Friday, January 18, 2013

போகியன்று செய்ய வேண்டிய தானம்

போகி பண்டிகை அன்று தனூர் மாத பூஜை சம்பூர்ணம் செய்ய வேண்டும். அன்று ஒரு நாளாவது அவசியமாக வெண் பொங்கல், பாயாசம், தோசை, வெண்ணை மற்றும் முதலில் கூறியவற்றில் சாத்தியமானவைகளை மடியாக செய்து பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். "ஹே பகவானே இந்த வருட தனூர் மாதம் பூராவும் எனக்கு சாத்யமாக வகையில் உன்னை பூஜித்து கடைசி நாளான இன்று தனூர் மாத பூஜையை உனக்கு அர்பணிக்கிறேன்.

என் வாழ்நாள் பூராவும் உன்னை இத்தகைய சில நாட்களாவது பூஜை செய்ய எனக்கு அனுக்ரஹம் செய்'' என்று சொல்லி வேண்டிக் கொண்டு நீருடன் அட்சதை விட்டு கிருஷ்ணார்பண மஸ்து செய்ய வேண்டும். போகி பண்டிகை அன்று மாலை தானம் கொடுப்பார்கள்.


மஞ்சள், குங்குமம், சந்தன பவுடர், கண் மை, வளையல், வாசனை தைலம், ஜவ்வாது, அரகஜா பவுடர், புகுனு, நல்ல கண்ணாடி, சீப்பு, வளையல் மற்றும் தற்காலத்திய அழகு சாதனங்களான ஸ்னோ, செண்ட், பவுடர், பொட்டு அட்டைகள், க்ïடெக்ஸ், ஹேர் க்ளிப் போன்றவைகளையும் நல்ல வாசனை புஷ்பம், ஊதுபத்தியையும் ஒரு தட்டில் ஜோடித்து ஸ்வாமி முன் வைக்க வேண்டும்.


உடன் பால்கோவா அல்லது ஏதாவது இனிப்பு இரண்டு, நன்றாக காய்ச்சிய பசும்பால் இரண்டு டம்ளர், வாசனை சேர்த்தது அல்லது பாலில் கலக்கலாம். சுண்ணாம்பு தடவிய துளிர் வெற்றிலை எட்டுடன், வாசனை பாக்கு அல்லது இரண்டு பீடா, முடிந்த பழ வகைகள் எல்லாம் ஜோடித்து சாமி முன் வைக்க வேண்டும்.


இதைத் தவிர இருவருக்குக் கொடுக்கும் மாதிரி வெற்றிலை, பாக்கு ஜோடித்து, இரண்டிலும் தனித்தனியாக தேங்காயும், தட்சணையும் வைக்க வேண்டும். சுவாமிக்கு விளக்கேற்றி மேற்கூறியவைகளை எல்லாம் சுவாமி முன் வைத்து, புஷ்பம் அட்சதை போட்டு நமஸ்கரித்து, "ஸ்ரீ மஹா லக்ஷëமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணனுக்கு ப்ரியமாகட்டும்'' என்று தம்பதியினருக்கு விள்யமாக தட்டுடன் கொடுக்க வேண்டும்.


இது தானம் அல்ல விள்யம் தான் ஆகையால் துளசி தளம் தேவையில்லை. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. இருவரில் ஒருவர் மட்டும் வந்து பெற்றுக் கொண்டாலும் தவறு இல்லை. அனுசந்தானத்துடன் கொடுப்பதினால், ரவிக்கை மட்டும் கொடுப்பது கூடாது.


தம்பதியினராக வந்து பெற்றுக் கொண்டால் ஆடவருக்கு குங்குமம், சந்தனம் கொடுத்து, சுமங்கலி கால் அலம்பி மஞ்சள் பூசி நலங்கு மஞ்சள் இட்டு, குங்குமமும், புஷ்பமும் கொடுத்து மேற்படி சாமான்களை தட்டுடன் கொடுக்க வேண்டும். இந்த மாதிரியான போக விள்யம், புதிதாக மணமான தம்பதிகள் அல்லது நடுத்தர வயதுடைய தம்பதியினர்களுக்கு கொடுப்பது நல்லது.


அதற்காக வயதான தம்பதியினர்களுக்கு கொடுக்கக்கூடாது என்பதல்ல. மேற்படி சாமான்களை உபயோகிப்பவர்களாக இருக்க வேண்டும். வசதியுள்ளவர்கள் புடவை, வேஷ்டி கூட வாங்கிக் கொடுக்கலாம். பால் டம்ளருடன் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment