Saturday, December 1, 2012

எதையும் தெளிவாகவும், உறுதியாகவும் தெரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றிக்கனியை எளிதில் பறிக்கலாம்

ஒரு பெரியவரின் வீட்டில் நன்னாரி வேர் போட்ட மண்பானைத் தண்ணீர் இருந்தது. ஒருநாள் தண்ணீர் குடித்தார். ஒரு வேர் தவறுதலாக உள்ளே போய்விட்டது. தற்செயலாக சுவரைப் பார்த்தார். ஒன்றிரண்டு பல்லிகள் ஓடிக்கொண்டிருந்தன.
"விழுங்கியது பல்லியாக இருக்குமோ! இருக்காதே! பானை மூடியிருந்ததே! ஒருவேளை மூடி விலகி உள்ளே போய் விழுந்திருக்குமோ!' எப்படியோ அவர் மனதைச் சந்தேகப்பேய் தொற்றிவிட்டது. வைத்தியரிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். அவர் இவருக்கு சந்தேகம் என்பதைப் புரிந்து கொண்டார். பேதிக்கு மருந்து கொடுத்தார். பேதியானதும், அருகே ஒரு பல்லியைப் போட்டு விட்டார். ""ஐயா! பார்த்தீர்களா! பல்லி வெளியே வந்துவிட்டது,'' என்றதும் தான், பெரியவர் பெருமூச்சு விட்டார்.
புரிந்ததா! எதையும் தெளிவாகவும், உறுதியாகவும் தெரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றிக்கனியை எளிதில் பறிக்கலாம்

No comments:

Post a Comment