அஷ்டமி பூஜை, மங்கள வார பூஜை, சுக்ரவார பூஜை என பல வித பூஜைகள் துக்கம் போக்கும்
துர்க்கா பூஜைகளாக கருதப்படுகின்றன. இதில் முக்கியமானது ராகு கால அஷ்டமி பூஜை.
வளர்பிறை அஷ்டமி நாளில், ராகு காலத்தில் இந்த பூஜையை ஆரம்பித்து, ஒன்பது அல்லது
பதினாறு அஷ்டமிகள் தொடர்ந்து செய்யவேண்டும்.
ஆரம்பிக்கும் போது வளர் பிறை அஷ்டமியாக இருëக்க வேண்டும். அதன் பிறகு தேய் பிறைகளிலும் செய்யலாம். இதை ஹோம பூஜையாகவும் செய்யலாம்... அர்ச்சனையாகவும் செய்யலாம். ஏதாவது நீர் நிலையில் குளித்து விட்டு தீர்த்தம் எடுத்து வந்து பூஜை மண்டபத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
ராகு காலத்தின் நிறைவு நேரத்தில் பூஜையை முடித்து, தீர்த்தத்தை வீடு முழுவதும் வீட்டில் இருக்கும் எல்லா உறவினர்கள் மீதும் தெளிக்க வேண்டும். அவல், நெல்பொரி, சத்து மாவு, தேன், தேங்காய், வெற்றிலை, பாக்கு, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், மொச்சைச்சுண்டல் போன்ற வற்றை நிவேதனமாக வைத்துப்படைக்க வேண்டும்.
ராகு கால மங்கள வார பூஜையை செவ்வாய்க்கிழமைகளில் வரும் ராகுகாலத்தில் செய்ய வேண்டும். திருமணத் தடங்கலை தீர்த்து வைப்பதுடன் வறுமையைத் தீர்க்கும் பூஜையாகவும் இது விளங்குகிறது. செவ்வாய் திசையில் ராகு புக்தி நடப்பவர்கள்,ராகு திசை நடக்கும் ராசிக்காரர்கள்.
ராகு எட்டாம் இடத்தில் இருப்பதால், கஷ்டத்தில் தவிப்பவர்கள் ஆகியோர் இந்த பூஜையைச் செய்தால் நலம் பெறலாம். அடுத்தது சுக்ரவார (செவ்வாய்க்கிழமை) ராகு பூஜை, நிறைய செல்வத்தையும் பெயரையும் புகழையும் தரக்கூடிய பூஜை.கணவன்-மனைவிடையே பூசல்கள் இருந்தால், அதைப் போக்கி ஒற்றுமையை ஏற்படுத்தும்.
நினைத்த காரியத்தில் எதிர்ப்புகளைத் தகர்த்து வெற்றி தேடித்தரும்.குழந்தைப் பேறில் குறை இருந்தால், அதை நிவர்த்தி செய்து கொள்ளவும் இந்த பூஜை உதவும். சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால், திருமணம் தடைப்பட்டு இருப்பவர்களுக்கும் இந்த பூஜை நல்ல பலனை தரும்.
பொதுவாக காரிய லாபங்களுடன் பணலாபத்தையும் தரக்கூடிய நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை அபரிமிதமான பலன் தரக்கூடியது. தொடர்ச்சியாக பதினாறு வாரங்கள் இந்த பூஜையைச் செய்ய வேண்டும்

No comments:
Post a Comment