விநாயகர், சுப்பிரமணியர், சிவன், விஷ்ணு என எல்லா தெய்வத்திற்கும் தனித்தனி
காயத்ரி (மந்திரம்) உண்டு. 24 எழுத்துக்களைக் கொண்ட மந்திரம் மூன்று பாதங்களைக்
கொண்டது. ஒவ்வொரு பாதத்திலும் எட்டுஎழுத்துக்கள் இருக்கும். முதல் பாதத்தில்
தெய்வத்தின் பெயரைச் சொல்லி, "அப்படிப்பட்டவரை அறிவோம்' என்றும், இரண்டாம்
பாதத்தில் தெய்வத்தின் வேறொரு பெயரைச் சொல்லி "அவரை தியானிப்போம்' என்றும்,
மூன்றாம் பாதத்தில் "அவர் நம்மை நல்லவழியில் தூண்டட்டும்' என்றும் வரும். எந்த
தெய்வத்திற்குரிய மந்திரத்தைத் தொடர்ந்து ஜெபிக்கிறோமோ, அந்த தெய்வத்தின்
அருட்சக்தி நம்மைக் கவசம் போல எப்போதும் பாதுகாத்து நிற்கும்.
No comments:
Post a Comment