Monday, December 31, 2012

சாதாரண மந்திரங்களுக்கும் பீஜா மந்திரங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?



சாதாரண மந்திரங்களுக்கும் பீஜா மந்திரங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?குறிப்பிட்ட பயன்களை அடைவதற்காக மந்திரங்களைப் பிரயோகம் செய்வது சரிதானா?

பீஜம் என்பது விதை என்று சொல்லப்படும். பீஜாட்சரங்கள் என்றால், மந்திரங்களின் வித்துகள் என்று பொருள் கொள்ளுகிறோம். பீஜாட்சரங்களை மந்திரங்களுடன் இணைத்துச் சொன்னால்தான் மனதில் அலை எழுப்ப முடியும். அவை மனதைத் தூண்டும் சக்தி உடைவை.

பீஜா மந்திரங்களில்ஐம்என்பது சரீரத்தையும்,
ஹ்ரீம்என்பது மனத்தையும்,
ஓம்என்பது மூலாதாரத்தையும் ஊக்குவிக்கும்.

மேலும், இந்த பீஜாட்சரங்கள் உச்சரிப்பவரின் உட லுக்குள் சென்று பக்தி நெறிக்கு அழைத்துச் செல்லும் பக்குவத்தையும் ஏற்படுத்தும். அதனால் பீஜாட்சரங்களை மந்திரங்களுடன் இணைத்துச் சொல்வதே சிறந்த பலனைத் தரும். மந்திரங்களை உச்சாடனம் செய்யும் பொழுது, அவை எதனைக் குறித்துச் செய்யப் படுகின்றனவோ, அந்தப் பலன்களை உறுதியாக அளிக்கும்.

மந்திர உபாசனை செய்யும்போது நல்லதற்கும் தீயதற்கும் அவை உதவும். சரியான உச்சரிப்புடன் சொற்சோர்வு இல்லாமல், நல்ல நோக்கங்களுக்காக உச்சாடனம் செய்தால் நாம் எதிர்பார்க்கும் நன்மை உண்டாகும்.


உதாரண மாக, சந்தான கோபால கிருஷ்ணனுக்குரிய மந்திரத்தை பக்தியுடன் ஜெபம் செய்து ஹோமத்தில் பிரயோகம் செய்தால் நிச்சயமாகப் புத்திர பாக்கியம் உண்டாகும். வெண்ணெய்யில் மந்திர உச்சாடனம் செய்து கொடுத்தால் சந்தான பாக்கியம் ஏற்படும் என்பதில் உறுதியாக இருக்கலாம்.

No comments:

Post a Comment