Monday, October 1, 2012
சித்தர்கள் யார்
சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால் சித்திகளை கைவரப் - பெற்றவர்களே சித்தர்கள். சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு - இறைவன் சிவபெருமானே பதில் கூறுகிறார் - தற்சமயம் வழக்கில் உள்ள உபநிடதங்கள் 108 ஆகும் இதில் 64வது உபநிடதம் யோக சிகா உபநிடதம் என்பதாகும.; இது சிவபெருமானால் பிரம்ம தேவருக்கு உபதேசித்ததாகும்.
உலகில் உள்ள எல்லா உயிர்களுமே இன்ப துன்பங்களுக்கு உட்பட்டு வாழ்கின்றன. இறைவா இந்த ஜீவர்கள் முக்தி பெருவது எப்படி என்று பிரம்ம தேவர் கேட்கிறார்.அதற்கு இறைவன் "இதற்கு உபயாம் யாதெனில் யோகமுடன் ஞானம்" என்றார்.
மேலும் ஜீவர்கள் அனைத்தும் மனத்தையுடையது. அந்த மனத்தை அடக்குவது பிராணனின் முலம் தான் வேறு வழியில்லை (இங்கு பிராணன் என்பது வேறு) இதற்கு வழி சித்தர்கள் போதித்தும் சாதித்தும் காட்டிய வழியன்றி வேறு இல்லை என்றார்.
எனவே " சித்தர்கள்" போதித்த வழி ஒன்றே இறைவனை சென்று அடையும் மார்கம் - என்பது தெளிவாகிறது. சித்தர்கள் போதித்த இந்த கலைக்கு சாகாக்கலை என்று பெயரிட்டார்கள் மேலும் தகுதி உள்ளவர்களுக்கு போதித்து அந்த கலையை தங்களது நூல்களில் இலைமறை காயாக கூறி சென்றிருக்கிறார்கள்.
சித்தர்கள் சாகாக்கலையை போதித்து விட்டு அவர்கள் இறந்து விட்டதாக உலகம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அப்படி இல்லவே இல்லை அவர்கள் தேகம் வெட்ட வெளியாகி கரைந்து நின்ற போதும் அவர்களது ஆன்மா ஜோதி சொரூபமாய் இன்றும் நிலைத்து நிற்கிறது.
அவர்கள் ஞானத்தை தேடுபவர்களுக்கு தக்க குருமார்களை காட்டிக் கொடுத்தும் சிலருக்கு தாமே குருவாகவும் வந்து அருள்பவர்கள். சித்தர்கள் கருனை கொண்டு மற்ற ஜீவர்கள் உலகில் இருந்து உய்வு பெறும் பொருட்டு தங்கள் பாடல்களில் பரிபாசையாக இந்த கலையை எழுதிவைத்து விட்டுச் சென்றார்கள்.
சித்தர்கள் இறைவனை கண்டவர்கள் மட்டுமல்ல இறைவனோடு கலந்து
நிறைந்தவர்கள். அவர்கள் சித்தி அடைந்த விதத்தை விஞ்ஞான பூர்வமாக மெய்ஞானிகள் பலர் விளக்கம் செய்தும் இருக்கிறார்கள். அவர்கள் ஒளிமய மாகும் முன்பு பிறர்க்கு தங்களை பரிட்சித்துக் காட்டி இருக்கிறார்கள். அவர்கள் நிழல் தரையில் விழுவதில்லை அவர்கள் உருவம் புகைப்படத்தில் பதிவதில்லை. அவர்கள் பாதங்கள் நிலத்தில் தொய்வதில்லை அவர்களது தேகத்தை சிதைக்க வாள் கொண்டு வீசினால் காற்றிலே வீசியது போல் இருக்கும் ஆனால் அவர்களை தாக்காது. அவர்கள் பிறர் கண்களுக்கு புலப்படுவதில்லை. அவர்கள் விரும்பினால் தன்னை புலப்படுத்திக் கொள்வார்கள் இது தான் சித்தியின் அடையாளங்கள் ஆகும்
No comments:
Post a Comment