வில்வ மரம்....
லட்சுமிக்கு பிரியமான மரம் வில்வ மரம். லட்சுமி வில்வமரத் தோப்பிலே தவம்
புரிந்தாள். வாமனபுராணத்தில் வில்வமரம் ஸ்ரீலட்சுமியின் கைகளிலிருந்து உதித்ததாகக்
கூறப்பட்டுள்ளது. வில்வத்தினால் வறுமை விலகும்.
நெல்லி மரம்....
லட்சுமி மற்றும் குபேரன் இருவருக்குமே உகந்த மரமாக நெல்லி மரம் திகழ்கிறது.
நெல்லி மரத்தைப் வழிபடுபவர்களுக்கு குபேர செல்வம் உண்டாகும். நெல்லிக்கனியை ஹரிபலம்
என்றும் அழைப்பர். உங்கள் வீட்டில் நெல்லி மரம் இருந்தால், லட்சுமி உங்கள் வீட்டில்
குடியேறுவாள்.
வீட்டில் நெல்லி மரம் வைத்திருப்பவர்கள் அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து
தெய்வமாக வழிபட வேண்டும். ஏகாதசியில் விரதம் இருந்து துவாதசியில் நெல்லிக்கனியை
சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment