிக்கை எப்பக்கம் வளைந்து உள்ளதோ அதன்படி வலம்புரி விநாயகன், இடம்புரி விநாயகன் என இயம்ப்படுகிறான். தியாகத்தின் உயர்வைக் காட்ட தனது தந்தங்களில் ஒன்றை இழந்து ஏகந்து எனப்பெறுகிறார். விநாயகருக்கு இன்னும் பல பெயர்கள் அடியார்களால்
வழங்கப்படுகின்றன்.
மூஷிகவாகனன்[பெருச்சாளி வாகனன்] வித்யராஜன்.[கல்விக்கு அரசன்]
ஓங்காரரூபன்[ஓம் என்னும் மந்திர வடிவினன்],ஞானகணபதி [ஞானியர் கூட்டத்திற்கு தலைவன்]
விநாயகர் வழிபாடு யாவருக்கும் எளிதானதாகவும், விநாயகர் வணக்கத்துடன்
தொடங்கும் எக்காரியமும் சித்திபெறும் என்பதாலும் இந்து சமய மக்களிடமும்
திகாலந்தொட்டு நிலவிவருகிறது. விநாயக சதுர்த்தி,விநாயக சஷ்டி, போன்ற விரத
தினங்கள் விநாயகரை நினைந்து அனுசரிக்கப்படுகின்றன. வெவ்வினையை வேரறுக்க
வல்லானை, விண்ணிற்கும், மண்ணிற்கும் ன நாதனை மனமுருக நினைந்து எங்கள்
விக்கின தீமைகளை தீர்ப்போமாக.
நூல்கள் : அவ்வை அருளிய விநாயகர் அகவல்
கோவில் : மும்பய் சித்திவிநாயகர், பிள்ளையார்பட்டி
சாக்தம் - சக்தி வழிபாடு
சக்தி.(அம்பிகை)
சக்தியை முழுமுதற் கடவுளாக சமயம் சாக்தமாகும். இந்து சமயத்தில் இறைவனைத்
தந்தையாக,தலைவனாக, தோழனாக, தனயனமாக என்று பல வழிகளில் அடியார்கள்
அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும்,அந்நியோன்மானதுமான அன்பு
முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி
வழிபாடாகும். பிள்ளையானவன் நன்றே செய்திகும், தீதே செய்திடினும் மாறாத
தாய் அன்புக்கு ஒப்பானது தெய்வத்தின் அன்பு, கூடவே தாயின் தன்மையுடைய
தெய்வத்தை வழிபடுவது யாருக்கும் எளிதாகிறது.
சக்தி என்பது என்ன? சக்திக்கும் சிவத்துக்கும் இடையே என்ன தொடர்பு?
இதனை விளக்குவதே இந்து மதம். சிவம் என்பது மெய்ப்பொருள். பிரியாது
இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு சக்தி என்று பெயர்.சிவத்தினின்று
சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம் யாவும் சிவசக்திமயமானது. சக்தி பல்வேறு
தொழில்களைப் புரியவும் பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை
எடுக்கிறாள்.
முத்தொழில்களை செய்யும் போது பிரம்மாணி,வைஷ்ணவி,உருத்ராணி என்று
பெயர் பெறுகிறாள். சிவத்திற்கு ஒப்பிடும்போது துர்க்கை என்றும்,தீமையை
அழிக்கும்போது காளியுமாகிறாள். வித்தை- கல்வியின் வடிவெடுக்கும் போது
சரஸ்வதி என்றும், தனதானிய-செல்வம் என்று வடிவெடுக்கும் போது இலக்குமியாகவும்
பெயர் பெறுகிறாள். வாழ்வு சிறப்புற ட்சியானது சிறப்புற்றிருக்க வேண்டும்
என்பதை துர்க்கையும், செல்வத்தை வழங்க திருமகளும்,கலை ஞானங்களைப்
பெற சரஸ்வதியும், ஞானத்துக்கும் நல்லறிவிற்கும் அறிகுறியாக விநாயகரும்,
வாழ்வை ற்றல் படைத்தாக்க முருகனும் விளங்குகின்றனர்.
