முதற்கடவுளாக விளங்கும் விநாயகருக்கு "ஒற்றைக் கொம்பன்' என்ற பெயருண்டு. விநாயகருக்கு இப்பெயர் உண்டானதற்கான புராணக்காரணத்தை இருவிதமாகச் சொல்வர். ஐந்தாம் வேதம் என்று போற்றப்படுவது மகாபாரதம். இதன் ஸ்லோகங்களை வியாசர்வேகமாகச் சொல்ல, தன் ஒற்றைத் தந்தத்தை ஒடித்து எழுத்தாணி யாக்கிய விநாயகர், இமயமலைப் பனிப்பாறைகளில் எழுதினார். பிறரின் நன்மைக்காக தன் அழகான தந்தத்தைத் தியாகம் செய்தார். வேறெந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாத கஜமுகாசுரனை அழிக்க, விநாயகர் தன் தந்தத்தை ஒடித்துக் குத்தி வதம் செய்ததாலும், இந்தப் பெயர் வந்ததாகச் சொல்வதுண்டு
No comments:
Post a Comment