Wednesday, October 3, 2012
**காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் சொல்லலாமா?
**காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் சொல்லலாமா?
சொல்லக்கூடாது என்று சொன்னால் ஏன் என்று காரணம் கேட்கிறார்கள். காரணம் சொன்னால் இக்காலத்துப்பெண்கள் ஏதேதோ கேள்விகள் கேட்டு விவாதம் செய்கின்றனர். சாஸ்திரங்கள் வேண்டாம் என்று சொல்வதை செய்யாமல் இருப்பது தான் பண்பாடு. ஒரு சில நிறுவனங்கள் நம் ஹிந்து தர்மத்தை வளர்ப்பதாகக் கூறி எல்லோரும் காயத்ரி மந்திரத்தைச் சொல்லலாம் என்று பெண்களை உற்சாகப்படுத்தவும் செய்கின்றனர். இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த மந்திரத்தின் அதிதேவதையாக காயத்ரி என்னும் பெண் தெய்வத்தையே வழிபடுகிறோம். இதனால் பெண் சமுதாயத்தை உதாசீனப்படுத்தவில்லை என்பது நிதர்சனம். இரண்டாவது யுகதர்மம். இதைப் பற்றி விளக்க விருப்பமில்லை.
* திருவண்ணாமலையில் கிரிவலம் வருபவர்கள் வேகமாக நடந்தோ அல்லது ஓடியோ செல்வது சரியானதா?
இறைவனுடைய திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு அடிமேல் அடிவைத்து நடப்பது தான் பிரதக்ஷிணம் (வலம் வருதல் )என்று கூறப்படுகிறது. இது பொதுவான விதி. ஆலயம் வலம் வருவதற்குப் பொருந்துவது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை 18 கி.மீ., சுற்றளவு உடையதாக இருக்கிறது. சிலருக்கு நீண்டநேரம் நடப்பதை விட வேகமாகச் சென்றால் களைப்பு தெரிவதில்லை. கிரிவலப்பாதையின் தூரத்தை அனுசரித்து வேகமாக நடந்து செல்வதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் சிலர் பிறருக்கு இடையூறாக தள்ளுமுள்ளு செய்கிறார்கள். இதனைத் தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment