Monday, September 3, 2012

சிவனில் பாதி சக்தி

பிரம்மா,விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைச் செய்யும் மும்மூர்த்திகள். இந்த மூவரோடு மறைத்தல் தொழிலை ஈஸ்வரனும், அருளல் தொழிலை சதாசிவனும் செய்கின்றனர். இவர்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது. ஐவரும் பராசக்தியின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்களின் எஜமானி பராசக்தியே என்று சவுந்தர்யலஹரியில் ஆதிசங்கரர் போற்றுகிறார். அம்பிகையின் புகழை எல்லாம் ஈஸ்வரன் திருடி விட்டதாக குற்றம் சாட்டுகிறார் நீலகண்ட தீட்சிதர். ""மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தார். காலனை காலால் உதைத்தார் என்று பரமேஸ்வரன் புகழ் பெற்று விட்டார். அந்த நெற்றிக்கண்ணில் பாதி உன்னுடையதாச்சே! காலனை இடதுகால் தானே உதைத்தது! அதுவும் உன்னுடையதே!'' என்று பராசக்தியிடம் அவர் கூறுகிறார். சிவனில் பாதியாக சக்தி இருப்பதால் இவ்வாறு அவர் கூறுகிறார்.

No comments:

Post a Comment