இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு 
போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று 
பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு "துலா மாதம்' என்று பெயர். தராசு 
எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர், 
வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல்,எவன் இருக்கிறானோ அவனே நீதிமான். அதனாலேயே 
நீதிமன்றங்களில், நீதியின் சின்னமாக தராசை வைத்திருக்கிறார்கள். தீபாவளி நன்னாள் 
நீதியை எடுத்துச்சொல்கிறது. பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை 
திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனஉறுதியும் 
அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம்.
No comments:
Post a Comment