நவராத்திரி ஒன்பது நாட்களும் விதிப்படி கன்னிகைகளை பூஜை செய்ய வேண்டும். இந்த
பூஜை முறைகளையும் அதன் பலன்களையும் வியாசர் விரிவாக எழுதி வைத்திருக்கிறார். அதன்
விவரம் வருமாறு:- நவராத்திரி முதல் நாளன்று 2 வயதுள்ள ஒரு பெண்ணை `குமாரி' என்ற
பெயரால் பூஜை செய்ய வேண்டும் (அந்த பெண்ணுக்கு பெற்றோர் இட்டபெயர் அதுவாக இருக்க
வேண்டும் என்பது அவசியமில்லை.
யாரோ ஒரு 2 வயது பெண்ணை குமாரியாக உருவகப்படுத்தி பூஜை செய்ய வேண்டும்)
குமாரியை பூஜை செய்தால் ஏழ்மை நீங்கும். ஆயுள் பலப்படும். செல்வம் பெருகும்.
இரண்டாம் நாளில் 3 வயதுள்ள பெண்ணை `திரிமூர்த்தி' என்ற பெயரால் பூஜை செய்ய
வேண்டும். இந்த பூஜையால் அறம், பொருள், இன்பம், நீண்ட ஆயுள் உண்டாகும். மூன்றாவது
நாளன்று 4 வயது பெண்ணை `கல்யாணி என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும்.
இதை செய்வதன் மூலம் கல்வி ஞானம் பெருகும். நான்காவது நாளன்று 5 வயது பெண்ணை
`ரோகிணி' என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். ரோகிணி பூஜை, நோய்களை போக்கி, ஆரோக்கிய
வாழ்வு தரும். ஐந்தாவது நாளன்று 6 வயதுள்ள பெண்ணை `காளிகா' என்ற பெயரால் பூஜை செய்ய
வேண்டும்.
காளிகா பூஜை பகைவர்களை வெல்லும். ஆறாவது நாளன்று 7 வயது பெண்ணை `சணடிகா' என்ற
பெயரால் பூஜை செய்ய வேண்டும். சண்டிகா பூஜை செல்வச் செழிப்பை தரும். ஏழாவது நாளன்று
8 வயது பெண்ணை `சாம்பவி' என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை அரசாங்க
பதவிகளை கொடுக்கும். பகைமையை வேறுக்கும்.
எட்டாவது நாளன்று 9 வயது பெண்ணை `துர்க்கை' என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும்.
இது கஷ்டமான காரியங்களையும் சிரமமின்றி செய்யும் சக்தியைக் கொடுக்கும். ஒன்பதாவது
நாளன்று 10 வயதுள்ள பெண்ணுக்கு `சுபத்ரா' என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும்.
இதனால் புலனடக்கம் உண்டாகும். பணமும் மனமும் உள்ளவர்கள், முதல் நாள் அன்று ஒரு
பெண், இரண்டாம் நாளன்று இருவர் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னிகையை அதிகமாக
வரவழைத்து பூஜை செய்யலாம். இது கூடுதல் பலன்களை தரும்
No comments:
Post a Comment