நவராத்திரி காலத்தில் சரஸ்வதியை வழிபடும் கடைசி மூன்று நாட்களும்,
கோயில்களிலும், வீடுகளிலும் கூட்டாக வீணை இசைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு காரணம்
தெரியுமா? "நவரத்னமாலா' என்ற ஸ்தோத்திரத்தில், காளிதாசர், பராசக்தியின் கையில் வீணை
இருக்கிறது என்று பாடியுள்ளார். அவளை சிவனின் பத்தினி என்றும், அவள் சங்கீத
இனிமையில் மூழ்கி அமைதியாகவும், மென்மையான உள்ளம் பெற்றவளாக இருப்பதாகவும்
கூறுகிறாள்.
பராசக்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கும்போது, அவளை "சியாமளா' என்று அழைப்பர். இன்னிசையில் மூழ்கி ஆனந்தமாய் இருக்கும் அவளை, அதே இன்னிசையால் பக்தர்களும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்போது, அந்த இடத்தில் இருக்கும் எல்லார் மனமும் அமைதிபெறும். அதனால் தான், நவராத்திரியின் போது, கூட்டாக வீணை வாசிக்கிறார்கள். அமைதியைத் தேடி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நவராத்திரி காலத்தில் வழக்கத்தை விட அதிகமான மனஅமைதி கிடைக்கிறது.

No comments:
Post a Comment