Wednesday, October 3, 2012
கந்தன் கருணை என்று சொல்வது ஏன்?
சூரபதுமன் முருகப் பெருமானைத் தெய்வம் என்று ஏற்காமல், “கோலவாள் எயிறு இன்னும் தோன்றாக் குதலைப் பாலகன்” என்று பேசினான்.
ஆனால் போரின் முடிவில், முருகப் பெருமான் மரமாக நின்ற சூரனை வேல் கொண்டு இரு கூறுகளாகப் பிளந்து ஒன்றை மயிலாகவும், ஒன்றைச் சேவலாகவும் மாற்றினான். மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஆக்கிக் கொண்டு விட்டான்.
அதாவது சூரபதுமனின் ஆணவத்தை மட்டும் அழித்து, சூரபதுமனைத் தன் வாகனமாக்கிக் கொண்டு, தன்னைப் பணியும் பக்தர்கள் யாவரும், மயிலும் சேவலுமாய் இருக்கும் சூரபதுமனைத் தொழும்படி அருளிவிட்டான். இதுதான் கந்தனின் தனிக் கருணை என்கிறார்கள்.
இதை விளக்கமாகச் சொன்னால்,
இராமன், இராவணனின் ஆணவத்தை அழித்து, இராவணனையும் கொன்று அழித்தார். கண்ணன் துரியோதனாதியரின் ஆணவத்தை அழித்து, துரியோதனாதியரையும் அழியச் செய்தார்.
கந்தன் மட்டுமே சூரபதுமனின் ஆணவத்தை மட்டும் அழித்து அவனை வாகனமாகவும், தனது கொடியாகவும் மாற்றிக் கொண்டார். இதுதான் கந்தன் கருணை.
No comments:
Post a Comment