அவதாரபுருஷர்களாக,சித்தர்களாக தோன்றியவர்கள் கூட சக்தியை வணங்கி
வந்தனர். இராமபிரான் இலங்கை போகும் முன்பு துர்க்கை பூஜை செய்த்தாகவும்,
கண்ணன் காத்யாயினி பூஜை செய்தாகவும், சங்கராச்சியார் சாரதா பூஜை செய்ததாகவும், இராமகிருஷ்ணர் காளியை வணங்கியதாகவும் நாம் அறிந்த செய்தியாகும்.
ஜகதம்பா உணவு அளிக்கும் அன்ன பூரணியாகவும், அனைத்துக்கும் அரசியான
இராஜராஜேஸ்வரி[பவானி] இயற்கையின் உயிரை உண்டு தோற்றுவிப்பவளாகவும்,
மகாசக்தி, பேராற்றல் மிக்கவள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
வீரம்,செல்வம்,கல்வி அருள் வேண்டி சக்தியை நோக்கி நோற்கப்படும் நவராத்திரி
விழா நம்மவர்களால் பயபக்தியுடன் கொண்டாப்படுகிறது.இதுவே சக்தியின்
சிறப்பை உலகெங்கும் பறை சாற்றுகிறது. இது மட்டுமன்றி கெளரி விரதம்,
வரலெட்சுமி விரதம் போன்ற சக்தியை நோக்கி நோற்கப்படும் விரதங்களாகும்.
சக்தி வழிபாட்டை நோக்கினால், இது ஆதிகாலந்தொட்டே மக்களிடையே
இருந்து வந்துள்ளமைக்குஆ தராங்கள் நிறைய உண்டு. சிவ வழிபாட்டைப்
போன்று சிந்துவெளி நாகரீக மக்களின் சமய வாழ்வில் சக்தி வழிபாடும்
சிறப்பிடம் பெற்றிருந்தது. மேலும் தொல்காப்பியத்தில் சக்தி பாலை
நிலத் தெய்வமாகப் போற்றப்பட்டாள். இன்று சக்தி வழிபாடானது தனியே
சாதகத்திற்கு மட்டுமல்லாது இந்து சமயம் முழுவதற்கும் பொதுவாக உள்ளது.
''மாதா பராசக்தி வைய்மெல்லாம் நீ நிறைந்தாய்
தாரம் உன்னை யல்லால் யாரெமக்குப் பாரினிலே...''
நூல்கள் : கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி, சௌந்தர்யலஹரி, பாரதியார் பாடல்கள்
கோவில் : காலடி, மதுரை, கொல்லம், கன்னியாகுமரி
கௌமாரம் - முருகவழிபாடு
முருகன்
முருகனை முழுமுதற் கடவுளாக வணங்கும் சமயம் கெளமாரமாகும்.
தமிழரின் முழுதற் கடவுள் எனவும் முருகனைப் பகர்வதுண்டு. எம்மனிதனும் மிக உயர்ந்த தெய்வமாகலாம் என்பதன் தெய்வக்காட்சியே முருகன் வடிவாகும்.
சூரபத்மனை அழித்து உலகை உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன்.
சிவனது ஐம்பொறிகளின்று
உருவான ஐந்து ஒளிப்பிழம்பு, மனத்தின்று உருவான மற்றோர் ஒளிப்பிழம்பு.
இவை ஆறினாலுமான ஒளித்திரன் சரவணப் பொய்கையில் பிரவேசித்து அறுமுகன் உருவானான் எனபது விளக்கம். முருகன் சிவசொரூபம் சக்திசொரூபம் ஆகிய இரண்டும் அமையப் பெற்றவன்.
முருகன். மூலாதாரம், சுவாதிஷ்டானம் முதலிய உடலிலுள்ள 6 தாரங்களுக்கு
ஒப்பானது முருகனது அறுபடை வீடுகள். ஆறுமுகப் பெருமானது சொரூப விளக்கமானது
பல்வேறு தத்துவங்களை எமக்குப் புகட்டுகிறது. ஐயபுலன்களையறியும் ஐம்பொறிகளும்.
எண்ண உதவும் நல்ல மனதும், முருகனது ஆறுமுகங்களுக்கு ஒப்பானவை.
முருகன் பன்னிரு கைகளைக் கொண்டுள்ளமை மக்களுக்கு அவரின் ஆற்றலை ஞாபகப்படுத்துவதன் பொருட்டேயாகும்.முயற்சியுடையவன் பலகையுடையவன் என்பது கோட்பாடு.
தைப்பூசத்தில் அழகன் முருகனைப்பற்றிக் கொள்ளவேண்டிய வழிமுறையினை தெளிவாக விளக்கும் திருப்புகழின் 21- ம் பாடலையும்,
அறிவிலும், வயதிலும் மூத்த பெரியவர் வாரியாரின் கூறுகிறார்.
அவ்வறிய காலத்தே, முருகனை ஏன் படங்களிலும், பாடல்களிலும் சித்தரித்துள்ளனர்
என்று கொஞ்சம் சிந்தித்தல் அவசியமே
ஆமுகம் ஆறு - ஆறு சோதியாகவும், ஆற்றறிவாயும், ஆறுதலையுடையதாக
இருப்பதால் முகம் ஆறுதலைத் தருவதாலும் ஆறுமுகமுண்டாயிற்றென்று விளம்பலுமுண்டு.
கால் இரண்டு - தோன்றும் அறிவு, தோற்றுவிக்கும் அறிவு - என்ற
இரண்டறிவாகிய விடய உணர்வும், நிர்விடய உணர்வும் கும்
கை பன்னிரண்டு - று தாரங்களிலுமுள்ள பிரகாச,அப்பிரகாசமாகும்.
தசாயுதம் - வச்சிரம் - தீட்சண்ய உணர்வு வேல் - சக்தி
(இச்சா, கிரியா,ஞானா சக்திகள்) - Potential & kinetic energy.
அபயம் - சமாதான உணர்ச்சி
வரதம் - நிராபரமாகிய தரவென்னும் சகிப்பு.
கடப்ப மாலை - சர்வ தத்துவ கண்டனம்.
மயில் - விசித்திர வடிவுடையதாகியதும், பல வர்ணமுள்ளதும், மறதி முதலிய
குணங்களுக்குக் காரணமானதும், விசித்திர மாயைக்கு ருப்பிடமானதுமான் மூலப்பிரகிருதி.
கோழி - மாச்சரியம்
தெய்வ யானை - தாந்தர தத்துவம்
கண்ட முதல் புருவ மத்தி வரை - மணி உருவு (சுப்பிரமணியன்)
உச்சியில் - ஒளி உருவு
புத்தியில் - சுத்த அறிவு
அநுபவத்தில், நித்தியமாயும் எங்கும் நிறைவாயும்,
கோணத்தில் ஆறாயும்(ராயும்),மதங்களில் ஆறாயும்,
சமயத்தில் ஆறாயும் விளங்குபவனே சுப்பிரமணியம்.
ஞானிகள், கடவுளை எங்கும் கண்டு வணங்குவரென்றும்,
யோகிகள் ருதயத்தில் கண்டு வணங்குவரென்றும், கர்ம
காண்டிகள் அக்கினியில் கண்டு வணங்குவரென்றும்,
பத்திகாண்டிகள் விக்கிரகத்தில் கண்டு வணங்குவரென்றும் விதித்துள்ளது.
முருக வழிப்பாட்டில் குறிஞ்சி நிலத் தெய்வமாக போற்றப்படுகிறான். இயற்கையின்
வண்ணமெல்லாம் கொண்ட குன்றுதோறும் விளையாடுகிறான், பாலமுருகன்.
மாதந்தோறும் வரும் கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானுக்கு உகந்த தினமாகும்.
மேலும் ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமையன்று வரும். கந்தசஷ்டி நோன்பானது
முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இவ்வாறு நாட்களில் போது மக்களின் மனதிலுள்ள காமம்,வெகுளி, ஈயாமை, செருக்கு, பொறாமை என்னும்
ஆறு பகைகள் அழிக்கப்படுகின்றன.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் வீற்றிருக்கும்
முருகனை வணங்கி அருள் பெருவோமாக.
'' உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் குருவாய்
வருவாய் அருவாய் குகனே!''
திருமுருகனின் அறுபடை வீடுகள்
பழநி: பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.
திருச்செந்ததூர் : கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.
திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது
சுவாமிமலை: தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை
திருத்தணி: முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.
பழமுதிர்ச்சோலை: நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.
நூல்கள் : கச்சியம்பதி கந்தபுராணம், காவடிசிந்து, திருப்புகழ்
சௌரம் - சூரிய வழிபாடு
சூரியன்.
சூரியனை முழுமுதற் கடவுளாக கொண்டு போற்றப்படும் சமயம் செளரமதமாகும்.
