Friday, January 4, 2013

குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்?

* குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்?
நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். "கோடி' என்றால் "அளவு கடந்த' என்றும் பொருள் உண்டு.


* வயோதிகத்தினாலும், உடல் நலக்குறைவினாலும் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை வாசல் தெளித்து மாக்கோலம் இடுகிறேன். இது சரியா இல்லை தினமும் கோலம் இடத்தான் வேண்டுமா?
.

உடல்நலக்குறைவு, வயோதி கம் என்று சொல்லி விட்டால் அப்பீலே கிடையாது. உதவிக்கு ஆட்களும் இல்லை என்னும் போது, வேறு என்ன வழி? எனவே, நீங்கள் இதற்கெல்லாம் கவலைப்படவேண்டாம். இத்தனை நாட்கள் செய்து வந்தது உங்களைக் காப்பாற்றும். இனி இயன்றபோது செய்து வாருங்கள். இத்தனை வயதிலும் தெய்வ காரியங்களைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களே! அதுவே மகிழ்ச்சியைத் தருகிறது.

No comments:

Post a Comment