Monday, September 3, 2012
மனைவியை மறைத்த "வாமனர்
மகாபலி யாகம் நடத்தும் நர்மதை நதிக்கரைக்கு வாமனர் கிளம்பினார். விஷ்ணுவை விட்டு லட்சுமி எப்போதும் பிரிய மாட்டாள் என்பதால், வாமனரின் ஸ்ரீவத்சத்தில் (மார்பில்) அமர்ந்திருந்தாள். ""போட்டுக் கொண்ட வேஷம் சரியில்லையே! பிரம்மச்சாரியாக இருக்கும்போது ஒரு பெண்ணை வைத்துக் கொண்டிருக்கக் கூடாதே! லட்சுமியின் கடைக்கண்பார்வை மகாபலியின் மீது பட்டு விட்டால் அவனிடம் யாசகம் பெற முடியாமல் போய்விடுமே'' என்று வாமனர் பலவிதமாக யோசித்தார். "க்ருஷ்ணாஜினம்' என்னும் ஆடையைப் போர்த்திக் கொண்டு திருமகளின் பார்வையை மறைத்துக் கொண்டு சென்று யாசகம் கேட்டார்.
கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பாற்றுவது தான் திருமாலின் அவதார நோக்கம். ஆனால், வாமன அவதாரத்தில், அவர் யாரையும் கொல்லவில்லை. தன் திருவடியை மட்டும் பலியின் தலை மீது வைத்து ஆணவத்தைப் போக்கி அருள் புரிந்தார்.
No comments:
Post a Comment