இறைவனை வணங்கும்போது சிலர் கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குகிறார்கள். சிலர்
கைகளைக் குவித்து முகத்திற்கு அருகில் வைத்து வணங்குகிறார்கள். எது
சரியானது?
இரண்டுமே சரியானது தான். ஒரு விரலால் கன்னத்தில் தட்டிக் கொண்டும், ஆள்காட்டி விரலை மடக்கி வாயில் வைத்து "ச்' கொட்டியும் வணங்கும் இன்றைய நாகரிகத்தில், கைகளைக் கூப்பி வணங்குபவர்களை முதலில் நாம் வணங்கலாம். கரம் குவித்தல், சிரம் குவித்தல் என இரண்டையுமே மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுகிறார். தாங்கள் முதலாவதாகக் கூறியது சிரம் குவித்தலையும், இரண்டாவதாகக் கூறியது கரம்குவித்தலையும் சாரும். கரம் குவித்து வணங்கினால் சுவாமி சந்தோஷப்பட்டு கேட்டதைத் தருகிறார். சிரம் குவித்து வழிபட்டால் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்தி விடுவார். சிவபுராணத்தில், ""கரங்குவிப்பார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க; சிரங்குவிப்பார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க'' என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.
கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? அதன் பொருளையும் சொல்லுங்கள்.
பெற்றோர், ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் நிறைந்த வார்த்தைகள் தான் முதல்நிலை. குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளர கீழ்க்கண்ட மந்திரத்தையும் சொல்லிக் கொடுங்கள்.
""சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா''
பொருள்: எல்லா வரங்களையும் தந்தருளும் சரஸ்வதி தாயே! எனக்கு கல்வி அறிவைப் பெருகச் செய்வாயாக! உனக்கு நமஸ்காரம்.

No comments:
Post a Comment