இன்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முன்னரே நமது முன்னோர்கள் இயற்கையை
அன்புடன் வணங்கினார் என்கிறது பழம்பெரும் நூலான ரிக்வேதம்.
இயற்கையுடன் நல்லிணக்கம் வைப்பதே அவர்களது சமயம் ஆயிற்று. ஆக இந்து மதத்தின் சகல பிரிவினரும் சூரியனை வணங்கி வருதல் கண்கூடு. இயற்கை பொருகளுள் சூரியனே
முதன்மையான என்பதால் சூரியனை வழிபடும் முறை பண்டைக் காலந்தொட்டே
நடை முறையில் இருந்து வருகிறது.
இயறகையோடு கொண்டுள்ள தெய்வீக இணக்கமானது இயற்கைக்கு அப்பால் இறைவனைக் காண வழி வகுக்கிறது.
கண்கூடாக சூரிய பகவானை வானில் தெரிவதால் சூரிய வழிபாட்டில் விக்கரகங்களோ
கோயில்களோ அவசியமற்றதாகிறது. இதனால் சூரியபகவானை கண்கண்ட தெய்வம்
எனக் கூறுவதும் பொருத்தமானது.
சூரியபகவானை தித்யம் (தேவர்க்கெல்லாம் தலைவன்)
திவாகரன்(பகல் செய்பவன்) பாஸ்கரன்(ஒளியை உண்டு பண்ணுபவன்) சூரிய நாராயணன்
(செயலில் தூண்டும் கடவுள்) என பல்வேறு பெயர்களில் குறிக்கப்பெறுகிறது.
சூரிய பகவானுக்குரிய மந்திரம் இவற்றுள் முதன்மை பெற்றது.
''யார் நம் அறிவை தூண்டுகிறாரோ அந்த சுடர்க்
கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக''
இதுவே சூரிய காயத்தீரியின் மூலப்பொருளானது.
பிரபஞ்சம் முழுதும் பரம்பொருளின் தோன்றி மீண்டும் அதனிடமே ஒடுங்குவது போல் இப்பிரஞ்சத்தின் கண்ணுள்ள அழியாப் பொருள் சூரியனிடமிருந்து பூவுலகும், பூவுலகில் வாழும் உயிர்களும் தோன்றி மீண்டும் அதனிடம் ஒடுங்கும் என்பது கோட்பாடு.
சூரிய பகவனுடைய சொரூபம் இலட்சணமானது, பிரகாசமானது. பல்வேறு கருத்துக்களை
பொருள்களையும் கொண்டது.ஒற்றை சக்கரமுடைய இரதத்தை ஏழு பச்சைக் குதிரைகளை
இழுத்துச் செல்ல இடுப்புக்குக் கீழ் உடலற்ற பூஷன் என்னும் சாரதி ஒட்டுகிறான்.
ஒற்றை சக்கரமானது விண்ணில் சூரியனைக் காணும் பருதி வடிவத்தையும், ஏழு
குதிரைகளையும் ஒளியின் ஏழு நிறங்களையும், ன்மாவின் ஏழு பிறப்புகளையும்
ஏழு ஞான பூமிகளையும் குறிக்கின்றன.இரதத்தின் எழுந்தருயிருக்கும் சூரிய
பகவான சங்கு சக்கரத்தையும் ஏந்தியுள்ளார்.சங்கு சக்கரங்கள் பிரபஞ்சம் யாவும்
அவனிடமிருந்து வந்தவை என்பதையும் சக்கரமானது பிரபஞ்சமானது அவன்
ஆணையால் ஒழுங்குபாட்டுடன் இயங்கிறது என்பதையும் குறிக்கிறது.
இன்று செளரமதத்தவர் உலகில் எண்ணிக்கையில் குறைந்திருப்பினும்,
சூரிய பகவானை இந்துக்கள் மட்டுமன்றி உலகம் முழுவதுமே ஆராதிக்கும்
பண்பாடு பெருகி வருகிறது.
நூல்கள் : ஆதித்யஹிருதயம்
கோவில் : ஒரிசா கொனார்க்
அனைத்து இந்து மாதங்கள் பற்றிய தெளிவான விளக்கம்.. நன்றிகள்..
ReplyDeleteமேலும் சைவ வைணவ இணைந்த தேவைகள் குழப்பங்ஜள் பற்றி கூறுங்கள்...