<சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் குளிக்க வேண்டும்.
* துளசி மாடத்தில் இருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிப்பதுதான் நல்லது.
* சுபகாரியங்களில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருள் மஞ்சள். இந்த மஞ்சள் நீரை வீடுகளில் காலை, மாலை வேளைகளில் தெளித்து வர லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
* கணபதி, சூரியன், அம்பிகை, மகாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரே இடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜை.
No comments:
Post a Comment