Thursday, September 6, 2012
புஷ்ப அர்ச்சனையால் நன்மை ஏற்படுமா?
செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தன லாபம், தொழில் முன்னேற்றம் கூடும். சூரியனின் அருள் கிடைக்கும்.
* மனோரஞ்சிதம், பவழமல்லி மலர்களால் அர்ச்சனை செய்தால் நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும். சந்திரன் அருள் கிட்டும்.
* மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை, நந்தியா வட்டை மலர்களால் செய்யும் அர்ச்சனை மன சஞ்சலம் நீக்கும். புத்திக் கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்றவற்றைத் தரும். செவ்வாய் அருள் கிடைக்கும்.
* புதனின் அருள் பெற, மரிக்கொழுந்து, மாசி பச்சை ஆகியவற்றால் அர்ச்சனை செய்யலாம். சுகபோகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும்.
* குருவின் அருள் பெற, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும்.
* சுக்கிரன் அருள் பெற செம்பருத்தி, அடுக்கு அரளி மலர்களால் அர்ச்சனை செய்யலாம். ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும்.
• சனி பகவான் அருள் பெற, நீலநிற சங்குப்பூ அர்ச்சனை செய்யலாம். வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும்.
• கருந்துளசி, வில்வம், மகிழம்பூ அர்ச்சனை, சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும். ராகு, கேது அருள் கிடைக்கும்.
No comments:
Post a Comment